Home /News /sports /

மேத்யூ வேட் நாட் அவுட்டுக்கு அவுட், கோலிக்கு ரஷீத் விட்ட கேட்ச், மேக்ஸ்வெல் ஸ்டம்பில் பட்டும் பைல் விழவில்லை- ஆர்சிபி வெற்றி ரகசியம்

மேத்யூ வேட் நாட் அவுட்டுக்கு அவுட், கோலிக்கு ரஷீத் விட்ட கேட்ச், மேக்ஸ்வெல் ஸ்டம்பில் பட்டும் பைல் விழவில்லை- ஆர்சிபி வெற்றி ரகசியம்

கோலி - பாண்டியா

கோலி - பாண்டியா

இந்திய அணியைப் பொறுத்தவரை பெருத்த நிம்மதி விராட் கோலி நேற்று 73 ரன்கள் குவித்து மீண்டும் வெற்றி விரட்டல் பாதைக்கு திரும்பி கிங் கோலியாக மாறியதே, இது ஆர்சிபிக்கு பிளே ஆஃப் நம்பிக்கையை அளித்துள்ளது. ஆனாலும் ஆர்சிபி நெட் ரன் ரேட் மைனஸ் 0.253 என்று எதிர்மறையாகவே உள்ளது. எனவே டெல்லி தோற்க வேண்டும், தோற்றால் ஆர்சிபிக்கு வாய்ப்பு இல்லையெனில் வெளியேற வேண்டியதுதான்.

மேலும் படிக்கவும் ...
  இந்திய அணியைப் பொறுத்தவரை பெருத்த நிம்மதி விராட் கோலி நேற்று 73 ரன்கள் குவித்து மீண்டும் வெற்றி விரட்டல் பாதைக்கு திரும்பி கிங் கோலியாக மாறியதே, இது ஆர்சிபிக்கு பிளே ஆஃப் நம்பிக்கையை அளித்துள்ளது. ஆனாலும் ஆர்சிபி நெட் ரன் ரேட் மைனஸ் 0.253 என்று எதிர்மறையாகவே உள்ளது. எனவே டெல்லி தோற்க வேண்டும், தோற்றால் ஆர்சிபிக்கு வாய்ப்பு இல்லையெனில் வெளியேற வேண்டியதுதான்.

  கோலியின் இன்னிங்ஸ் முழு மூச்சான கட்டுப்பாட்டுடன் ஆடப்பட்டதாகக் கூற முடியாது, ஆரம்பத்தில் ஷமியின் அவுட் ஸ்விங்கரில் தடவி பீட்டன் ஆனார், பிறகு ஹர்திக் பாண்டியா பந்தில் இன்சைடு எட்ஜ் ஆகி குச்சி பெயர்ந்திருக்க வேண்டியது, ஆனால் அதிர்ஷ்டவசமாக பவுண்டரி போனது, பிறகு மிக அருமையாக ஹர்திக் பாண்டியா ஸ்கொயர்லெக்கில் ரஷீத் கானை பவுண்டரியில் நிறுத்தி வைத்திருந்தார், கோலியின் பிளிக் ஷாட் ஒன்று நேராக அவர் அந்த இடத்தில் நின்றிருந்தால் கையில் போய் உட்கார்ந்திருக்கும். ஆனால் ரஷீத் கான் முன்னால் சற்று கூடுதலாக வந்து விட பந்து பின்னால் போக இவர் பின்னால் எம்பியெல்லாம் பார்த்து கேட்சை கோட்டை விட்டார். இது ஒரு மகா அதிர்ஷ்டம்.

  இது இப்படி என்றால் இன்னொரு பேரடிர்ஷ்டம், கிளென் மேக்ஸ்வ்ல் இறங்கியவுடனேயே ரஷீத் கான் கூக்ளி ஒன்று லெக் ஸ்டம்பை பதம் பார்த்தது, பந்து பட்டதற்கான லைட் எரிந்தது, ஆனால் பைல்கள் விழவில்லை. சாய் கிஷோரை கோலி சரியாகக் கணிக்க முடியவில்லை அதனால் அவரை ஜாக்கிரதையாக ஆடி முடித்து விட்டார். ஆனால் ரஷீத் கானை ஸ்ட்ரெய்ட் சிக்ஸ் அடித்த போது கிங் கோலி இஸ் பேக் என்பது நமக்கு நிம்மதி அளிக்கும் ஒன்று. ஏனெனில் இங்கிலாந்தில் பெரிய தொடர் இருக்கிறது, அங்கு டெஸ்ட் தொடரை வென்றாக வேண்டும் என்பது ஐபிஎல் கிரிக்கெட்டை தாண்டிய இந்திய லட்சியமாகும்.

