Home /News /sports /

IPL 2022 DC vs RR - ஐபிஎல் இன்றைய போட்டி - பட்லரை முடக்கினால் டெல்லிக்கு வெற்றி- இன்று ராஜஸ்தானுடன் மோதல்

IPL 2022 DC vs RR - ஐபிஎல் இன்றைய போட்டி - பட்லரை முடக்கினால் டெல்லிக்கு வெற்றி- இன்று ராஜஸ்தானுடன் மோதல்

ஆரஞ்சு தொப்பி ஜாஸ் பட்லர்

ஆரஞ்சு தொப்பி ஜாஸ் பட்லர்

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நடப்பாண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடக்குமா? நடக்காதா? என்ற அச்சத்தை விதைத்த டெல்லி அணி இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது. இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்கும் இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

மேலும் படிக்கவும் ...
    கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நடப்பாண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடக்குமா? நடக்காதா? என்ற அச்சத்தை விதைத்த டெல்லி அணி இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது. இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்கும் இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

    டெல்லி அணியை பொறுத்தவரை ஓபனர்களான பிரித்வி ஷா மற்றும் வார்னர் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். தொடர்ந்து நான்கு போட்டிகள் அரைசதம் விளாசி தரமான அடித்தளம் அமைத்துக்கொடுக்கின்றனர். இவர்களுக்கு இன்று சவால் காத்திருக்கிறது. இவர்களின் அச்சுறுத்தலே ட்ரண்ட் போல்ட் தான். இவரை சமாளித்தாலே இன்றும் இவர்களின் அரைசதத்தை கொண்டாடலாம். அன்று ரபாடாவையே கிழித்து தொங்க விட்டார் வார்னர், இன்று போல்ட்டை அடிப்பாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

    அத்துடன் வார்னரை அவுட் செய்வதில் வல்லவரான அஸ்வினும் எதிரணியில் இருப்பதால் டெல்லி அணியின் ஓபனிங்கை அசைத்துப்பார்க்க ராஜஸ்தான் பந்துவீச்சார்கள் தயாராகவுள்ளனர்.

    கேப்டன் ரிஷப் பந்தின் அதிரடிக்காக காத்திருந்து காத்திருந்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தது தான் மிச்சம். இன்றைய போட்டியிலாவது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களும் சாதாரண ஆட்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ராஜஸ்தான் ஓபனர் பட்லரை பதம் பார்க்க காத்திருக்கிறார் கலீல் அகமது. குல்தீப் யாதவ் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.

    ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இல்லாத குறை தெரியாமல் அக்‌ஷர் படேல் அசத்தி வருவது டெல்லி அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

    ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை பட்லர் அசுர பலத்தில் இருக்கிறார். இரண்டு சதத்தை பதிவுசெய்துவிட்டு எவராலும் நெருங்க முடியாத ரன் எண்ணிக்கையை கொண்டு ஆரஞ்ச் கேப்பை தன்வசப்படுத்தியுள்ளார். இவரை ஆரம்பத்திலியே வெளியேற்றவில்லை என்றால் எதிரணிக்கு திண்டாட்டமே.

    மற்றொரு ஓபனர் படிக்கல்லும் ஃபார்மில் இருக்கிறார். இருப்பினும் எதிரணி பந்துவீச்சார் ஷர்த்துல் தாக்கூரிடம் மூன்று முறை ஆட்டமிழந்துள்ளதால் சுதாரித்து விளையாடவேண்டியது அவசியமாகிறது.

    பேட்டிங்கில் பட்லர் என்றால் பந்துவீச்சில் சஹல் இருவரும் ஒரே அணியில் இருப்பது எதிரணியை அச்சுறுத்துகிறது. பர்ப்பிள் கேப் நாயகன் சஹல் பந்துவீச்சை சமாளிப்பது சற்று கடினமே.

    ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது ஆனால் கேப்டன் சஞ்சு சாம்சன் ஒரே ஒரு போட்டியில் மட்டும் டாஸில் வென்றுள்ளார். இருப்பினும் 5 போட்டிகளில் முதலில் பேட் செய்துள்ளார் என்பது அதிஷ்டமே.

    வான்கடே அதிக ரன் குவிக்கும் மைதானமாக பார்க்கப்படுகிறது. முதலில் பேட்டிங் செய்பவர்களுக்கு சாதகமாக அமைவதால் இன்று டாஸில் வெற்றி பெறும் கேப்டன் பேட்டிங் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகளும் இதற்கு முன்பு இருபத்தி நான்கு ஆட்டங்ககில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் இரு அணிகளும் 12 போட்டிகளில் வெற்றியை வசப்படுத்தி சமபலம் வகிக்கின்றனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Delhi Capitals, IPL 2022, Rajasthan Royals

    அடுத்த செய்தி