ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘இவன் த்ரோ அடிக்கிறான்’- கேலி பேச்சிலிருந்து மீண்டு வந்த வேதனையைப் பகிர்ந்த டி.நடராஜன்

‘இவன் த்ரோ அடிக்கிறான்’- கேலி பேச்சிலிருந்து மீண்டு வந்த வேதனையைப் பகிர்ந்த டி.நடராஜன்

டி.நடராஜன்.

டி.நடராஜன்.

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் பிறந்து டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஆடி பிறகு சென்னை வந்து லீகுகளில் ஆடி ஐபிஎல்-ல் இடம்பிடித்து பிறகு இந்திய அணியில் நெட் பவுலராகி இந்திய அணியில் 3 வடிவங்களிலும் இடம்பிடித்த டி.நடராஜன், அதாவது யார்க்கர் நடராஜன் என்று அழைக்கப்படும் தமிழக அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் தான் வளர்ந்து வந்த சூழல், கிரிக்கெட் உலகின் கேலி கிண்டல் என்று தன் ஏற்றப்பாதையை ‘தி கிரிக்கேட் மந்த்லி’ இதழுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் பிறந்து டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஆடி பிறகு சென்னை வந்து லீகுகளில் ஆடி ஐபிஎல்-ல் இடம்பிடித்து பிறகு இந்திய அணியில் நெட் பவுலராகி இந்திய அணியில் 3 வடிவங்களிலும் இடம்பிடித்த டி.நடராஜன், அதாவது யார்க்கர் நடராஜன் என்று அழைக்கப்படும் தமிழக அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் தான் வளர்ந்து வந்த சூழல், கிரிக்கெட் உலகின் கேலி கிண்டல் என்று தன் ஏற்றப்பாதையை ‘தி கிரிக்கேட் மந்த்லி’ இதழுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

  சேலம் பல்கலைக் கழகத்திற்கும் சேலம் மாவட்ட அணிக்கும் ஆடியதை நெகிழ்ச்சியுடன் நினைவு கூரும் டி.நடராஜன், பிறகு சென்னைக்கு வந்து பி.எஸ்.என்.எல். 4வது டிவிஷன் அணியில் லீகில் ஆடினார். அதிலிருந்து தன்னை மெல்ல வளர்த்தெடுத்துக் கொண்டு கெம்ப்ளாஸ்ட் மெட்ராஸ், விஜய் கிரிக்கெட் கிளப் ஆகியவற்றுக்கு சென்னையின் ஆக்ரோஷமான முதல் டிவிஷன் லீகில் ஆடினார். 2 ஆண்டுகள் ஆடிய பிறகு தமிழ்நாடு அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். 2014-15-ல் பெங்கால் அணிக்கு எதிராக அறிமுகமானார் நடராஜன்.

  ஆனால் அப்போதுதான் அவர் ‘பவுலிங் ஆக்‌ஷன் சந்தேகமாக உள்ளது’ என்ற சர்ச்சை கிளப்பப்பட்டது. அதன் பிறகு அரும்பாடு பட்டு பயிற்சி செய்து மீண்டும் தன் ஆக்‌ஷனை மாற்றியமைத்துக் கொண்டார்.

  இந்தக் காலக்கட்டம் குறித்து கிரிக்கெட் மந்த்லி பேட்டியில் நடராஜன் கூறும்போது, “நான் தேர்வு ஆன போதும் எங்கள் மாவட்டங்களில் சிலர் என்னை அழைக்கவில்லை, என்னை வாழ்த்தவில்லை. ஆனால் என் ஆக்‌ஷன் மீது சந்தேகம் வந்தவுடன் இதே நபர்கள் ’என்ன இப்படி ஆயிடுச்சு’ என்று ஒரு மாதிரி கிண்டல் தொனியில் கேட்டனர்.

  நான் என் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்று நினைத்த போதுதான் சுனில் சுப்ரமணியம் சார் (முன்னாள் தமிழ்நாடு அணி கேப்டன்), தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் என் பந்து வீச்சு முறையை சரிப்படுத்த பெரிய உதவி புரிந்தார். பரத் ரெட்டி (இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர்) எனக்கு முழு ஆதரவு அளித்தார்.

  நான் அப்போது சென்னையில் கெம்ப்ளாஸ்ட் அணிக்கு ஆடினேன். சென்னையில் ஓராண்டு இருந்தேன், அப்போதெல்லாம் ‘இவன் த்ரோ அடிக்கிறான்’ என்று என் பவுலிங் ஆக்‌ஷனை கேலி பேசினர். இது என்னை மிகவும் காயப்படுத்தியது ஆனால் என் அண்ணா இதிலிருந்து என்னை மீட்டார்.

  ஆக்‌ஷனை சரி செய்வது என்பது சாதாரண விஷயமல்ல. 1-2 மாதத்திற்கு செய்த தவறையே செய்வோம். மன ரீதியாக சோர்வடைந்தேன். மீண்டும் மீண்டும் சரியாக வீசிக்கொண்டே இருக்க வேண்டும். ” என்றார். முதல் முதல் தர கிரிக்கெட் போட்டியில் ஆடி 21 மாதங்களுக்குப் பிறகு 2வது முதல் தரப்போட்டியில் ஆடினார் நடராஜன் என்ரு அந்த கிரிக்கெட் மந்த்லி பேட்டியில் கூறப்பட்டுள்ளது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Cricketer natarajan, IPL 2022, SRH, T natarajan