விராட் கோலி மீண்டும் கிங் கோலியின் பாதைக்குத் திரும்பியுள்ளார், குஜராத்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஆட்டத்தில் கிங் விராட் கோலி அரைசதம் எடுத்து 52 ரன்களுடன் ஆடி வருகிறார். இதில் 6 பவுண்டரி 1 சிக்ஸ் அடங்கும்.
அவருடன் படிதார் என்ற வீரர் 27 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்கள் விளாசி 47 ரன்களில் இருக்கிறார், ஆர்சிபி அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து தற்போது டுபிளெசிஸ் (0) விக்கெட்டை இழந்து 13 ஓவர்களில் 102 என்று வலுவான நிலையில் உள்ளது, இங்கிருந்து ஓவருக்கு 10 ரன்கள் எடுத்தால் ஸ்கோர் 172 என்று ஒரு வலுவான நிலையை எட்டும்.
விராட் கோலி ஒப்பனிங்கில் இறங்கி பிரமாதமாக ஆடினார், அதிவேக பவுலர் லாக்கி பெர்கூசன் வீசிய லோ புல்டாஸை நேராக சிக்ஸ் விளாசினார், பிறகு அவர் ஒரு பந்தை குத்தி எழுப்ப அப்பர் கட்டில் பவுண்டரி அடித்தார், எந்த வித பிரச்சனையும் இல்லாமல் ஆடினார். கோலி, ஆனால் ரஷீத் கான் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்திருப்பார், ரஷீத் கான் இடது புறம் வந்த கேட்சை தவற விட்டார்.
கடைசியில் ஷமி பந்தை தள்ளி விட்டு 1 ரன் எடுத்து 14 ஆட்டங்களில் முதல் அரைசதம் எடுத்த விராட் கோலி ஐபிஎல் கரியரில் 43வது அரைசதம் எடுத்து ஆடிவருகிறார்.
விமர்சகர்களின் வாயை இந்த அரைசதம் மூலம் அடைத்தால் போதாது, அவர் இந்தப் போட்டியில் சதம் எடுத்தால்தான் ரசிகர்களின் பசி அடங்கும்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.