ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IPL 2022- சிஎஸ்கே அணியை ஜடேஜா, ராயுடு, உத்தப்பா வழிநடத்த முடியும் - ரெய்னா

IPL 2022- சிஎஸ்கே அணியை ஜடேஜா, ராயுடு, உத்தப்பா வழிநடத்த முடியும் - ரெய்னா

ரெய்னா- தோனி

ரெய்னா- தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, வெய்ன் பிராவோ ஆகியோரால் அணியை வழிநடத்த முடியும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த 35 வயதான சுரேஷ் ரெய்னாவை இந்த முறை யாரும் ஏலம் எடுக்காமல் புறக்கணித்தனர். தோனியும் கைவிட்டு விட்டார். எல்லாம் ஈகோ மோதல்தான். இதனால் ரெய்னா அடுத்த அவதாரம் எடுக்கிறார். இந்த சீசனில் வர்ணனையாளராக செயல்பட உள்ளார்.

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனிக்குப் பிறகு ஜடேஜா, ராயுடு, உத்தப்பா, டுவைன் பிராவோ என்று யார் வேண்டுமானாலும் சிறப்பாக வழிநடத்த முடியும் என்கிறார் சுரேஷ் ரெய்னா. 40 வயதான தோனி ஆடுவாராம், ஆனால் 35 வயதான ரெய்னா வர்ணனையாளராம் இதுதான் ஐபிஎல் நியாயம். இதுதான் ஐபிஎல் வர்த்தக தர்க்கம்.

  இந்நிலையில் சுரேஷ் ரெய்னா கூறியிருப்பதாவது:

  ‘வர்ணனையாளர் பணிக்கு என்னை தயார்படுத்தி கொண்டுள்ளேன். எனது நண்பர்கள் இர்பான் பதான், ஹர்பஜன்சிங், பியுஸ் சாவ்லா ஆகியோர் ஏற்கனவே வர்ணனையாளராக உள்ளனர். இந்த சீசனில் ரவிசாஸ்திரியும் வர்ணனை குழுவில் இடம் பிடித்துள்ளார். எனவே இது எனக்கு எளிதாக இருக்கும் என்றே நினைக்கிறேன். தேவையான ஆலோசனைகளை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வேன்.

  Also Read: Pak vs Aus- சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித் - லாகூர் டெஸ்ட்டில் சாதனை

  சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, வெய்ன் பிராவோ ஆகியோரால் அணியை வழிநடத்த முடியும். கேப்டன்ஷிப்புக்குரிய திறமை இவர்களிடம் உண்டு. ஆட்டத்தை நன்றாக புரிந்து செயல்படக்கூடியவர்கள். டோனிக்கு பிறகு சென்னை அணியின் அடுத்த கேப்டனாக வர முடியும்’ என்றார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: IPL 2022, MS Dhoni, Suresh Raina