நடப்பு ஐபிஎல் தொடரில் ஓரளவுக்கு நன்றாகத் தொடங்கிய ஸ்ரேயஸ் அய்யர் தலைமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி 5 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து திக்கு திசை தெரியாத அணியாகத் தவிக்கிறது. இது குறித்து பேசிய டிம் சவுதி, அணிக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணி இதுவரை 4 தொடக்க ஜோடிகளை பயன்படுத்தியுள்ளது. ஒருவர் மோசமாக விளையாடினால், அடுத்த போட்டியில் புதிய தொடக்க ஜோடியை களமிறக்குவது என்ற யுக்தியை பயன்படுத்தி வருகிறது. ஆனால், அந்த முயற்சிகள் கொல்கத்தா அணிக்கு கை கொடுத்தாக தெரியவில்லை. வியாழக்கிழமை நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை தழுவியது. இதனால் புள்ளிப் பட்டியலில் அந்த அணி 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதனையடுத்து பேசிய அந்த் அணியின் நியூசிலாந்து வீரர் டிம் சவுதி அணிக்குள் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, ஒரு அணியாக திரண்டு ஆடவில்லை என்கிறார்.
அணிக்குள் இருக்கும் வீரர்கள் சிறப்பானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அடிக்கடி தொடக்க ஜோடிகள் மாற்றபடுவது, பின்னடைவுக்கான காரணமோ என எண்ணத் தோன்றுகிறது. வீரர்கள் சரியாக விளையாடாதபோது ஒருவரை மாற்றலாம். ஆனால், மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் சரியாக அமையாதபோது, என்ன செய்ய வேண்டும் என மீண்டும் யோசிப்பது கடினம்
ஒரு வீரருக்கு பதிலாக இன்னொரு வீரர் களமிறக்கப்படுவது, சரியான சூழல் இல்லாதபோது மட்டுமே நடைபெறும். ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தொடக்க ஜோடிகளாக 5 போட்டிகளில் களம் கண்டனர். அவர்கள் இணை எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. சாம்பில்லிங்ஸ், சுனில் நரைன் மற்றும் பின்ச் ஆகியோர் வெவ்வேறு போட்டிகளில் களமிறக்கப்பட்டனர். அந்த யுக்தியும் கைகொடுக்கவில்லை. இதனால், என்ன நடக்கிறது என்பது குழப்பமாக இருக்கிறது ஏன் இத்தனை மாற்றங்களும் நிலையில்லாத் தன்மையும் என்று டிம் சவுதி கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2022, KKR, Shreyas Iyer