Home /News /sports /

RCB vs RR- விராட் கோலி ஃபார்முக்கு வர வேண்டுமென்றால் இதைச் செய்ய வேண்டும்- வெட்டோரி கொடுத்த அட்வைஸ்

RCB vs RR- விராட் கோலி ஃபார்முக்கு வர வேண்டுமென்றால் இதைச் செய்ய வேண்டும்- வெட்டோரி கொடுத்த அட்வைஸ்

கோலி.

கோலி.

ரன் மெஷின் என்று அழைக்கப்பட்டார் விராட் கோலி, அது பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனது. மெஷின் இன்று காயலாங்கடைக்குப் போடப்படும் நிலையில் உள்ளதா அல்லது பட்டி டிங்கரிங் பார்த்து இன்னும் 3-4 ஆண்டுகளுக்கு ஓட வைக்க முடியுமா என்பதுதான் இப்போதைய இந்திய கிரிக்கெட் நிபுணர்கள் யோசிக்கும் பேசிக்கும் விஷயமாக இருந்து வருகிறது.

மேலும் படிக்கவும் ...

    3 ஆண்டுகளாக சதம் என்றால் கிலோ என்ன விலை என்கிறார், இந்த 1 போட்டு பக்கத்துல 2 சைபர் அதுவா?, எனக்கு தெரியாதுங்களே என்ற ரீதியில் கோலி இருக்கிறார், இந்த லட்சணத்தில் சதம் அடிக்காமலேயே சதப்போட்டிகள் ஆடி ரொம்ப வித்தியாசமா ஒரு சதம் எடுத்து விட்டார் கோலி. அதான் 2 சைபர் அடிச்சிட்டேனே, முன்னாடி 1 போட்டுக்கங்க என்ற ரேஞ்சுக்கு கோலி மீம்கள் படையெடுத்து வரும் வேளையில், அவருக்கு முக்கியமான ஒரு அட்வைசை வழங்கியுள்ளார் முன்னாள் ஆர்சிபி, நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி.

    இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் விராட் கோலி பார்ம் குறித்து கவலை கொண்டுள்ளனர். ஐபிஎல் கமெண்டரி பேனலில் இடம் பெற்றிருக்கும் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், கோலியை இப்படி பார்ப்பது மிகவும் கஷ்டமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    அவர் நிச்சயம் பார்முக்கு திரும்புவார், திரும்ப வேண்டும் என நம்பிக்கை தெரிவித்த அவர், இத்தகைய சூழ்நிலையை தானும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எதிர்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2022-ல் 8 போட்டிகளில் விளையாடியிருக்கும் விராட் கோலி வெறும் 119 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ஒரே ஒரு மேட்சில் மட்டும் அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் தனி ஒருவராக ஆர்சிபி அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற விராட் கோலி, அந்த சீசனில் 973 ரன்கள் குவித்தார். தனிநபர் ஒருவர் அதிகபட்ச ரன்கள் எடுத்த வகையில் ஐபிஎல் சாதனையை இன்னும் தன் வசம் வைத்திருப்பவர் கோலிதான்.

    இந்நிலையில் விராட் கோலி பார்ம் குறித்து பேசிய டேனியல் வெட்டோரி, விராட் கோலி பார்ம் அவுட்டில் இருந்து மீண்டும் வர வேண்டும் என்றால், ஆர்சிபி அணிக்காக விராட் கோலி ஓபனிங் பேட்டிங் இறங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இது அவர் மீது இருக்கும் அழுத்தத்தை குறைத்து சிறப்பாக பேட்டிங் செய்ய உதவும் என்றும் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, Rajasthan Royals, RCB, Virat Kohli

    அடுத்த செய்தி