Home /News /sports /

IPL 2022 SRH vs RR-மோசடி தீர்ப்பில் ஒழிக்கப்பட்ட கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

IPL 2022 SRH vs RR-மோசடி தீர்ப்பில் ஒழிக்கப்பட்ட கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

ஐபிஎல் 2022- கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

ஐபிஎல் 2022- கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2022 ஐந்தாவது ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மெதுவான ஓவர்களை வீசியதற்காக கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2022 ஐந்தாவது ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மெதுவான ஓவர்களை வீசியதற்காக கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ராஜஸ்தான் அணியின் வீரர் படிக்கல் தரையில் பட்டு கேட்ச் எடுத்ததற்கு அவுட் கொடுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்ட கேன் வில்லியம்சன் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சியுள்ளது இந்த அபராதம்.

    பகலிரவு போட்டியாகத்தானே நடக்கிறது, இதில் என்ன ஓவர் ரேட் வேகமெல்லாம் பார்ப்பது வேண்டிக்கிடக்கிறது? அன்று ரோஹித் சர்மாவுக்கும் ஸ்லோ ஓவர் ரேட்டுக்காக ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது., அவரும் அன்று தோல்வியடைந்த கேப்டன் தான். டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பையை பந்தாடியது. நேற்று ராஜஸ்தான் அணி சன் ரைசர்ஸைத் தட்டித் தூக்கியது.

    நேற்று 210 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் குவிக்க எப்படியிருந்தாலும் சன் ரைசர்ஸ் அதை அடிக்கப்போவதில்லை இப்படியிருக்கையில் கேன் வில்லியம்சன் போன்ற நல்ல பேட்டர்கள் ஆடுவதைப் பார்க்கத்தான் கொஞ்ச நஞ்ச ரசிகர்களும் வருகின்றனர், ஆனால் அவர்கள் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போடுவது போல் நடுவர்களே நடந்து கொள்வது ரசிகர்களிடையே எரிச்சலை கிளப்பியுள்ளது, ஒரு நல்ல பந்தை வீசி பிரசித் கிருஷ்ணா வில்லியம்சனை அசத்தினர், அதை படிக்கல் ஒழுங்காகப் பிடித்து அவுட் ஆகிறார் என்பதைத்தான் ரசிகர்கள் விரும்புகின்றனர்.

    நேற்று மட்டுமல்ல இதற்கு முன்பு ஒருமுறை சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும் என்று சன் ரைசர்ஸ் அணிக்கு முக்கியமான ஒரு நோ-பாலை மறுத்தனர், வைடு பந்தை வைடு கொடுக்காமல் விட்டதும் நடந்தது, இல்லை என்று யாரும் கூற முடியாது, அதே போல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விட்டுக்கொடுப்பு போட்டிகளும் நடைபெற்றுள்ளதை அப்போதைய ரசிகர்களின் மீம்களில் வெளியிட்ட கிண்டல்களே வெளிப்படுத்தியுள்ளது. கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக நடத்திவிட்டு பணம் சம்பாதிக்கட்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

    நேற்று 3ம் நடுவர் கே.என்.அனந்தபத்மநாபன் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பைத்தான் வழங்கினார், சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக அந்தத் தீர்ப்பு அமைந்தது. நேற்று புனேயில் சன் ரைசர்ஸ் விரட்டிய போது 2வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீச அருமையான பந்து வில்லியம்சன் மட்டை விளிம்பில் பட்டது. விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கையை நீட்டினார் ஆனால் பந்து கையுறையில் பட்டு ஸ்லிப்பில் தேவ் தத் படிக்கல் பிடிக்கும் முன்னர் தரையில் பட்டது நன்றாகத் தெரிந்தது, படிக்கல்லுக்குமே அது நன்றாகத் தெரியும் கேட்ச் இல்லை என்பது, ஆனால் ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகைக்கு அவர் தன் உரிமையாளருக்குத்தானே விசுவாசமாக இருக்க முடியும்? அவரும் பிடித்ததாக ஆட்டம் போட்டார். தேர்ட் அம்ப்யர் அனந்த பத்மநாபனிடம் ரிவியூ சென்றதில் அவர் அதிர்ச்சிகரமாக அவுட் என்றார், பந்து தரையில் பட்டது எல்லோருக்கும் தெரிகிறது, ஆனால் பாவம் அனந்தபத்மநாபனுக்குத் தெரியவில்லை.

    இந்நிலையில் தோல்வி, சொந்த பேட்டிங்கில் அநீதித் தீர்ப்பு இதோடு ரூ.12 லட்சம் அபராதம் வேறு, இதெல்லாம் ஐபிஎல் கொடுமைகள்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, Kane Williamson, SRH

    அடுத்த செய்தி