Home /News /sports /

IPL 2022- பெருந்தலைகள் தோனி, ரோஹித், கோலி வழி விட வேண்டிய நேரம் இதுதான்!

IPL 2022- பெருந்தலைகள் தோனி, ரோஹித், கோலி வழி விட வேண்டிய நேரம் இதுதான்!

தோனி-ரோஹித்- கோலி

தோனி-ரோஹித்- கோலி

இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார்களான தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி ஒதுங்கிக் கொண்டு இளம் வீரர்களுக்கு வழிவிடும் நேரம் வந்து விட்டது என்றே தோன்றுகிறது.

  இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார்களான தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி ஒதுங்கிக் கொண்டு இளம் வீரர்களுக்கு வழிவிடும் நேரம் வந்து விட்டது என்றே தோன்றுகிறது. விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு 41 மற்றும் 48க்குப் பிறகு விட்டேத்தியாக ஆடி ஆட்டமிழக்கிறார், ஆர்வமில்லாமல் ஆடுவது போல் தெரிகிறது. தோனியைப் பற்றி கூற ஒன்றுமில்லை அவர் சாதித்து விட்டார், மேலும் இப்போது அவருக்கு பேட்டிங் மறந்து விட்டது ஒதுங்க வேண்டியதுதான், ரோஹித் சர்மாவின் ரிஃபிளெக்சஸ் போய் விட்டது அவரும் போக வேண்டியதுதான்.

  உமேஷ் யாதவ் அன்று கோலியை தட்டிப்போட்டு எடுத்தார், அன்று துஷ்மந்த சமீரா அதே போல் தட்டிப்போட்டு எடுத்தார் கோலியை. அலட்சியமாக ரன் அவுட் ஆகிறார். அவர் மனம் கொந்தளிப்பில் இருக்கும் போது அவரால் ஆட முடியாது என்பதுதான் உண்மை எனவே ரவி சாஸ்திரி கூறுவது போல் அவர் கொஞ்ச நாள் கிரிக்கெட் பக்கம் தலை வைத்துப் படுக்காமல் பயிற்சி செய்து விட்டு மீண்டும் வருவதுதான் நல்லது.

  ஐபிஎல் தொடரில் அன்று அடித்த கோல்டன் டக்குடன் 7வது டக்கை அடித்துள்ளார் கோலி. ஐபிஎல் 2022 தொடரில் பவர் ப்ளேக்குள்ளேயே கோலி 3ம் முறையாக வெளியேற்றப்பட்டிருக்கிறார். கோலி, ஏழு இன்னிங்ஸ்களில் 19.83 சராசரியாக 117 ரன்கள் எடுத்தார், இதில் மட்டும் இல்லை. கோலி குறைந்த பட்சம் கேப்டன் பொறுப்பில் இருந்து விடுபட்டு, தனது அணிக்கு சிறந்த உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக வழிகாட்டுவதைத் தவிர தனது பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

  சரி, கோலிதான் இப்படி என்றால் இந்திய கேப்டனாக 3 வடிவங்களுக்கும் பதவி உயர்வு பெற்ற ரோஹித் சர்மா அந்தோ பரிதாபமாக நிற்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் 114 ரன்களையே எடுத்து வழிந்து கொண்டிருக்கிறார். கோலி தோல்வியினால் ஆர்சிபி தோல்வியடையவில்லை, ஆனால் ரோஹித் சர்மா சொதப்பலினால் மும்பை இந்தியன்ஸ் இன்று 6க்கு 6 தோல்வி என்று படுமோசமாக உள்ளது. புல்ஷாட்டில் அவுட் ஆகிறார், எப்போதெல்லாம் ரன் ரேட்டை உயர்த்த வேண்டும் என்று ரோஹித் ஷாட் ஆடும்போதெல்லாம் அவுட் ஆகி விடுகிறார்.

  ரோஹித் சர்மா இந்த மனநிலையில் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தினால் அது சரிப்பட்டு வராது என்றே தோன்றுகிறது. இன்னொரு சூப்பர் ஸ்டார் தோனி, இவர் இப்போது வணிக நலன்களுக்கான சூப்பர் ஸ்டார்தானே தவிர, கார்ப்பரேட் சூப்பர் ஸ்டார் தானே தவிர கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்திலிருந்து வெகு தொலைவுக்குச் சென்று விட்டார்.

  மேலும் தன்னைத் தவிர விக்கெட் கீப்பிங்கில் யாரும் வந்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக மற்ற வீரர்களை வரவிடாமல் தன் வணிக மதிப்பை ஏற்றிக் கொண்டவர். வெறும் ஐபிஎல் தொடரில் மட்டுமே ஆடி இவர் இனி பார்முக்கு வருவதெல்லாம் கனவுதான். சிஎஸ்கேவுக்கு தோனியின் பிராண்ட் வேல்யு மிகப்பெரியது. இதே பிராண்ட் வேல்யூவில்தான் கோலி, ரோஹித் சர்மாக்களும் ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். சிஎஸ்கேவை பொறுத்தவரை தோனி ஒரு பிராண்ட் வேல்யூதான் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர் சிஎஸ்கேவின் கிரிக்கெட் சுமைதான்.

  ஐசிசி டி20 உலகக்கோப்பை வரும் நிலையில் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையில் அல்லது ரிஷப் பண்ட் தலைமையில் ஒரு புதிய அணியை ரோஹித், கோலி இல்லாத ஒரு அணியை உருவாக்கி அனுப்பி வைப்பதுதான் நல்லது, இவர்கள் காலம் காலாவதியாகிவிட்டது. தோனிக்காவது வயதாகி விட்டது, ஆனால் இவர்களுக்கு இன்னும் 2-3 வருட கிரிக்கெட் பாக்கி உள்ளது, ஆனால் அதற்குள்ளேயே போவோர் வருவோரிடமெல்லாம் இவர்கள் ஆட்டமிழந்து வருகின்றனர். இவர்கள் ஆடி இளம் வீரர்கள் உட்கார்ந்திருந்தால் அது நிச்சயம் பெரிய சலசலப்பையும் அவநம்பிக்கையையுமே உருவாக்கும், இத்தகைய சூழ்நிலைகளை உருவாக்க வேண்டாம் என்றால் அவர்கள் ஒன்று நன்றாக ஆட வேண்டும் ,இல்லையேல் ஒதுங்கி மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: CSK, IPL 2022, MS Dhoni, Mumbai Indians, RCB, Rohit sharma, Virat Kohli

  அடுத்த செய்தி