IPL 2022 RCB vs GT- பார்முக்கு வந்தார் கோலி, ஆனால் ஸ்ட்ரைக் ரேட் மந்தம்- ஆர்சிபி 170 ரன்கள் மட்டுமே
IPL 2022 RCB vs GT- பார்முக்கு வந்தார் கோலி, ஆனால் ஸ்ட்ரைக் ரேட் மந்தம்- ஆர்சிபி 170 ரன்கள் மட்டுமே
கோலி அரைசதம்
பிரபர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஐபிஎல் 43வது ஆட்டத்தில் ஆர்சிபி அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து 170/6 என்று முடிந்தது. விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்தது அந்த அணியின் ஸ்கோரை குறைத்துள்ளது.
பிரபர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஐபிஎல் 43வது ஆட்டத்தில் ஆர்சிபி அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து 170/6 என்று முடிந்தது. விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்தது அந்த அணியின் ஸ்கோரை குறைத்துள்ளது.
மாறாக அவருடன் ஆடிய ரஜத் படிதார் 32 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 52 ரன்களை விரைவு கதியில் எடுத்தார். ஃபாஃப் டு பிளெசிஸ் கால்களை நகர்த்தாமலேயே பழைய பவுலர் பிரதீப் சங்வானிடம் எட்ஜ் ஆகி சகாவிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். ஆர்சிபியை விடாது துரத்துகிறது டக்குகள். சங்வானுக்கு வயது 32, ஆனாலும் அவர் 4 ஓவர் 19 ரன்கள் 2 விக்கெட் என்று அசத்தினார்.
அதன் பிறகு படிதார் கோலி இணைந்தனர். கோலி ஷமியின் முதல் ஓவரிலேயே அருமையாக ஒரு ஆஃப் ட்ரைவ் ஒரு பிளிக் பவுண்டரியை எடுத்து 9 ரன்களைச் சேகரித்தார். பிறகு ஷமியை மீண்டும் ஒரு புல் ஷாட்டில் டாப் எட்ஜ் பவுண்டரி விளாசினார். 5வது ஓவரில் ஜோசப் வந்த போது 2 பவுண்டரிகளை அடித்த கோலி 18 பந்துகளில் 24 ரன்கள் என்று பாசிட்டிவாகத்தான் சென்று கொண்டிருந்தார், ஆனால் அடுத்த 35 பந்துகளில் 34 ரன்களையே எடுத்து மந்தம் காட்டினார், இதனால் 53 பந்துகளில் 58 ரன்களை எடுத்து ஷமியின் அற்புதமான யார்க்கரில் ஆஃப் ஸ்டம்ப் ஆடிப்போய் பவுல்டு ஆகி வெளியேறினார்.
படிதாரும் கோலியும் 99 ரன்களைச் சேர்க்க 12 ஓவர்கள் எடுத்துக் கொண்டனர், படிதார் முதலில் அவுட் ஆனார். பிறகு 17வது ஓவரில்தான் கோலி அவுட் ஆனார், ஆனால் 58 ரன்களையே அவர் எடுக்க முடிந்தது, ஒருவேளை அவுட் ஆகாமல் நின்றிருந்தால் ஸ்ட்ரைக் ரேட்டை அவர் மேம்படுத்தியிருக்கலாம், ஆனால் 17 ஓவர் வரை நின்று 58 ரன்கள்தான் அவரால் எடுக்க முடிந்தது.
மேக்ஸ்வெல் 33 ரன்களை விளாசினார். இதை அவர் 18 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் எடுத்தார். தினேஷ் கார்த்திக் 2 ரன்களில் ரஷீத் கான் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று டாப் எட்ஜில் வெளியேறினார். கடைசியில் மஹிபால் லோம்ரோர் 8 பந்துகளில் 16 ரன்கள் விளாசினார், இவரும் ஆட்டமிழந்தார், ஆனால் இவர் தூக்கி அடித்த ஷாட் மில்லரால் கேட்ச் பிடிக்கப்பட்டாலும் மேலே கேபிளில் பட்டதால் டெட் பால் ஆனது, அதன் பிறகு ஒரு சிக்ஸ் அடித்தார் மஹிபால் லோம்ரோர். அவரது இன்னிங்ஸினால் ஆர்சிபி 170/6 என்று முடிந்தது.
குஜராத் தரப்பில் சங்வான் 4 ஓவர் 19 ரன் 2 விக்கெட். ரஷீத் கான் 4 ஓவர் 29 ரன் 1 விக்கெட். ஷமி, பெர்கூசன், ஜோசப் தலா 1 விக்கெட்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.