ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IPL 2022 RCB vs SRH- ஆர்சிபியாவது டுபிளெசிசாவது கோலியாவது தினேஷ் கார்த்திக்காவது! - அடித்து நொறுக்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

IPL 2022 RCB vs SRH- ஆர்சிபியாவது டுபிளெசிசாவது கோலியாவது தினேஷ் கார்த்திக்காவது! - அடித்து நொறுக்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

ஆட்ட நாயகன் மார்க்கோ யான்சென்

ஆட்ட நாயகன் மார்க்கோ யான்சென்

பிரபர்ன் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்ற ஐபிஎல் 2022 தொடரின் 36வது போட்டியில் சற்றும் எதிர்பாராத விதமாக ஆர்சிபியை 69 ரன்களுக்குச் சுருட்டிய சன் ரைசர்ஸ் ஹைதாராபாத் பிறகு 8 ஓவர்களில் 72/1 என்று 9 விக்கெட்டுகளில் அபார வெற்றி பெற்று மிகப்பெரிய நெட் ரன் ரேட்டுடன் ஐபிஎல் புள்ளிகள் அட்டவணையில் குஜராத் டைட்டன்ஸுக்கு அடுத்த இடத்தில் 2வதாக 7 போட்டியில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று முன்னேறியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  பிரபர்ன் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்ற ஐபிஎல் 2022 தொடரின் 36வது போட்டியில் சற்றும் எதிர்பாராத விதமாக ஆர்சிபியை 69 ரன்களுக்குச் சுருட்டிய சன் ரைசர்ஸ் ஹைதாராபாத் பிறகு 8 ஓவர்களில் 72/1 என்று 9 விக்கெட்டுகளில் அபார வெற்றி பெற்று மிகப்பெரிய நெட் ரன் ரேட்டுடன் ஐபிஎல் புள்ளிகள் அட்டவணையில் குஜராத் டைட்டன்ஸுக்கு அடுத்த இடத்தில் 2வதாக 7 போட்டியில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று முன்னேறியுள்ளது. சன் ரைசர்ஸ் நெட் ரன் ரேட் இதனால் 0.691 என்று பிரமாதமாக உள்ளது.

  ஓரளவுக்கு ஸ்விங் உள்ள பார்க்க கிரீன் டாப் போன்ற விக்கெட்டில் டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது ஏன் என்று 2வது ஓவரை தென் ஆப்பிரிக்கா இடது கை வேகப்பந்து வீச்சாளர் யான்சென் வீசும்போதே தெரிந்தது.

  யான்சென் ஒரே ஓவரில் 3 விக்கெட்- கோலி 2வது கோல்டன் டக்:

  ஆர்சிபிக்கு தொடக்கமே பேரதிர்ச்சி காத்திருந்தது, 2வது ஓவரை இடது கை வேகப்பந்து வீச்சாளர் யான்சென் வீச, 2வது பந்தில் 5 ரன்கள் எடுத்திருந்த ஆர்சிபி கேப்டன் டுபிளெசிஸ் கிளீன் பவுல்டு ஆனார். ஆட முடியாத ஒரு பந்தாக அது அமைந்தது, பலத்த டென்ஷன் மற்றும் ஆரவாரத்துக்கிடையே இறங்கினார் கிங் கோலி, கேன் வில்லியம்சன் அங்குதான் கோலியை தான் ஏற்கெனவே படித்து வைத்திருக்கிறேன் என்பது போல் 2வது ஸ்லிப்பைக் கொண்டு வந்தார், மாஸ்டர் ஸ்ட்ரோக், யான்சென் பந்து ஒன்று கோலியின் உடலுக்கு குறுக்கே சாதாரண இடது கை ஸ்விங் பவுலர் பந்து போல்தான் சென்றது, தேவையில்லாமல் அதைப்போய் இடித்தார் பந்து எட்ஜ் ஆகி கரெக்டாக வில்லியம்சன் கொண்டு வந்த 2வது ஸ்லிப்பில் மார்க்ரமிடம் கேட்ச் ஆனது.

