ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சன் ரைசர்ஸ் அணியிலிருந்து தமிழக வீரர் விலகல்

சன் ரைசர்ஸ் அணியிலிருந்து தமிழக வீரர் விலகல்

சன் ரைசர்ஸ் அணியிலிருந்து தமிழக வீரர் விலகல்

சன் ரைசர்ஸ் அணியிலிருந்து தமிழக வீரர் விலகல்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சன் ரைசர்ஸ் அணிக்கு ஒரு கேரக்டரே இல்லாமல் தோல்வி அடைந்து கொண்டே இருக்கும் அணி என்பதை கேன் வில்லியம்சனும் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவும் பவுலிங்கில் புவனேஷ்வர் குமாரும், டி.நடராஜனும் அருமையாக வீசி எதிரணியினரைக் கட்டுப்படுத்தியும் வெற்றிகளைப் பெறும் நிலையில் முன்னிலை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியுள்ளது அந்த அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன் சுந்தர் பவுலிங்கில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் நல்ல பார்மில் இருக்கிறார், இவரது இழப்பு சன் ரைசர்ஸ் அணிக்கு பேரிழப்புதான்.

சன் ரைசர்ஸ் அணியில் சுந்தர்

ஐபிஎல் 15-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு சீசனில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த ஐதராபாத் அணி பின்னர் சென்னை , குஜராத் ஆகிய இரண்டு அணிகளையும் வீழ்த்தி வெற்றிநடை போடுகிறது.

வெற்றிக்கு திரும்பி இருக்கும் அந்த அணிக்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் பலம் வாய்ந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அடுத்த சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாடமாட்டார் என அந்த அணியின்  பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து டாம் மூடி பேசுகையில், "சுந்தருக்கு கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டு உள்ளது. அதுகுறித்து பிசியோதெரபிஸ்ட் கவனித்து வருகின்றனர். இதனால் அவர் பந்துவீசுவது வீசுவது கடினம். அவர் குணமாக சுமார் ஒரு வாரம் ஆகலாம் " என அவர் தெரிவித்தார்.

இதனால் இந்த வாரம் நடைபெறவுள்ள ஐதராபாத் அணியின் அடுத்த இரண்டு போட்டிகளில் சுந்தர் விலகியுள்ளது உறுதியாகியுள்ளது. வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் லெக் ஸ்பின்னர் ஷ்ரேயஸ் கோபால் ஆடலாம் என்று தெரிகிறது, அல்லது வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகி கூட சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஆல்ரவுண்டர் வேண்டும் என்றால் ஷான் அபாட்டைத்தேர்வு செய்யலாம், அப்படியென்றால் வேறொரு அயல்நாட்டு வீரரை கழற்றி விட வேண்டி வரும்.

First published:

Tags: IPL 2022, SRH, Washington Sundar