  மேத்யூ வேட் நாட் அவுட், சஹாவை இல்லாத சிங்கிளுக்கு இழுத்து விட்ட ஹர்திக் பாண்டியா:

  ஷுப்மன் கில், ஹெசில்வுட்டின் அருமையான பந்துக்கு எட்ஜ் ஆகி வெளியேறினார், மேக்ஸ்வெல் ஒரே ஸ்லிப்பில் இடது கையால் பாய்ந்து பிடித்த கேட்ச் மேட்சுக்கு ஒரு உத்வேகத்தை அளித்தது. மேக்ஸ்வெல் தினம் என்று இதைக் கூறலாம் ஆஃப் ஸ்பின்னை பவர் ப்ளேயில் போட்டு 2 ஓவர்கள்ல் 2 ரன்கள்தான் கொடுத்தார், அதில் மேத்யூ வேடின் விக்கெட், இது நாட் அவுட், நடுவரின் கோணப்பார்வையினால் இது அவுட் ஆக தீர்ப்பளிக்கப்பட்டது.

  ஸ்வீப் ஆடினார் வேட் பந்து அவரது மட்டையின் கீழ் விளிம்பில் பட்டது போல்தான் இருந்தது. கள நடுவர் எல்.பி. என்று கையை உயர்த்தினார். அவர் உடனேயே ரிவியூ கேட்டு விட்டார். ரிவியூவில் ஒரு ஆங்கிளில் பந்து மட்டையில் பட்டது போல்தான் தெரிந்தது, ஸ்னிக்கோவில் மட்டையில் பட்டதற்கான அடையாளம் இல்லை, ஒரு சைடு ஆங்கிளில் மட்டும்தான் மட்டையில் பட்டது போல் இருந்தது. எப்படியோ அவுட் கொடுத்து விட்டனர், அவர் வெறுப்பில் ஹெல்மெட், மட்டையை தூக்கி எறிந்தது வைரல் வீடியோவாகியுள்ளது. நம் கேள்வி என்னவெனில் அது ஷார்ட் பிட்ச் பந்து நல்ல தொலைவில் பிட்ச் ஆன பந்து ஸ்டம்பை அடிக்குமா என்பதை கள நடுவர் எப்படி அவ்வளவு துல்லியமாக முடிவு செய்ய முடியும் என்பதே. ஒரு காலத்தில் ஸ்பின்னர் ஷார்ட் பிட்ச் பந்துக்கு நடுவர்கள் எல்.பி. கொடுக்க மாட்டார்கள், ஆனால் எது எப்படியிருந்தாலும் ரீப்ளேயில் அது பவுல்டு என்று காட்டியது, எனவே நடுவர் நாட் அவுட் என்று கூறியிருந்தாலும் டுபிளெசிஸ் ரிவியூ செய்திருந்தால் அது அவுட் என்றுதான் டிவி நடுவரால் தீர்ப்பாகியிருக்கும்.

  ஆனால் நடுவர் நாட் அவுட் என்று கூறிவிட்டதால் டுபிளெசிஸ் ரிவியூ கேட்க வேண்டாம் என்று கூட முடிவெடுத்திருக்கலாம். எப்படியிருந்தாலும் இந்த தீர்ப்பின் தாக்கம் குஜராத் பேட்டிங்கில் வெளிப்பட்டு 169 ரன்களையே எடுக்க முடிந்தது.

  விருத்திமான் சஹா 22 பந்துகளில் 31 என்று மீண்டும் அருமையாக ஆடிக்கொண்டிருந்தார். ஹர்திக் பாண்டியா இல்லாத ஒரு சிங்கிளுக்கு அவசரம் அவசரமாக அவரை அழைத்து இழுத்து விட்டார், சஹா பீல்டர் மிஸ் செய்கிறாரா என்று பார்த்து கொஞ்சம் நிதானித்து கிளம்பினார் என்று கூறினாலும், அப்படித்தானே உள்ளுணர்வு சொல்லும், பாண்டியாவுக்கு இது தன் ரன், ஓட வேண்டும் அவ்வளவே, இதனால் சஹா ரன் அவுட் ஆனார்.

  மேக்ஸ்வெல் தினம்:

  கிளென் மேக்ஸ்வெல் அற்புதமான கேட்சை எடுத்து ஷுப்மன் கில்லை வெளியேற்றினார், மேத்யூ வேடை எல்.பி. செய்தார். 4 ஓவர் 28 ரன் 1 விக்கெட் என்று சிக்கனம் காட்டியதோடு, பேட்டிங்கில் ரஷீத் கான் பந்தில் பவுல்டு ஆகி பைல் விழாமல் தப்பிய பிறகு 18 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 40 நாட் அவுட். உண்மையில் ஆட்ட நாயகன் விருது இவருக்குத்தான் கொடுக்க வேண்டும் ஆனால் விராட் கோலிக்குக் கொடுக்கப்பட்டது.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Cricket, Gujarat Titans, Hardik Pandya, IPL 2022, RCB, T20, Virat Kohli

  அடுத்த செய்தி