  அதே ஓவரில் ஹாட்ரிக் கிடைக்கவில்லை, ஆனால் 6வது பந்தில் இடது கை வீரர் அனுஜ் ராவத்துக்கு ஒரு பந்தை குறுக்காக வீச எட்ஜ் ஆகி மார்க்ரம் டைவ் அடித்து அருமையான கேட்சை எடுக்க இவரும் டக், ஆர்சிபி. 8/3 என்று அதிர்ச்சித் தொடக்கம் கண்டது.

  நடராஜன் அபாரம்:

  கிளென் மேக்ஸ்வெல் இறங்கி 2 பவுண்டரி அடித்து 12 ரன்களில் இருந்த போது யார்க்கர் நடராஜன் வந்தார். மேக்ஸ்வெல் நிலைமை புரியாமல் பந்தை மிட் ஆஃபுக்கு மேல் தூக்கி அடிக்க முனைந்து பந்து சரியாகச் சிக்கவில்லை, ஆனால் அங்கு கேன் வில்லியம்சன் மிக அருமையாக திகைப்பூட்டும் கேட்சை எடுக்க கிளென் மேக்ஸ்வெல் கதி அதோகதி. ஆர்சிபி 20/4. சுயாஷ் பிரபுதேசாய் அதிகபட்சமாக 15 ரன்கள் எடுத்து சுசித்திடம் ஸ்டம்ப்டு ஆனார். ஆர்சிபியின் இந்த ஆண்டின் சிறந்த வீரர் தினேஷ் கார்த்திக் இறங்கினார், சுசித்தின் பந்தை ஸ்வீப் ஆட முயன்றார். கிளவ்வில் உரசி கேட்ச் ஆனது, தினேஷ் கார்த்திக் டக் அவுட்.

  டி.நடராஜன்.

  ஷாபாஸ் அகமட் 7 ரன்களில் உம்ரன் மாலிக்கிடம் காலியானார் ஆர்சிபி 49/7. ஹர்ஷல் படேல் டி.நடராஜனின் புல் பந்தில் பவுல்டு ஆனார், ஸ்டம்ப் வண்டிச்சக்கரம் போல் சுழன்று எகிறியது. வைனிந்து ஹசரங்காவையும் நடராஜன் பவுல்டு செய்தார். முகமது சிராஜை புவனேஷ்வர் குமார் வீழ்த்த ஆர்சிபி 16.1 ஓவரில் 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

  சன் ரைசர்ஸ் தரப்பில் யான்சென், நடராஜன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சுசித் 2, உம்ரன் மாலிக், புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்.

  சன் ரைசர்ஸ் ஆதிக்க வெற்றி:

  69 ரன்கள் என்ற ஒன்றுமில்லாத இலக்கை எப்படி ஆட வேண்டுமோ அப்படி ஆடி விரட்டியது சன் ரைசர்ஸ், அதன் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டை வெளுத்து வாங்கி விட்டார், ஜோஷ் ஹேசில்வுட் தன் 3 ஓவர்களில் 6 பவுண்டரிகளை கொடுத்தார்.

  மேலும் முகமது சிராஜையும் அபிஷேக் சர்மா தூக்கி சிக்ஸ் விளாசினார். சிராஜ் 2 ஓவர்களில் 15 ரன்கள் கொடுக்க, 8 பவுண்டரி 1 சிக்சருடன் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஹர்ஷல் படேலை சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் 16 ரன்களில் 2 பவுண்டரிகள் அடிக்க கடையில் ராகுல் திரிபாதி ஹர்ஷல் படேலை அதியற்புதமான ஹை பிளிக் ஷாட்டில் ஸ்கொயர்லெக்கில் சிக்ஸ் விளாச 8 ஓவர்களில் 72/1 என்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆர்சிபையை உதைத்து அனுப்பியது. ஒருவிதத்தில் ஆர்சிபியாவது, டுபிளெசிசாவது, கோலியாவது கார்த்திகாவது என்று கேட்டு உதைத்தது போல்தான் இருந்தது.

  ஆட்ட நாயகனாக தன்முதல் ஓவரிலேயே ஆர்சிபியை குழி தோண்டி புதைத்த மார்க்கோ யான்சென் தேர்வு செய்யப்பட்டார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Faf du Plessis, IPL 2022, Kane Williamson, RCB, SRH, T natarajan, Virat Kohli