Home /News /sports /

IPL 2022 CSK vs RCB-தோனி தன்னைத் தானே நீக்கிக் கொள்வாரா?- வெற்றி பெற சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?

IPL 2022 CSK vs RCB-தோனி தன்னைத் தானே நீக்கிக் கொள்வாரா?- வெற்றி பெற சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?

தோனி

தோனி

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி படுசொத்தையாக ஆடி வருகிறது, அந்த அணிக்கு ஒரு கேரக்டரே இல்லாமல் ஆடுகிறது, பவுலிங், பேட்டிங் என்று எல்லாமே சொதப்பலாகி வருகிறது, இதற்குக் காரணம் 2-3 சீசன்களாகவே ஒரே அணியை வைத்துக் கொண்டு புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காததுதான் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
    நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி படுசொத்தையாக ஆடி வருகிறது, அந்த அணிக்கு ஒரு கேரக்டரே இல்லாமல் ஆடுகிறது, பவுலிங், பேட்டிங் என்று எல்லாமே சொதப்பலாகி வருகிறது, இதற்குக் காரணம் 2-3 சீசன்களாகவே ஒரே அணியை வைத்துக் கொண்டு புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காததுதான் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    சமீபத்தில் கேப்டன்சியில் செய்யப்படும், களவியூகத்தில் செய்யப்படும், பவுலிங்கில் செய்யப்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தோனி தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவில்லை, அவரே கேப்டன்சியில் கொஞ்சம் வீக்தான், இப்படியிருக்க ஜடேஜாவை களமிறக்கினார், ஆனால் தோனிதான் இப்போதும் கேப்டன்சி செய்து வருகிறார். தோனியின் கேப்டன்சியில் தோல்வி என்பதை ஜீரணிக்க முடியாத அவரது ரசிகர்கள் ஜடேஜாதான் கேப்டன்சி செய்கிறார் என்று நம்பி வருகின்றனர். ஆனால் யார் கேப்டன்சி செய்தாலும், பாண்டியா, சஞ்சு சாம்சன், ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஆகியோரிடம் உள்ள ஒரு புதுசான தினுசு இல்லை.

    சிஎஸ்கே முதலில் டுபிளெசிசை விட்டிருக்கக் கூடாது, அவரை வைத்திருந்து கேப்டன்சியை அவரிடம் கொடுத்திருக்க வேண்டும். அல்லது ரெய்னாவை ஈகோவினால் வெளியே அனுப்பாமல் வைத்திருந்து அவரிடமாவது கேப்டன்சியைக் கொடுத்திருக்கலாம் ஆனால் இன்று சிஎஸ்கே திண்டாடி வருகிறது.

    ஓப்பனர் ருதுராஜ் கெய்க்வாடுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தோனி புகழ்பாடுவதை தவிர உருப்படியாக ஏதாவது செய்கிறாரா என்பதும் தெரியவில்லை. முதலில் நியூசிலாந்தின் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர் டெவன் கான்வேயை தொடக்கத்தில் இறக்க வேண்டும், அவரே விக்கெட் கீப்பிங்கும் செய்வார், எனவே அவரையும் ராபின் உத்தப்பாவையும் தொடக்கத்தில் இறக்கி விட வேண்டும்.

    மொயீன் அலி 3ம் நிலையில் இறங்க வேண்டும். ஜடேஜா 4ம் நிலை, ஷிவம் துபே 5ம் நிலை, பிராவோ, ஜோர்டான், லெக் பிரேக் பவுலர் பிரசாந்த் சோலங்கி, ஹங்கர்கேகர், முகேஷ் சவுத்ரி, கே.எம்.ஆசிப் என்று லைன் அப் வைத்து சோதித்துப் பார்க்க வேண்டும்.

    ஆகவே, தோனி கிடையாது, ராயுடு ஓரிரு போட்டிகளுக்கு இருக்கக் கூடாது, லெவன் இப்படியிருக்க வேண்டும்: டெவன் கான்வே, ராபின் உத்தப்பா, மொயின் அலி, ஜடேஜா, ஷிவம் துபே, பிராவோ, ஜோர்டான், ஹங்கர்கேகர், பிரசாந்த் சோலங்கி, முகேஷ் சவுத்ரி, கே.எம்.ஆசிப்

    அடுத்ததாக ஆர்.சி.பி அணியுடன் சென்னை மோத உள்ளது. இந்த போட்டியிலும் தோல்வி பெரும் பட்சத்தில் சென்னை அணியின் பிளே ஆப் கனவு இந்த ஆண்டு முடிவுக்கு வந்துவிடும்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: CSK, Dhoni, IPL 2022, RCB

    அடுத்த செய்தி