Home /News /sports /

IPL 2022-விருந்தோம்பல் என்றால் அது இந்தியாதான் - விரைவில் சந்திப்போம்- கெவின் பீட்டர்சன் நெகிழ்ச்சி

IPL 2022-விருந்தோம்பல் என்றால் அது இந்தியாதான் - விரைவில் சந்திப்போம்- கெவின் பீட்டர்சன் நெகிழ்ச்சி

கெவின் பீட்டர்சன்

கெவின் பீட்டர்சன்

இங்கிலாந்து முன்னாள் வீரரும் தற்போதைய ஐபிஎல் வர்ணனையாளருமான கெவின் பீட்டர்சன் இந்தியாவுக்கு ஐபிஎல் வர்ணனைக்காக வருகிறார். இந்த வாய்ப்புக்காக காத்திருந்தவர் போல் கெவின் பீட்டர்சன் தேன் குடித்த குள்ளநரியாக குதியாட்டம் போடுகிறார்.

தொடர் ஆரம்பித்து 3 வாரங்கள் ஆகிவிட்டது, அவர் இப்போது கிளம்பியுள்ளார் என்று வர்ணனை தொடங்குவார் என்று தெரியவில்லை. ஆனால் அவரோ, “இன்னும் சில மணி நேரங்கள்தான், உலகின் சிறந்த விருந்தோம்பல் நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறேன்” சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் அவர் இந்தியில் கூறியதாக வெளியிடப்பட்டுள்ளது, அதில் “ஐபிஎல் வர்ணனைக்காக வந்து கொண்டிருக்கிறேன், இதனால் உற்சாகம் ததும்ப மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இந்தியா உலகில் சிறந்த விருந்தோம்பல் நாடு. இதனை முழுதும் அனுபவிக்க நான் அதை எளிதாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. இந்தியாவில் இன்னும் சில மணிநேரங்களில் சந்திப்போம்” என்று ட்வீட் செய்துள்ளார்.



இதற்கிடையே ஐபிஎல் தொடரில் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது, டெல்லி அணி குழாமில் 3 பேருக்குக் கொரோனா பாசிட்டிவ், இதனால் ஒட்டுமொத்த அணியும் தனிமையில் உள்ளது. ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷுக்கு கொரோனா பாசிட்டிவ், அடுத்து அனைவருக்கும் அறை அறையாகச் சென்று சோதனை செய்யவுள்ளனர்.

இதனால்தான் அன்று ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் கை குலுக்க வேண்டாம் டெல்லி வீரர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். இதனால் புனேவுக்கு டெல்லி அணி வராது என்று நேற்று பிடிஐ செய்தி தெரிவித்தது.

ஆனால் வீரர்கள் கொரோனா டெஸ்ட் நெகெட்டிவ் ஆகி அனைவரும் அடுத்த போட்டியில் பங்கேற்பார்கள் என்று டெல்லி அணி நிர்வாகத்தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
Published by:Muthukumar
First published:

Tags: IPL 2022

அடுத்த செய்தி