• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IPL: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பிரியாவிடை கொடுக்கிறார் ஷ்ரேயஸ் அய்யர்

IPL: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பிரியாவிடை கொடுக்கிறார் ஷ்ரேயஸ் அய்யர்

ஷ்ரேயஸ் அய்யர்

ஷ்ரேயஸ் அய்யர்

  • Share this:
    டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் 7 ஆண்டுகள் உறவுக்குப் பின் ஷ்ரேயஸ் அய்யர் அந்த அணியிலிருந்து விலகுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அய்யர் காயமடைந்து கேப்டன்சியை ரிஷப் பண்ட்டிடம் கொடுத்தார், அதன் பிறகு அவரிடம் கேப்டன்சி இனி வராது என்ற நிலையே தொடரும் போல் உள்ளது. ரிஷப் பண்ட் அணியை 2021 இறுதிக்கு அழைத்துச் சென்றார்.

    ஐபிஎல் 2022 தொடருக்கு லக்னோ, அகமதாபாத் அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளதால், ஷ்ரேயஸ் அய்யர் தன்னை டெல்லியிலிருந்து விடுவித்துக் கொள்வார் என்ற தகவல்களின் அடிப்படையில் புதிய அணியில் கேப்டன்சி ரோல் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக முன்னணி ஆங்கில ஊடகம் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

    2015-ல் டெல்லி அணிக்கு அறிமுகமான பிறகே அந்த அணியின் முக்கியமான ஒரு அங்கமாக இருந்தார் ஷ்ரேயஸ் அய்யர். கவுதம் கம்பீர் கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து 2018-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்றார் அய்யர். இருமுறை டெல்லி அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார். ஐபிஎல் 2020-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டெல்லி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

    2021 ஐபிஎல் தொடரில் கேப்டனாக தொடருவதற்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தோள்பட்டை காயத்தினால் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் சுற்றில் ஷ்ரேயஸ் அய்யரால் ஆட முடியவில்லை. இதனையடுத்தே ரிஷப் பண்ட்டிடம் கேப்டன்சி கொடுக்கப்பட்டது. ஷ்ரேயஸ் அய்யரும் ரிஷப் பண்ட் கேப்டன்சியைத் தொடர்வதுதான் சரி என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் யுஏஇ சுற்றில் ஆடிய ஷ்ரேயஸ் அய்யர் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. அப்போதே அவரை டெல்லி கேப்பிடல்ஸ் தக்க வைக்கும் 4 வீரர்களுள் ஒருவராகக் கருதுமா என்ற சந்தேகம் இருந்தது.

    இந்நிலையில் மெகா ஆக்‌ஷனுக்கு ஒன்று அவர் புதிதாக தன்னை அறிவித்துக் கொள்வார் இல்லையெனில் லக்னோ, அல்லது அகமதாபாத் கேப்டன்சியை ஏற்கலாம் என்று தெரிகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: