Home /News /sports /

கடவுள் போல் என் வாழ்க்கையில் நுழைந்தார் சுரேஷ் ரெய்னா- நெகிழ்ச்சியில் சன் ரைசர்ஸ் பவுலர்

கடவுள் போல் என் வாழ்க்கையில் நுழைந்தார் சுரேஷ் ரெய்னா- நெகிழ்ச்சியில் சன் ரைசர்ஸ் பவுலர்

கார்த்திக் தியாகி- இப்போது சன் ரைசர்ஸில்

கார்த்திக் தியாகி- இப்போது சன் ரைசர்ஸில்

நடப்பு சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) உடன் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகி, சுரேஷ் ரெய்னா தனது கிரிக்கெட் வாழ்க்கையை இளம் வீரராக எப்படி வடிவமைக்க உதவினார் என்பதை நெக்குருக பேசியுள்ளார்.

2020 U-19 கிரிக்கெட் உலகக் கோப்பையில் அவர் பிரமாதமாக ஆடியதிலிருந்து கார்த்திக் தியாகி அவரது ஆட்டத்திறன் கவன ஈர்ப்பில் முக்கியத்துவம் பெறுவதைக் கண்டார். அதே ஆண்டில், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2020 வீரர்கள் ஏலத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸால் வாங்கப்பட்டார்.  அவரது முதல் சீசனில் ஒன்பது விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்த ஆண்டு மெகா ஏலத்தில், அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) ரூ 4 கோடிக்கு எடுத்தது. சமீபத்தில் சுரேஷ் ரெய்னா தனது திறமையை ஆதரித்ததை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தார்.  சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இன் இன்ஸ்டாகிராம்  மூலம் பேசிய கார்த்திக் தியாகி கூறியதாவது:

"நான் எப்போதும் ஒன்றைச் சொல்வது வழக்கம். அண்டர்-16க்குப் பிறகு, சுரேஷ் ரெய்னா என் வாழ்க்கையில் ஒரு கடவுளைப் போல நுழைந்தார், ஏனென்றால் நான் ரஞ்சி கோப்பைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது மக்கள் என்னை அடையாளம் காணத் தொடங்கினர். 13 வயதில், நான் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றேன்.

இங்குதான் எனது கிரிக்கெட் பயணம் தொடங்கியது.14 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்காகவும், பின்னர் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்காகவும் விளையாடத் தொடங்கினேன்.அண்டர்-16ல் 7 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய சீசன் இருந்தது.அங்குதான் தேர்வாளர்கள் கவனிக்கத் தொடங்கினர். மாநில அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரு வீரர் இருக்கிறார் என்று என்னை அடையாளம் கண்டனர்.

"ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், நாங்கள் இறுதிப் போட்டியில் தோற்றோம். அங்குதான் ஞானேந்திர பாண்டே சார் என்னைப் பார்த்தார், அவர் எனது பவுலிங்கினால் ஈர்க்கப்பட்டதாகவும், அவர் நான்  முன்னேற ஊக்குவிப்பதாகவும் கூறினார்

அங்கிருந்து நான் மாநில ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டுக்கு  வந்தேன். நான் 16 வயது இளைஞனாக இருந்தேன், மற்றவர்கள் நிலைபெற்ற வீரர்கள். அப்போது சுரேஷ் ரெய்னாவும் அறிமுகமானார்.

நான் மிகவும் அமைதியாக இருந்தேன், எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தேன், ரெய்னா தனது பயிற்சியை முடித்துவிட்டு வெளியேறுவார், ஆனால் அவர் ஏன் மைதானத்திற்கு வந்தார் என்று எனக்குத் தெரியவில்லை, பின்னர் அவர் என்னை அணுகி என் ரோல் என்ன என்று கேட்டார். நான் சொன்னேன். நான் ஒரு வேகப்பந்து வீச்சாளராக இருந்தேன், பின்னர் அவர் எனக்கு வலையில் பந்து வீச வாய்ப்பு கொடுத்தார், அவர் எனது ஆட்டத்தை பார்த்து, உங்கள் பந்துவீச்சு எனக்கு பிடித்திருப்பதாகவும், எதிர்காலத்தில் உங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வேன் என்றும் கூறினார். சுரேஷ் ரெய்னா போன்ற ஒருவர் கவனித்தது என் வாழ்க்கையின் திருப்பு முனை.

இவ்வளவு பெரிய வீரர் என்னைப் பாராட்டியிருக்கிறார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நான்  ஒரு கணம், அவர் ஜோக் அடிக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் நான் நன்றாக வீசுகிறேன் என்றும் வரும் நாட்களில் எனக்கு வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதாக அவர் கூறியதையும்  என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.

இவ்வாறு கூறினார் கார்த்திக் தியாகி.
Published by:Muthukumar
First published:

Tags: IPL 2022, SRH

அடுத்த செய்தி