RCB vs PBKS - கிரிக்கெட்டின் பழமொழியை மறந்து விட்டோம்- தோல்விக்குப் பிறகு டுபிளெசிஸ்
RCB vs PBKS - கிரிக்கெட்டின் பழமொழியை மறந்து விட்டோம்- தோல்விக்குப் பிறகு டுபிளெசிஸ்
ஃபாப் டுபிளெசிஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 2 ஆட்டங்களில் முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது.மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 206 ரன் இலக்கை எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை தோற்கடித்தது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 2 ஆட்டங்களில் முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது.மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 206 ரன் இலக்கை எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை தோற்கடித்தது.
ஆர்சிபி அணி உப்பு விற்கப் போனால் மழைபெய்கிறது, மாவு விற்கப்போனால் காற்றடிக்கிற்து, எத்தனை அடித்தாலும் வெற்றி மட்டும் அந்த அணிக்கு லபிக்கவில்லை. என்பதே அந்த அணியின் சோகம். வெற்றிக்குப் பிறகு மயங்க் அகர்வால், இவர் பெரும்பாலும் தன் அங்க அசைவுகள்,ஆக்ரோஷம் ஆகியவற்றில் விராட் கோலியை அப்படியே ஈயடிச்சான் காப்பி அடிக்கிறார் பாவம், ஒரிஜினலாக இவருக்கு உடல் அசைவுகள் இல்லை போலும்.
மயங்க் அகர்வால் வெற்றிக்குப் பிறகு கூறியது: “வெற்றிக்கான 2 புள்ளிகள் மிகவும் முக்கியமானது. இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்தது. நாங்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டோம். பனி துளி காரணமாக 2-வது பேட்டிங் செய்வது மிகவும் எளிதாக இருந்தது. நாங்கள் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பெங்களூர் அணிக்கு கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் வரை கொடுத்து விட்டோம். எங்கள் வீரர்கள் திறமையை சரியான முறையில் வெளிப்படுத்தி உள்ளனர்” என்று பிளாஸ்டிக் பிட்சில் வென்றதை சிலாகித்துப் பேசினார்.
ஃபாப் டுபிளெசிஸ் கூறும்போது, ““10 ரன் இருக்கும் போது ஒடியன் சுமித் கேட்சை தவறவிட்டோம். அவர் உண்மையிலேயே மிகவும் சிறந்த அதிரடி வீரர் ஆவார். வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வது அவசியமாகும். கேட்ச்கள்தான் ஆட்டத்தை வெற்றி பெற வைக்கிறது, கேட்சஸ் வின் மேட்சஸ் என்பது கிரிக்கெட் பழமொழி” என்றார்.
பஞ்சாப் அணி 2-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை ஏப்ரல் 1-ந் தேதியும், பெங்களூர் அணி அடுத்த ஆட்டத்தில் 30-ந் தேதி கொல்கத்தாவையும் எதிர்கொள்கிறது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.