Home /News /sports /

தீபக் சாஹர் காயம் குறித்த அதிர்ச்சித் தகவல் - கடும் சிக்கலில் சென்னை சூப்பர் கிங்ஸ்

தீபக் சாஹர் காயம் குறித்த அதிர்ச்சித் தகவல் - கடும் சிக்கலில் சென்னை சூப்பர் கிங்ஸ்

தீபக் சாஹர்

தீபக் சாஹர்

 சிஎஸ்கே அணியின் மெயின் ஸ்டார் தீபக் சாஹர் ஐபிஎல் 2022 தொடர் முழுதிலுமே ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, அவருக்கு ஏற்கெனவே இருக்கும் காயத்துடன் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் முதுகு காயமும் சேர்ந்து விட்டது.

    சிஎஸ்கே அணியின் மெயின் ஸ்டார் தீபக் சாஹர் ஐபிஎல் 2022 தொடர் முழுதிலுமே ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, அவருக்கு ஏற்கெனவே இருக்கும் காயத்துடன் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் முதுகு காயமும் சேர்ந்து விட்டது. இது தொடர்பாக பிசிசிஐ-யிடமிருந்து சிஎஸ்கே அணிக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் அளிக்கப்படவில்லை என்றாலும் இதுதான் தற்போதைய நிலை என்று தெரிகிறது.

    வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக காயமடைந்த சாஹர் பெங்களூரு என்.சி.ஏ.வில் ஒருமாதகாலமாக மறுவாழ்வு சிகிச்சையில் இருந்து வருகிறார். இன்ஹ காயத்திலிருந்து மீண்டு ஏப்ரலில் சிஎஸ்கே அணியுடன் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இப்போது இந்த முதுகுக் காயம் அவரை மேலும் ஐபிஎல் 2022 தொடரிலிருந்து வெகுவாக அன்னியப்படுத்தியுள்ளதாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ செய்திகள் தெரிவிக்கின்றன.

    தீபக் சாஹர் வந்துவிட்டால் பந்துவீச்சில் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். தீபக் சஹார், டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா என பந்துவீச்சுத் துறை வலிமை பெற்றுவிடும். இதனால், தீபக் சாஹரின் வருகைக்காக தோனி முதல் ஜடேஜா வரை அனைவரும் காத்துக்கிடக்கின்றனர். அவருக்கு தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் குணமாகி, பயிற்சியை தொடங்கிவிட்டார் என கடந்த வாரம் தகவல் வெளியாகியிருந்ததால், ஏப்ரல் 20ஆம் தேதிக்குள் அணியில் இணைந்துவிடுவார் என்றுதான் கருதப்பட்டது.

    தீபக் சாஹார் பவர் பிளேவில் விக்கெட்களை வீழ்த்தி, துவக்கத்திலேயே நெருக்கடியை ஏற்படுத்தக் கூடியவர். இவர் இல்லாததால் சிஎஸ்கே, கடந்த நான்கு போட்டிகளில் பவர் பிளேவில் ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியுள்ளது.  புதிய பந்தில் ஒரு ஸ்விங் பந்துவீச்சாளர் மற்றும் திறமையான லோயர்-ஆர்டர் ஹிட்டர், சாஹர் இல்லாதது ஏற்கனவே இந்த சீசனில் இதுவரை சூப்பர் கிங்ஸ் அணியின் சமநிலையை பாதித்துள்ளது.

    எனினும் மற்ற வீரர்களில், சூப்பர் கிங்ஸ் கேஎம் ஆசிஃப் மற்றும் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோர் வரவிருக்கும் போட்டிகளில் அவர்களுக்காக புதிய பந்தில் வீச முடியும்.
    இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: CSK, IPL 2022

    அடுத்த செய்தி