ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IPL 2022: சாதனை படைக்க காத்திருக்கும் கே.எல்.ராகுல்..வாழ்வா சாவா போராட்டத்தில் கொல்கத்தா அணி: இன்று 2 லீக் ஆட்டங்கள்

IPL 2022: சாதனை படைக்க காத்திருக்கும் கே.எல்.ராகுல்..வாழ்வா சாவா போராட்டத்தில் கொல்கத்தா அணி: இன்று 2 லீக் ஆட்டங்கள்

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

இன்னும் 49 ரன்கள் அடித்தால் ஐ.பி.எல். தொடர்களில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக 500 ரன்களை கடந்தவர் என்ற சாதனையை கே.எல்.ராகுல். படைக்கக்கூடும். இந்த ஆட்டத்திலேயே இச்சாதனையை கே.எல்.ராகுல் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய நாளில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. பிற்பகலில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகளும்  மாலையில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ- கொல்கத்தா அணிகளும் மோதுகின்றன.

நடப்பாண்டி ஐ.பி எல். கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 50 லீக் போட்டிகளை கடந்துள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் 10 போட்டிகளுக்கு மேல் விளையாடிவிட்டன.

வார இறுதி நாட்களில் சுவாரஸ்யத்தை கூட்ட இரண்டு லீக் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. அந்தவகையில் மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடேவில் நடைபெறும் 52 வது லீக் ஆட்டத்தில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் - சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ராஜஸ்தான் அணியை பொருத்தவரை 10 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றிகளை பதிவு செய்து பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இனி விளையாடவுள்ள நான்கு போட்டிகளில் இரண்டில் வென்றாலே பிளே ஆஃப் உறுதி என்பதால் எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல் இன்றைய போட்டியில் களம் காணவுள்ளனர்.

இதை படிக்க: தோனி, ரசல், கெய்ல் போல் நான் இல்லை.. ஆனால் - ஒதுக்கப்பட்ட விக்கெட் கிப்பர் தன்னம்பிக்கை

அத்துடன் பட்லர் ஆரஞ்சு கேப்பையும், சஹல் பர்ப்பிள் கேப்பையும் தன் வசம் வைத்திருப்பது மற்ற வீரர்களுக்கும் நம்பிக்கை அளிக்கிறது. ஓபனர் பட்லர் அசுர பலத்தில் இருப்பது எதிரணிக்கு திண்டாட்டமே. படிக்கல், சஞ்சு, ஹெட்மயர் என அனைவரும் ஃபார்மில் இருப்பது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

பவர்பிளேயில் நன்றாக பந்துவீசும் போல்ட் டெத் ஓவரில் ரன்களை வாரிவழங்குகிறார். இதனால் வெற்றி கடைசி நேரத்தில் பறிபோகிறது. எனவே இன்று நிதானத்து ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

பஞ்சாப் அணியை பொருத்தவரை 10 போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. இன்னும் மூன்று வெற்றி தேவைப்படுவதால் இன்று கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் களம் காண்கிறது. கேப்டன் மயங் சஹல் பந்துவீச்சில் அடித்து ஆடவேண்டும் என நினைத்து அதிக முறை ஆட்டமிழந்துள்ளார் இன்றும் அது நடக்காமல் பார்த்துக்கொண்டால் மட்டுமே வெற்றி சாத்தியம். தவன், லிவிங்ஸ்டன் இருவரும் ஃபார்மில் இருப்பது சற்று ஆறுதல் அளித்தாலும் பேர்ஸ்டோ மற்றும் ராஜபக்சே சொதப்புவது அணியை பாதிக்கிறது.

மேலும் படிக்க: சீனாவில் நடைபெற இருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் ஒத்திவைப்பு

இரு அணிகளும் இதற்கு முன் 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில் 13 ஆட்டங்களில் ராஜஸ்தான் அணியும் 10 ஆட்டங்களில் பஞ்சாப் அணியும் வெற்றி கண்டுள்ளன.

இதனை தொடர்ந்து மாலை 7.30 மணிக்கு புனே எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் 53 வது லீக் ஆட்டத்தில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட் அணியும் - ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

லக்னோ அணியை பொருத்தவரை 10 போட்டிகளில் விளையாடி ஏழு வெற்றி பெற்று ஏறக்குறைய பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வென்றாலே பிளே ஆஃப் உறுதி என்பதால் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் முடிக்க வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட அவேஷ் கான் இந்த போட்டியில் மீண்டும் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.

ஓபனர் டி காக் - ராகுல் பார்ட்னர்ஷிப்பை உடைப்பது எதிரணிக்கு திண்டாட்டமாகவுள்ளது. அத்துடன் இன்னும் 49 ரன்கள் அடித்தால் ஐ.பி.எல். தொடர்களில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக 500 ரன்களை கடந்தவர் என்ற சாதனையை கே.எல்.ராகுல். படைக்கக்கூடும். இந்த ஆட்டத்திலேயே இச்சாதனையை கே.எல்.ராகுல் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற வீரர்களும் மிடில் ஆர்டரில் கவனம் செலுத்தினால் இமால ஸ்கோர் நிச்சயம். கொல்கத்தா அணியை பொருத்தவரை 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளதால் இனி வரக்கூடிய அனைத்து போட்டிகளிலும் வாழ்வா சாவா ஆட்டங்களாகவே அமையவுள்ளது.

ஓபனிங் இணையை ஐந்து முறை மாற்றியும் எந்த பலனும் இருப்பதாக தெரியவில்லை. தமிழக வீரர் பாபா இந்திரஜித் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறுகிறார்.

ரிங்கு சிங்கின் அதிரடியால் கடந்த போட்டியில் வென்று அதே உற்சாகத்தோடு இன்றும் களம்காணவுள்ளனர். டிகாக் ரஸல் பந்துவீச்சில் அதிகமுறை விக்கெட்டை பறிகொடுத்துள்ளதால் பவர்பிளேயில் ரஸலின் பந்துவீச்சை பார்க்கலாம்.

First published:

Tags: IPL 2022, Kolkata Knight Riders, Lucknow Super Giants, Punjab Kings, Rajasthan Royals