முகப்பு /செய்தி /விளையாட்டு / ஹிட் மேன் இஸ் பேக்- விராட் கோலி, டிவில்லியர்ஸ் உடன் இணைந்தார் ரோஹித் சர்மா

ஹிட் மேன் இஸ் பேக்- விராட் கோலி, டிவில்லியர்ஸ் உடன் இணைந்தார் ரோஹித் சர்மா

ஹிட்மேன் ரோஹித் சர்மா

ஹிட்மேன் ரோஹித் சர்மா

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித்சர்மா 2 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் அவர் ஐ.பி.எல்.லில் மும்பை அணிக்காக 200 சிக்சர்கள் அடித்து சாதனை புரிந்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித்சர்மா 2 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் அவர் ஐ.பி.எல்.லில் மும்பை அணிக்காக 200 சிக்சர்கள் அடித்து சாதனை புரிந்தார்.

ஒரே அணிக்காக 200 சிக்சர் அடித்த 5வது வீரர் ரோஹித் சர்மா ஆவார். விராட்கோலி, டி வில்லியர்ஸ், கிறிஸ்கெய்ல், பொல்லார்ட் ஆகியோருடன் அவர் இணைந்தார். ரோகித்சர்மா ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல்லில் 236 சிக்சர்கள் (218 ஆட்டம்) அடித்துள்ளார். அவர் டெக்கான் சார்ஜஸ் அணிக்காவும் விளையாடி இருந்தார்.

மும்பை பிரபர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற டாடா ஐபிஎல் 2022 தொடரின் 51வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி எளிதில் வெற்றி பெறக்கூடிய நிலையிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த மும்பையும் 200 ரன்கள் செல்ல வேண்டிய ஸ்கோரை சொதப்பி 177/6 என்று முடிக்க, தொடர்ந்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் சஹா (55), கில் (52) தொடக்க ஜோடி 106 ரன்களை 12 ஓவர்களில் எடுத்து கொடுத்தும் கடைசி ஓவரில் 8 ரன்களை எடுக்க விடாமல் டேனியல் சாம்ஸ் அருமையான ஒரு ஓவரைப் போட குஜராத் டைட்டன்ச் 172/5 என்று முடிந்தது.

முன்னதாக டாஸ் வென்று மும்பை இந்தியன்சை பேட் செய்ய அழைத்தார் ஹர்திக் பாண்டியா. ரோஹித் சர்மா பார்மில் இல்லாதது போலவே இல்லை, அல்ஜாரி ஜோசப்பை விளாசினார் பவர் ப்ளேவுக்குள் 42 ரன்களை எடுத்தார். இஷான் கிஷன் சரளம் இல்லை என்றாலும் அவரும் ரன்களை விரைவில் எடுக்க பவர் ப்ளே 6 ஓவரில் மும்பை 63 ரன்களை எடுத்தது.

ரஷீத் கான் பவர் ப்ளேவுக்குள் வீசிய ஒரு ஓவரில் 13 ரன்களைக் கொடுத்தார். 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 28 பந்தில் 43 எடுத்திருந்த ரோஹித் சர்மா எந்த பவுலரையும் அடிக்கும் மூடில் இருந்தார், ஆனால் ரஷீத் கான் இவருக்கு 2 பந்துகளை வீச ரன் வரவில்லை, உடனே ரிவர்ஸ் ஸ்வீப் போனார் எல்.பி.ஆகி வெளியேறினார்.

First published:

Tags: IPL 2022, Rohit sharma