Home /News /sports /

68 ஆல் அவுட் நினைவிருக்கிறதா ஆர்சிபி?- கோலி இருப்பாரா? இன்று அதிரடி ராஜஸ்தானுடன் மோதல்

68 ஆல் அவுட் நினைவிருக்கிறதா ஆர்சிபி?- கோலி இருப்பாரா? இன்று அதிரடி ராஜஸ்தானுடன் மோதல்

இன்று ராஜஸ்தான் - ஆர்சிபி மோதல்

இன்று ராஜஸ்தான் - ஆர்சிபி மோதல்

ஐபிஎல் 2022 தொடரின் இன்றைய செவ்வாய் கிழமை போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, அதிரடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஆர்சிபியின் முக்கிய பேட்ஸ்மெனான விராட் கோலி ரன்னுக்காக பாவம் முக்கி முனகுகிறார் ஊஹூம் ஒன்றும் செய்ய முடியவில்லை, அன்று சன் ரைசர்ஸுக்கு எதிராக 68 ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்ததோடு தன் பழைய ஐபிஎல் பார்முக்கும் வந்தது ஆர்சிபி.

மேலும் படிக்கவும் ...
    ஐபிஎல் 2022 தொடரின் இன்றைய செவ்வாய் கிழமை போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, அதிரடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஆர்சிபியின் முக்கிய பேட்ஸ்மெனான விராட் கோலி ரன்னுக்காக பாவம் முக்கி முனகுகிறார் ஊஹூம் ஒன்றும் செய்ய முடியவில்லை, அன்று சன் ரைசர்ஸுக்கு எதிராக 68 ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்ததோடு தன் பழைய ஐபிஎல் பார்முக்கும் வந்தது ஆர்சிபி.

    8 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றி, 3-ல் தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முந்தைய ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இந்த சீசனில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இது தான்.

    விராட் கோலி தொடர்ந்து 2 ஆட்டங்களில் ‘டக்-அவுட்’ ஆகி இருப்பது கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. இதே நிலை நீடித்தால் அவரது இடத்துக்கு ஆபத்து வந்து விடும் நிலையில் அவரே இந்த ஆட்டத்தில் உட்கார்ந்து கொள்வது நல்லது என்று படுகிறது. இதே போல் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், கேப்டன் பிளிஸ்சிஸ், ஷபாஸ் அகமது உள்ளிட்டோரும் ரன்மழை பொழிந்தால் தான் எதிரணிக்கு கடும் சவால் அளிக்க முடியும்.

    முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் எடுத்து பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. கொல்கத்தா, டெல்லி அணிகளுக்கு எதிராக தொடர்ந்து 200 ரன்களுக்கு மேல் குவித்து பிரமாதப்படுத்திய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் காட்டு பார்மில் உள்ளார். 7 ஆட்டங்களில் 3 சதம், 2 அரைசதம் உள்பட 491 ரன்கள் திரட்டியுள்ள பட்லரை முன்னமேயே பெவிலியன் அனுப்பினால்தான் எதிரணிக்கு அதாவது ஆர்சிபிக்கு வெற்றி வாய்ப்பு. இல்லையெனில் ஆட்டம் சடுதியில் முடிந்து விடும்.

    ராஜஸ்தான் பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா, ட்ரெண்ட் போல்ட் அட்டகாசம், அஸ்வின் டைட், செஹல் வெற்றி பவுலர், அவர் இதுவரை 18 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். முதலில் பெங்களூருவுக்கு எதிராக 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற ராஜஸ்தான் நிச்சயம் இன்று பழிதீர்க்கும் என்று எதிர்பார்க்கலாம். இன்று ராஜஸ்தான் வென்றால் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் சென்று விடும்.

    ஆர்சிபி உத்தேச லெவன்: டு பிளெசிஸ், அனுஜ் ராவத், ரஜட் பட்டிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், ஷாபாஸ் அகமட், ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், வனிந்து ஹசரங்கா, சிராஜ்.

    ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜாஸ் பட்லர், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஹெட்மையர், ரியான் பராக், கருண் நாயர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆபெட் மெக்காய், ட்ரெண்ட் போல்ட், செஹல், பிரசித் கிருஷ்ணா.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, Rajasthan Royals, RCB

    அடுத்த செய்தி