ஐபிஎல் 2022 தொடரில் ஆடுவதற்காக திருமணத்தை தள்ளி வைத்த ரஜத் படிதார்
ஐபிஎல் 2022 தொடரில் ஆடுவதற்காக திருமணத்தை தள்ளி வைத்த ரஜத் படிதார்
ரஜத் படிதார்
அன்று லக்னோவுக்கு எதிராக ஐபிஎல் 2022 எலிமினேட்டர் சுற்றில் அபாரமாக ஆடி 112 ரன்களை விளாசி வெற்றி நாயகனாகத் திகழ்ந்த ஆர்சிபி வீரர் ரஜத் படிதார், உண்மையில் இந்த ஐபிஎல் 2022 தொடரில் ஆர்சிபி தன்னை அழைத்ததை ஏற்று தன் திருமணத்தையே தள்ளி வைத்துள்ளார்.
அன்று லக்னோவுக்கு எதிராக ஐபிஎல் 2022 எலிமினேட்டர் சுற்றில் அபாரமாக ஆடி 112 ரன்களை விளாசி வெற்றி நாயகனாகத் திகழ்ந்த ஆர்சிபி வீரர் ரஜத் படிதார், உண்மையில் இந்த ஐபிஎல் 2022 தொடரில் ஆர்சிபி தன்னை அழைத்ததை ஏற்று தன் திருமணத்தையே தள்ளி வைத்துள்ளார்.
பிப்ரவரி மெகா ஏலத்தில் ரஜத் படிதார் ஏலம் எடுக்கப்படவில்லை. பணமழை ஐபிஎல் லீக் மற்றும் பிசிசிஐ எனும் பவர்ஃபுல் வாரியத்தின் அதிகார, பணபலத்தினால் உலகில் வேறெங்கும் சர்வதேச போட்டிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் ஐச்சி இருக்க 2 மாதகாலம் கோலாகல கிரிக்கெட் நடைபெற்று இப்போது முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
சரி! ஏலத்தில்தான் எந்த அணியும் எடுக்கவில்லையே என்று ரஜத் படிதாரின் குடும்பம் அவருக்கு திருமண ஏற்பாடுகளில் மும்முரம் காட்டியது. ஆனால் அங்குதான் ஒரு அதிர்ஷ்ட தேவதையின் காலம் தள்ளிப்போக, ஐபிஎல் அதிர்ஷ்ட தேவதை ரஜத் படிதாரை நோக்கி கண்சிமிட்டி வரவேற்றது, ஆம்! ஆர்சிபி அணி இவருக்கு அழைப்பு விடுத்தது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரஜத் படிதார், வந்த வாய்ப்பை இறுக்கப் பற்றிக் கொண்டார். அதுவும் நாக் அவுட் போட்டியில் சதம் எடுத்து தன் அணிக்கு ஒரு இறுதி வாய்ப்பை அளித்துள்ளார் ரஜத் படிதார், இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அகமதாபாத்தில் 2வது எலிமினேட்டரில் எதிர்கொள்கிறது ஆர்சிபி.
ரஜத் படிதார் டைமிங் அற்புதம், அப்படி டைமிங் இல்லாமல் ஆடிய ஷாட்களிலும் அதிர்ஷ்ட தேவதை படிதார் பக்கம் இருந்தாள். இதனால் 3 கேட்ச்கள் ட்ராப் செய்யப்பட்டன, அவர் 49 பந்துகளில் சதம் கண்டார் பிறகு 112 ரன்கள் எடுத்தார் படிதார்.
இந்நிலையில் ரஜத் படிதாரின் தந்தை மனோகர் படிதார் கூறும்போது, “ரட்லமிலிருந்து ரஜத்துக்கு ஒரு பெண்ணை திருமண ஏற்பாடு செய்திருந்தோம். மே 9ம் தேதி திருமணம் என்று திட்டமிட்டோம். சிறிய ஒரு நிகழ்ச்சியில் திருமணத்தை முடிக்க திட்டமிட்டு இந்தூரில் ஹோட்டல் ஒன்றையும் புக் செய்தோம். பெரிய திருமண நிகழ்ச்சியாக இல்லாமல் சிறிய அளவில் முடிக்க எண்ணியதால் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கவில்லை.” என்றார்.
பிறகு ஆர்சிபி அழைப்பு, இன்று ரஜத் படிதார ஒரு ஹீரோ. இப்போது ரஜத் படிதாரின் நிலையே வேறு. ஆர்சிபி செட்-அப்பில் அவருக்கு ஒரு நிரந்தர இடம் கிடைத்து விட்டது. 7 போட்டிகளில் 275 ரன்களை 156.25 என்ற அபார ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார் ரஜத் படிதார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.