ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா ஏலம் நடைபெறும் நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கே.எல்.ராகுலுக்கு லக்னோ அணி ரூ.20 கோடி கொடுக்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2018-ல் பஞ்சாப் கிங்ஸ் அணி ராகுலை ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்நிலையில் ஐபிஎல் 2022-க்கு புதிதாக வந்துள்ள லக்னோ அணி கே.எல்.ராகுலுக்கு இதுவரை யாரும் பெறாத, யாருக்கும் கிடைக்காத, வரலாறு காணாத தொகையான ரூ.20 கோடியை அளிக்க முடிவெடுத்துள்ளதாக ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும்முன் நாளைக்குள் அணிகள் தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும், அதே போல் புதிய அணி உரிமையாளர்கள் 3 வீரர்களை ஏலத்துக்கு முன்னாலேயே ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.
இந்நிலையில் ஏறக்குறைய லக்னோ அணியின் கேப்டனாகவே கே.எல்.ராகுல் செல்வார் எனுன் நிலையில் நட்சத்திர வீரராக அவர் தேர்வு செய்யப்பட்டு ரூ.20 கோடிக்கு அவர் ஒப்பந்திக்கப்படாலம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏன் 20 கோடி என்றால் பஞ்சாப் கிங்ஸ் அணியிலேயே ராகுல் இருப்பாரேயானால் அவரை ரூ.16 கோடிக்கு அந்த அணி தக்க வைக்க வேண்டும். ஐபிஎல் 2018 முதலே சிறந்த தொடக்க வீரராக ராகுல் இருந்து வருகிறார். 659, 593, 670, 626 என்று ஐபிஎல் தொடர்களில் குவித்து வருகிறார்.
லக்னோ அணியின் உரிமையாளர்களான ஆர்பிஎஸ்ஜி குரூப் மிகப்பெரிய தொகையான ரூ.7090 கோடி கொடுத்து அணியை எடுத்துள்ளது. ரஷீத் கானுக்கும் ரூ.16 கோடி கொடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. 2018-ல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரஷீத் கானை ரூ.9 கோடிக்கு தக்க வைத்தது. இந்த முறை ஹைதராபாத் இவரை தக்க வைத்தால் ரூ.12 கோடிக்குத் தக்க வைக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: மும்பை டெஸ்ட்டில் ஷ்ரேயஸ் அய்யர் நீக்கப்படுவார்: விவிஎஸ் லஷ்மண் அதிர்ச்சித் தகவல்
ராகுல் பஞ்சாப் கிங்சிலிருந்து லக்னோவுக்கு செல்வது ஏறக்குறைய உறுதியான நிலையில் ரஷீத் கான் நிலவரம் என்னவென்று இன்னும் தெரியவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL Auction, Kl rahul