Home /News /sports /

IPL 2022 GT vs RCB - இன்று 2 போட்டிகள்- கோலி ட்ராப்? குஜராத்தை கட்டுப்படுத்துமா பெங்களூரு?- முதல் வெற்றி பெறுமா மும்பை?

IPL 2022 GT vs RCB - இன்று 2 போட்டிகள்- கோலி ட்ராப்? குஜராத்தை கட்டுப்படுத்துமா பெங்களூரு?- முதல் வெற்றி பெறுமா மும்பை?

ஆர்சிபி-குஜராத் இன்று 3.30 மணி ஆட்டத்தில் மோதல்

ஆர்சிபி-குஜராத் இன்று 3.30 மணி ஆட்டத்தில் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் 2022ம் ஆண்டு பதிப்பில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. மதியம் 3.30 மணி போட்டியில் நம்பர் 1 குஜராத் டைட்டன்ஸ் அணியை பழைய மோசமான பார்முக்கு திரும்பிய ஆர்சிபி அணி சந்திக்கிறது.

  ஐபிஎல் கிரிக்கெட் 2022ம் ஆண்டு பதிப்பில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. மதியம் 3.30 மணி போட்டியில் நம்பர் 1 குஜராத் டைட்டன்ஸ் அணியை பழைய மோசமான பார்முக்கு திரும்பிய ஆர்சிபி அணி சந்திக்கிறது.

  ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என்று மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அடுத்த சுற்றை எட்ட குறைந்தது 8 வெற்றிகள் தேவைப்படும்.

  மும்பை பிராபோர்னில் இன்று (சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கும் நடக்கும் 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

  நடப்பு தொடரில் வெற்றிகரமான அணியாக வலம் வரும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 7 வெற்றி, ஒரு தோல்வி என்று 14 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் பயணிக்கிறது.

  பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருசேர மிரட்டினால் மட்டுமே பலம் வாய்ந்த குஜராத்தின் வீறுநடைக்கு பெங்களூரு அணியால் முட்டுக்கட்டை போட முடியும். ஐ.பி.எல். போட்டியில் இவ்விரு அணிகளும்நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

  மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

  மும்பை -ராஜஸ்தான் அணிகள் மோதல் - 7:30 ஆட்டம்:

  ஐ.பி.எல். கிரிக்கெட் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 7:30 மணிக்கு மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது.

  நடப்பு தொடரில் ஆரஞ்சு நிற தொப்பியை ஜோஸ் பட்லர்- 3 சதம் உள்பட 499 ரன்களுடன் தக்க வைக்க ஊதா நிற தொப்பியை செஹல்- 18 விக்கெட்டுகளுடன் தக்க வைத்துள்லார், இரண்டையும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களே தக்க வைத்துள்ளனர்.  சூப்பர் பார்மில் உள்ள ராஜஸ்தான் 8 ஆட்டங்களில் விளையாடி 6-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும்வரிசையாக வெற்றிக்கனியைபறித்துள்ளது. ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், ரியான் பராக், கேப்டன் சாம்சன் பேட்டிங்கிலும், ஆர்.அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சிலும் அசத்துவதால் இன்றைய ஆட்டத்திலும் அவர்களின் கை ஓங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மும்பை இன்றைய தேதீல் இருக்கும் நிலையில் ராஜஸ்தானை வீழ்த்த முடியாது என்றே தோன்றுகிறது, ஏதாவது விட்டுக்கொடுப்புகள் நடந்தால்தான் உண்டு.

  சீசனில் இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத ஒரே அணி மும்பை தான். 5 முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை ஆடியுள்ள 8 ஆட்டங்களிலும் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்து விட்டது.

  கேப்டன் ரோகித் சர்மா (8 ஆட்டத்தில் 153 ரன்), இஷான் கிஷன் (199 ரன்) ஆகியோர் சரியான தொடக்கம் அமைத்து தராததும், பந்து வீச்சின் பலவீனமும் மும்பையை வீழ்ச்சி பாதைக்கு தள்ளிவிட்டுள்ளது. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் மும்பை அணியை மாற்ற வேண்டும் இல்லையேல் இன்றும் தலைகுனிவுதான்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Gujarat Titans, IPL 2022, Mumbai Indians, Rajasthan Royals, RCB

  அடுத்த செய்தி