ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

யார்க்கர் நடராஜனின் துல்லிய பவுலிங்- குஜராத்தை முடக்கிய விதம்

யார்க்கர் நடராஜனின் துல்லிய பவுலிங்- குஜராத்தை முடக்கிய விதம்

டி.நடராஜன்.

டி.நடராஜன்.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு டி.நடராஜனின் பங்களிப்பும் மிக மிக முக்கியமானது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நேற்றைய ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு டி.நடராஜனின் பங்களிப்பும் மிக மிக முக்கியமானது. ஏனெனில் புவனேஷ்வர் குமார் ஒரு புறம் முதல் ஓவரிலேயே 17 ரன்களைக் கொடுத்து தொடங்கினார். இதில் 2 முறை 5 வைடுகள் சென்றது. மார்க்கோ யான்சென் அருமையாக வீசி டைட் செய்தார். ஆனால் 3வது ஓவரில் புவனேஷ்வர் குமார் நிலைநிறுத்திக் கொண்டு குஜராத்தின் அபாய தொடக்க வீரர் ஷுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்தினார். இது பவுனேஷ்வர் குமாரின் பந்துக்கு விழுந்த விக்கெட் என்பதை விட ராகுல் திரிபாதியின் நம்ப முடியத கேட்சுக்கு வந்த விக்கெட் என்றே கூற வேண்டும்.

  5 ஓவர்களில் குஜராத் 42 என்று இருந்த போது பவர் ப்ளேயில்  கடைசி ஓவரை வீச நடராஜனை அழைத்தார் கேன் வில்லியம்சன்.  இன்னொரு தமிழக வீரர் சாய் சுதர்சன் எதிர்முனையில். இவர் நடராஜனை ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் அடுத்த பந்தே பிட்சில் பட்டு நின்று மெதுவாக வந்த பந்தை சுதர்சன் மிட் ஆஃபில் கேன் வில்லியம்சனிடம் ஸ்பூனில் வைத்து கேட்ச் கொடுத்தார். நடராஜன் முதல் ஓவரில் 9 ரன்கள் கொடுத்தாலும் அபாய வீரர் சாய் சுதர்ஷன் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

  மீண்டும் 11 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் 84/3 என்று இருந்த நிலையில் நடராஜன் மீண்டும் அழைக்கப்பட்டார், ஏனெனில் ஹர்திக் பாண்டியா பயங்கரமாக ஆடிக்கொண்டிருந்தார், இன்னொரு முனையில் அபாய டேவிட் மில்லர். 12வது ஓவரை நடராஜன் வீச வந்தார். மில்லருக்கு முதல் 2 பந்துகள் டாட் பாலாக வீசினார் நட்டு. அந்த ஓவர் முழுதும் தனது வேகத்தில் மாற்றம் காட்டி ஹர்திக், மில்லர் இருந்தும் 5 ரன்களையே விட்டுக் கொடுத்தார் நடராஜன், குஜராத் பிரஷர் எகிறியது.

  மீண்டும் டெத் ஓவரனா 18வது ஓவரில் நடராஜன் வந்த போது பாண்டியா இருந்தார், அபிஷேக் மனோகர் இருந்தார். ஹர்திக்கிற்கு ஒரு பந்தை வீச அது லாங் ஆனில் சிக்ஸும் ஆகியிருக்கலாம் கேட்சும் ஆகியிருக்கலாம் ஆனால் ஒரு ரன் தான் கிடைத்தது. அடுத்த  பந்து வைடு யார்க்கர் முயற்சி அதை அபிஷேக் லாங் ஆஃபில் தூக்கி அடிக்க அங்கு மார்க்ரம் கேட்சை விட்டார். இதனால் அடுத்த யார்க்கர் முயற்சி லோ புல்டாஸாக அமைய அபிஷேக் சர்மா சிக்சர் விளாசினார், கேட்சை விட்டதனால் வந்த வினை. அதே ஓவரில் அபிஷேக் சர்மா மீண்டும் ஒரு மிஸ்டு யார்க்கரை பவுண்டரிக்கு அனுப்பினார். நட்டு 3-27-1.

  பிறகு கடைசி ஓவரில் நடரான வந்தார் குஜராத் ஸ்கோர் 155/5.  அதிரடி மன்னன் திவேத்தியா கிரீசில் இருக்கிறார். 2 யார்க்கர்கள் 2 ரன்கள்தான் வந்தது, ஆனால் மீண்டும் ஒரு மிஸ்டு யார்க்கரை திவேத்தியா பவுண்டரி விளாசினார். அடுத்த பந்து நல்ல பந்து திவேத்தியாவுக்கு மாட்டவில்லை, பை ஓடி வந்தார் ஹர்திக், ஆனால் திவேத்தியா ரன்னர் முனையில் ரன் அவுட். அடுத்த பந்து டிப்பிங் யார்க்கர். ஹர்திக் சிங்கிள்தான் எடுக்க முடிந்த்து,

  அடுத்த பந்து ரஷீத் கானை யார்க்கரில் குச்சை கழற்றினார் நடராஜன். 4-34-2. அந்த ஓவரில் மட்டும் ஒரு 15 ரன்களை நடராஜன் கொடுத்திருந்தால் ஸ்கோர் 170 ஆகியிருக்கும் சன் ரைசர்ஸ் தோற்றுக்கூட இருக்கலாம். அந்த விதத்தில் மூன்று ஸ்பெல்களாக வீசிய நடராஜன் அருமையாகக் கட்டுப்படுத்தினார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Gujarat Titans, IPL 2022, SRH, T natarajan