முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2022 PBKS vs DC - யாருக்கு வெற்றி? : ப்ளே ஆஃப் வாய்ப்பு நூலிழையில் தொங்கும் பஞ்சாப்-டெல்லி மோதல்

IPL 2022 PBKS vs DC - யாருக்கு வெற்றி? : ப்ளே ஆஃப் வாய்ப்பு நூலிழையில் தொங்கும் பஞ்சாப்-டெல்லி மோதல்

ரிஷப் பண்ட்- அகர்வால்

ரிஷப் பண்ட்- அகர்வால்

ஐபிஎல் புள்ளிகள் அட்டவணையில் 12 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று 0.210 நெட் ரன் ரேட்டில் 14 புள்ளிகள் பெற்ற ஆர்சிபிக்கு அடுத்ததாக 5ம் இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இன்று இரவு 7:30 மணி ஐபிஎல் ஆட்டத்தில் 12 புள்ளிகளுடன் 0.023 என்ற நிகர ரன் விகிதத்திலும் 7ம் இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • Cricketnext
  • 1-MIN READ
  • Last Updated :

ஐபிஎல் புள்ளிகள் அட்டவணையில் 12 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று 0.210 நெட் ரன் ரேட்டில் 14 புள்ளிகள் பெற்ற ஆர்சிபிக்கு அடுத்ததாக 5ம் இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இன்று இரவு 7:30 மணி ஐபிஎல் ஆட்டத்தில் 12 புள்ளிகளுடன் 0.023 என்ற நிகர ரன் விகிதத்திலும் 7ம் இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.

கடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 209 ரன்கள் குவித்ததுடன் எதிணியை 155 ரன்னுக்குள் சுருட்டி நெட் ரன் ரேட்டை உயர்த்தியது. பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷிகர் தவான் (402 ரன்கள்), லிவிங்ஸ்டன், பானுகா ராஜபக்சே, பேர்ஸ்டோ ஆகியோர் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.  கேப்டன் மயங்க் அகர்வால் இதுவரை பிரமாதமாக ஆடிவிட வில்லை ஒருவேளை சரியான நேரத்தில் உச்சமடைவாரா என்பதை இன்று பார்ப்போம். பந்து வீச்சில் ரபடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், ரிஷி தவான், ஒடியன் ஸ்மித் ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி முந்தைய லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை காலி செய்தது.  டெல்லி அணியில் பேட்டிங்கில் டேவிட் வார்னர் மிகவும் அபாயகரமானவர். ரிஷப் பண்ட் ரவி சாஸ்திரி சொல்வது போல் ரஸல் பாணியில் வர்றதுவரட்டு என்று மட்டையை விட்டுப்பார்க்க வேண்டும். மிட்செல் மார்ஷ் கம்பேக் பார்மி ல் இருக்கிறார், இவருக்கு மாட்டத் தொடங்கினால் இவர் ரீச்சுக்கு எவரும் பவுலிங் போட முடியாது.

ரோவ்மன் பவெலும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ், கலீல் அகமது, ஷர்துல் தாக்குர், முஸ்தாபிசுர் ரகுமான், அன்ரிச் நார்ட்யே அசத்தி வருகின்றனர். டையாய்டு காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் கடந்த 3 ஆட்டங்களை தவற விட்ட பிரித்வி ஷா குணமடைந்து அணியினருடன் இணைந்து இருக்கிறார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். தோல்வி அடைந்தால் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கி விடும். எனவே இரு அணிகளும் வெற்றிக்காக போராடியே ஆக வேண்டும்.அதோடு நிகர ரன் விகிதத்தையும் யோசிக்க வேண்டும்.

டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் ஆட்டம் பயங்கர விறுவிறுப்பாக இருக்கும் என்று தெரிகிறது.

உத்தேச லெவன்; டெல்லி கேப்பிடல்ஸ்: டேவிட் வார்னர், பரத் அல்லது பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட், போவெல், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், நார்ட்யே, குல்தீப் யாதவ், சேத்தன் சக்காரியா அல்லது கலீல் அகமெட்

பஞ்சாப் உத்தேச லெவன்: பேர்ஸ்டோ, ஷிகர் தவான், மயங்க் அகர்வால், லியாம் லிவிங்ஸ்டன், பனுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா (வி.கீ), சந்தீப் சர்மா, ராகுல் சாஹர், ரிஷி தவான், ரபாடா, ஓடியன் ஸ்மித்

First published:

Tags: Delhi Capitals, IPL 2022, Punjab Kings