Home /News /sports /

இந்த கோச்சுங்க தொல்லை தாங்க முடியலைடா சாமி- மெக்கல்லத்தை எதிர்த்த ஸ்ரேயஸ் அய்யர்

இந்த கோச்சுங்க தொல்லை தாங்க முடியலைடா சாமி- மெக்கல்லத்தை எதிர்த்த ஸ்ரேயஸ் அய்யர்

ஸ்ரேயஸ் அய்யர்- மெக்கல்லம்

ஸ்ரேயஸ் அய்யர்- மெக்கல்லம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பிரமாதமாகக் கொண்டு வந்தவர் பிரெண்டன் மெக்கல்லம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்க அந்த அணியின் மோசமான நிலைக்கும் அவர்தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பிரமாதமாகக் கொண்டு வந்தவர் பிரெண்டன் மெக்கல்லம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்க அந்த அணியின் மோசமான நிலைக்கும் அவர்தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    காரணம், பிரெண்டன் மெக்கல்லம், கேப்டன்களை தன்னிச்சையாக செயல்பட விடாமல் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறார் என்றும் இதனை வெளிப்படையாகவே கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் தன் முக பாவனையில் அதிருப்தியை வெளிப்படுத்தி விட்டார் என்றும் ஸ்ரேயஸ் அய்யருடன் 2 ஆண்டுகள் டெல்லி கேப்பிடல்ஸில் பணியாற்றிய முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

    இந்த ஐபிஎல் தொடரில் அதிக வீரர்கள் ஆடியது கொல்கத்தா அணியில் மட்டும்தான். எப்போதும் அணியிலிருந்து வீரர்களை தூக்குவது சேர்ப்பது, என்று சேர்க்கையை மாற்றிக்கொண்டே இருந்தால் எந்த வீரருக்கும் ஒரு பாதுகாப்பு உணர்வே இருக்காது, சிஎஸ்கே, தோனி போன்ற நிர்வாகிகளுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

    தோனி கிளீன் ஆகச் சொல்லி விடுவார் ‘நான் கேட்டால் மட்டுமே உங்கள் ஆலோசனைகளைக் கூறுங்கள்’ என்று கூறியதாக செய்திகள் வெளியானதையும் பார்த்திருக்கிறோம், இதற்கு அர்த்தம் என்னவெனில் நான் கேட்காமல் நீயாகவே எதையும் சொல்லாதே, செய்யாதே, வாயை மூடிக்கொண்டிருக்கவும் என்று அர்த்தம், ஸ்டீபன் பிளெமிங் எப்படி இத்தனை ஆண்டுகள் சிஎஸ்கேவில் தொடர முடிகிறது, காரணம் இதுதான்.

    அணியில் யாரைத் தேர்வு செய்வது என்பது மட்டுமல்ல, யாரை எந்த டவுனில் அனுப்புவது என்பது உட்பட மெக்கல்லம்தான் முடிவு செய்கிறாராம். இதற்கு ஏன் கேப்டன் பேசாமல் மெக்கல்லம் இறங்கி விளையாடி விட வேண்டியதுதானே?- கொல்கத்தா ஒன்றிரண்டு போட்டிகளில் கூடுதலாக வென்றிருக்கவாவது வாய்ப்பிருக்கும்.

    இந்நிலையில் கொல்கத்தா அணியின் பிரச்சனைகள் பற்றி முகமது கைஃப் கூறும்போது, “கொல்கத்தா அணியில் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். ஆடும் 11 வீரர்களில் அடிக்கடி மாற்றம் செய்கின்றனர். இது வீரர்களுக்கு மன அழுத்தத்தையே தரும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆட முடியாது. அந்த அணியின் தற்போதைய நிலைக்கு பிரெண்டன் மெக்கல்லம் உள்ளிட்ட நிர்வாகமே காரணம். வீரர்களை இஷ்டத்துக்கு தூக்குகின்றனர், தேர்வு செய்கின்றனர்.

    இதனால் அணியின் சூழ்நிலையே மோசமாகி விடும், இதைத்தான் அந்த அணியின் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பார்த்தோம். பேட்டிங் ஆர்டர் பற்றி பிரெண்டன் மெக்கல்லம் முடிவுக்கு எதிராக ஸ்ரேயஸ் அய்யர் வெளிப்படையாக தன் வெறுப்பைக் காட்டினார். இதனால்தான் அதிகப் போட்டிகளில் தோற்றனர்.

    அதாவது கேப்டனுக்கும் கோச்சுக்கும் ஒத்துப் போவதில்லை. பொதுவாக அமைதியாக இருக்கும் ஷ்ரேயஸ் அய்யர் அன்று மெக்கல்லம்மை கேள்வி கேட்டார்” என்றார் கைஃப்.

    ரகானேவையே தொடர்ந்து ஆட வைத்திருக்கலாம், 2 போட்டிகள் அவர் பிறகு வேறு ஒருவர் மீண்டும் ரகானே, வெங்கடேஷ் அய்யர் உட்கார வைக்கப்பட்டு மீண்டும் அழைத்து வருதல், என்று மெக்கல்லம் சொதப்பி வருகிறார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Brendon McCullum, IPL 2022, KKR, Shreyas Iyer

    அடுத்த செய்தி