ஆடம் மில்னே விலகல்- சிஎஸ்கே அணியில் இன்னொரு மலிங்கா
ஆடம் மில்னே விலகல்- சிஎஸ்கே அணியில் இன்னொரு மலிங்கா
சிஎஸ்கே அணியில் இன்னொரு மலிங்கா என்று அழைக்கப்படும் ம்தீசா பதிரனா
தோனி கேப்டனாக இருந்த போது தொட்டதெல்லாம் துலங்கும், ஆனால் ஜடேஜாவுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. இல்லையெனில் தோல்வி மேல் தோல்வியுடன் முக்கிய வீரரான நியூசிலாந்தின் அதிவேக பவுலர் ஆடம் மில்னேவும் காயத்தினால் விலகியிருப்பரா. ஆம்! ஆடம் மில்னே காயம் காரணமாக சீசனிலிருந்து விலகியுள்ளார்.
தோனி கேப்டனாக இருந்த போது தொட்டதெல்லாம் துலங்கும், ஆனால் ஜடேஜாவுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. இல்லையெனில் தோல்வி மேல் தோல்வியுடன் முக்கிய வீரரான நியூசிலாந்தின் அதிவேக பவுலர் ஆடம் மில்னேவும் காயத்தினால் விலகியிருப்பரா. ஆம்! ஆடம் மில்னே காயம் காரணமாக சீசனிலிருந்து விலகியுள்ளார்.
ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் , போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதுகின்றன .
இந்நிலையில் சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆடம் மில்னே காயம் காரணமாக இந்த சீசனில் இனி வரும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் .ஐபிஎல் ஏலத்தில் ரூ 1.90 கோடிக்கு சென்னை அணி இவரை ஏலத்தில் எடுத்தது .
இவருக்கு மாற்று வீரராக 19 வயதுடையோருக்கான உலக கோப்பையில் விளையாடிய இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மதீசா பதிரனா சென்னை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
NEWS - Matheesha Pathirana joins Chennai Super Kings as a replacement for Adam Milne.
கண்டியைச் சேர்ந்த 19 வயதான மதீசா பதிரனா அப்படியே லசித் மலிங்காவின் அச்சில் வார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர். இந்த ஆண்டு U19 உலகக் கோப்பையில் அனைவரையும் கவர்ந்தார் இந்த மலிங்கா வாரிசு மதீசா. “டாடா இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 க்கு நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவுக்குப் பதிலாக மதீஷா பதிரனாவை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஒப்பந்தம் செய்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான சிஎஸ்கேயின் முதல் போட்டியில் மில்னே தொடை காயத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறினார் ஆடம் மில்னே” என்று பிசிசிஐ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இன்று மும்பை அணிக்கு எதிராக இவரை பதிரனாவை இறக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் சிஎஸ்கேவுக்கு பதிரனாவின் வருகை ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும் என்றே கூற வேண்டும்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.