Home /News /sports /

‘Boom Boom' தினேஷ் கார்த்திக்.. இனி அவர்தான் பினிஷர்- கொஞ்சம் சச்சின், கொஞ்சம் டிவில்லியர்ஸ் கலவை ஆட்டம்

‘Boom Boom' தினேஷ் கார்த்திக்.. இனி அவர்தான் பினிஷர்- கொஞ்சம் சச்சின், கொஞ்சம் டிவில்லியர்ஸ் கலவை ஆட்டம்

தினேஷ் கார்த்திக் அற்புதம்

தினேஷ் கார்த்திக் அற்புதம்

நடப்பு ஐபிஎல் 2022 தொடரின் பினிஷர் என்றால் அது தினேஷ் கார்த்திக் தான் என்றால் மிகையாகாது, இன்று மட்டுமல்ல அவர் எப்போதுமே சிறந்த பினிஷர்தான். சர்வதேச அளவில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுப்பதில்லை, அப்படி வாய்ப்புக் கொடுத்தாலும் கண்ட டவுனில் அவரை இறக்கி விடுவது என்று அவரது திறமைகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

மேலும் படிக்கவும் ...
  நடப்பு ஐபிஎல் 2022 தொடரின் பினிஷர் என்றால் அது தினேஷ் கார்த்திக் தான் என்றால் மிகையாகாது, இன்று மட்டுமல்ல அவர் எப்போதுமே சிறந்த பினிஷர்தான். சர்வதேச அளவில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுப்பதில்லை, அப்படி வாய்ப்புக் கொடுத்தாலும் கண்ட டவுனில் அவரை இறக்கி விடுவது என்று அவரது திறமைகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் ஆர்சிபிக்காக அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக பினிஷ் செய்து காட்டினார். கொல்கத்தாவுக்கு எதிராகவும் சோபித்தார், நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தன் அனைத்து ஷாட் ரேஞ்சுகளையும் காட்டினார்.

  அதுவும் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தவித்து வரும்போது எந்த ஒரு பிரஷரும் இல்லாமல் இறங்கியது முதலே அபாரமான அதிரடிகளை ஆடினார், அதுவும் சாமர்த்தியமாக லெக் திசை இடைவெளிகளை பயன்படுத்தினார். வேகப்பந்து வீச்சாளர்களின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்துகளையெல்லாம் ஸ்கொயர்லெக் மிட் விக்கெட் என்று ஒரு சச்சின், டிவில்லியர்ஸ் கலவையில் பவுண்டரிக்கு அனுப்பினார், ஒரு கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கிற்கு பந்து வீசவும் முடியவில்லை, களவியூகமும் அமைக்க முடியவில்லை.

  தினேஷ் கார்த்திக்கின் பினிஷிங் திறமையை 2019-ல் புகழ்ந்த அஸ்வின், “தினேஷ் கார்த்திக்கின் புள்ளி விவரங்களை சும்மா பார்த்த போது அவர் சிறந்த பினிஷர்களுள் ஒருவர் என்பது ஆச்சரியமானதல்ல என்பது புரிந்தது. தினேஷ் கார்த்திக்கின் இந்த ஒரு பிம்பத்தைத் தான் அவரே பார்க்க விரும்பிய ஒரு இடமாகும்” என்று ட்வீட் செய்திருந்தார்.

  ஆனால் நேற்று அஸ்வினே தினேஷ் கார்த்திக்கின் அதிரடிக்கு இரையானார். நேற்று 170 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து தினேஷ் களமிறங்கும்போது ஆர்சிபி அணி 9வது ஓவரில் 87/5 என்ற நிலையில் இன்னொரு இழிவான தோல்வியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. வான்கடே பிட்சில் பந்துகள் திரும்பின. யஜுவேந்திர செஹல் தன்னை கைவிட்ட ஆர்சிபிக்கு எதிராக பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

  அஸ்வின் 14வது ஓவரை வீசிய போது முதல் 2 பந்தில் சிங்கிள்களையே கொடுத்தார். ஆனால் அதன் பிறகு அஸ்வின் கேரம் பால் வீச அது நோ-பால் ஆக, தினேஷ் கார்த்திக் பைன் லெக் மேல் ஒரு அபாரமான ஷாட்டில் பவுண்டரி விளாசினார். அடுத்த பந்து ஃப்ரீ ஹிட் , இம்முறை ஆஃப் ஸ்டம்பில்தான் வீசினார் அஸ்வின் ஆனால் பந்து புல் லெந்த் ஆக சைட் ஸ்க்ரீனுக்கு மேல் ஒரே தூக்குத் தூக்கி சிக்ஸருக்கு அனுப்பினார் தினேஷ். அடுத்த பந்தும் அஸ்வின் தலைக்கு மேல் பவுண்டரி. அடுத்த பந்தை கொஞ்சம் வேகமாக அஸ்வின் வீச பந்து எதிர்திசையில் திரும்பி டிகே பீட்டன் ஆனார். கடைசியில் அதியற்புதமான ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரியுடன் அஸ்வினின் ஓவரில் 21 ரன்களை எடுத்தார் தினேஷ்.

  நவ்தீப் சைனி வந்தார் அவரை அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசினார். இதன் மூலம் ஆர்சிபி வெற்றி பெற்றுவிடும் என்ற இலக்குக்கு சற்றே அருகில் கொண்டு வந்தார். செஹல்தான் ஒரே ஆயுதம் என்று கொண்டு வந்தனர், ஆனால் திறம்பட அவரையும் பார்த்து ஆடினார் தினேஷ் கார்த்திக். கடைசியில் 5 பந்துகள் மீதமிருக்கையில் ஆர்சிபி தன் 2வது வெற்றியை ஈட்டியது.

  தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 44 என்பது கிட்டத்தட்ட 200% ஸ்ட்ரைக் ரேட். தினேஷ் கார்த்திக்கின் ஒட்டுமொத்த கடைசி ஓவர் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 188% என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திறமைகள் மூலம் டி20 உலகக்கோப்பைக்கு தன் பெயரை இப்போதே பதிவு செய்துள்ளார் தினேஷ் கார்த்திக்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Dinesh Karthik, IPL 2022, Rajasthan Royals, RCB

  அடுத்த செய்தி