Home /News /sports /

IPL 2022 RR vs KKR- நாம் தோற்றுத்தான் ஆக வேண்டும் என்றால் இப்படித் தோற்போம் - ஷாரூக்கான் சூசகம்

IPL 2022 RR vs KKR- நாம் தோற்றுத்தான் ஆக வேண்டும் என்றால் இப்படித் தோற்போம் - ஷாரூக்கான் சூசகம்

shahruk khan

shahruk khan

நேற்று மும்பை பிரபர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 30வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸின் 217 ரன்கள் இலக்கை விரட்டி 210 ரன்கள் வரை வந்து போராடி கொல்கத்தா தோல்வி தழுவியதையடுத்து அணியின் உரிமையாளர் ஷாரூக்கான் சூசகமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    நேற்று மும்பை பிரபர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 30வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸின் 217 ரன்கள் இலக்கை விரட்டி 210 ரன்கள் வரை வந்து போராடி கொல்கத்தா தோல்வி தழுவியதையடுத்து அணியின் உரிமையாளர் ஷாரூக்கான் சூசகமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

    டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக பட்லர் சதம் அடித்தார் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

    இறுதி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 3 ரன்கள் மட்டுமே அடித்தநிலையில் கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.இந்த போட்டியில் கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக, சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் அய்யர் 85 ரன்களும் ,ஆரோன் பின்ச் 58 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில் ராஜஸ்தானின் மே.இ.தீவுகள் பவுலர் ஆபெட் மெக்காய் சிறப்பாகவ் வீசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கட்டுப்படுத்தினார். இதனால் கொல்கத்த மகா விரட்டலில் தோல்வி அடைந்தது. ஆனால் சரியான ஃபைட் கொடுத்து ராஜஸ்தானுக்கு கிலி மூட்டியது.

    இதனையடுத்து ஷாரூக்கான் தன் ட்விட்டர் பக்கத்தில் தன் அணி வீரர்களைப் பாராட்டிப் பதிவிட்டதாவது:

    “அருமையாக விளையாடினிங்க பாய்ஸ். ஸ்ரேயாஸ் அய்யர், ஆரோன் பின்ச், உமேஷ் ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்காக முயற்சித்தார்கள். சுனில் நரேனுக்கு 150வது மேட்சுக்கான வாழ்த்துக்கள், 15 ஆண்டுகளுக்கு முன்பாக பிரெண்டன் மெக்கல்லம் ஆடிய அந்த இன்னிங்சுக்காக வாழ்த்துக்கள். நாம் தோற்று விட்டோம் என்பதை அறிவேன், ஆனால் நாம் தோற்கத்தான் வேண்டும் என்றால் இப்படித் தோற்போம், போராடித் தோற்போம், தலை நிமிர்ந்து நில்லுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, KKR, Rajasthan Royals

    அடுத்த செய்தி