ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IPL 2022 LSG vs RCB- ‘Rocking' ராகுல்: கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர் சாதனைகளை உடைத்தார்

IPL 2022 LSG vs RCB- ‘Rocking' ராகுல்: கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர் சாதனைகளை உடைத்தார்

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

4 வெவ்வேறு ஐபிஎல் தொடர்களில் 600க்கும் அதிகமான ரன்களை எடுத்ததில் கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர் சாதனைகளை முறியடித்தார் கே.எல்.ராகுல்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்தியன் பிரீமியர் லீக் 2022-ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் புதன்கிழமை தனது நான்காவது அரைசதத்தை அடித்தார். 58 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார், ஆனால் அவரது அணியால் 208 ரன்கள் இலக்கை எட்ட முடியவில்லை. ராகுல் 15 இன்னிங்ஸ்களில் 616 ரன்களுடன் சீசனை முடித்தார்.இதில் சில சாதனைகள் உடைந்தது.

  அதாவது 4 வெவ்வேறு ஐபிஎல் தொடர்களில் 600க்கும் அதிகமான ரன்களை எடுத்ததில் கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர் சாதனைகளை முறியடித்தார் கே.எல்.ராகுல். 51.33 சராசரி மற்றும் 135.38 ஸ்ட்ரைக் ரேட்டில் 616 ரன்கள் எடுத்துள்ளார்.

  இதற்கு முன்னர் கே.எல்.ராகுல், 2021 தொடரில் 13 போட்டிகளில் 626 ரன்களும், 2020 சீசனில் 14 போட்டிகளில் 670 ரன்களும், உலகின் பணக்கார கிரிக்கெட் லீக்கின் 2018 தொடரில் 659 ரன்களும் எடுத்திருக்கிறார் ராகுல். 2022 தொடரில் 4வது முறையாக 600 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார்.

  மேற்கிந்திய தீவுகள் T20 பேட்டிங் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் மற்றும் நட்சத்திர ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஐபிஎல்லில் 600 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர் மற்றும் இப்போது பட்டியலில் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டனர், ராகுல் முதலிடம் பிடித்தார்.

  42 வயதான கெய்ல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்தபோது, ​​தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் (2011-2013) 600 ரன்களைக் கடந்தார். மறுபுறம், டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டனாக 2016 முதல் 2019 வரை தொடர்ந்து மூன்று சீசன்களில் சாதனை படைத்தார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Chris gayle, David Warner, IPL 2022, Kl rahul, Lucknow Super Giants