Home /News /sports /

IPL 2022 Kohli- இந்த ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பி ‘கிங் கோலி’க்குத்தான் - ஏன் தெரியுமா?

IPL 2022 Kohli- இந்த ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பி ‘கிங் கோலி’க்குத்தான் - ஏன் தெரியுமா?

ஐபிஎல் மார்ச் 26ல் தொடக்கம், ஆர்சிபி சிஎஸ்கே ஒரே பிரிவில்

ஐபிஎல் மார்ச் 26ல் தொடக்கம், ஆர்சிபி சிஎஸ்கே ஒரே பிரிவில்

வரவிருக்கும் ஐபிஎல் 2022 தொடரில் விராட் கோலி 2013க்குப் பிறகு முதல் முறையாக ஆர்சிபி கேப்டனாக இறங்காமல் வீரராக இறங்குகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அவரது பேட்டிங் சமீப காலமாக ஊற்றி மூடிகொண்டிருக்கும் நிலையில் ஐபிஎல் 2022 தான் தன் பேட்டிங்குக்கு கதி மோட்சம் என்று கோலி மிக சீரியசாக ஆடுவார்.

மேலும் படிக்கவும் ...
  வரவிருக்கும் ஐபிஎல் 2022 தொடரில் விராட் கோலி 2013க்குப் பிறகு முதல் முறையாக ஆர்சிபி கேப்டனாக இறங்காமல் வீரராக இறங்குகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அவரது பேட்டிங் சமீப காலமாக ஊற்றி மூடிகொண்டிருக்கும் நிலையில் ஐபிஎல் 2022 தான் தன் பேட்டிங்குக்கு கதி மோட்சம் என்று கோலி மிக சீரியசாக ஆடுவார்.

  ஐபிஎல் தொடரில் இதுவரை கோலிதான் அதிக ரன்களை எடுத்த சாதனை வீரராகத் திகழ்கிறார். கடந்த இரண்டு சீசன்களில் கோஹ்லி பேட்டிங்கில் சிறப்பாக விளையாடவில்லை. கோலியின் ஸ்டிரைக் ரேட் பரபரப்பான விவாதத்திற்குரியது, இருப்பினும் அவரது உரிமையாளர் ரூ. 15 கோடி ரூபாய் ஒப்பந்தத்துடன் அவர் மீது நம்பிக்கை வைத்து வருகிறது.

  புள்ளிவிவரங்களில் ஆர்வமுள்ள ரசிகர்களுக்கு, கோலி அனைத்து வடிவங்களிலும் சதங்கள் அடிக்காததைச் சுற்றியுள்ள முணுமுணுப்புகள் அதிகரித்துள்ளன. ஐபிஎல் 2022 இன் போது கோலி சதமெடுக்கவில்லை என்றாலும், வரவிருக்கும் சீசனில் கோலி மீண்டும் ஃபார்மில் வந்து ஆரஞ்சு தொப்பியைப் பெறுவதற்கான மூன்று காரணங்கள் இங்கே உள்ளன:

  1. ஐபிஎல் அணியின் கேப்டன் என்ற சுமை இல்லை:

  ஐபிஎல் 2021 இன் இறுதியில், 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு முன் டி20ஐ கேப்டன்சி குறித்த அவரது அறிவிப்பைப் போலவே, சீசனுக்குப் பிறகு ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்தார். இப்போது எந்த வடிவத்திலும் கேப்டனாக இல்லை, கேப்டன்சி சுமையை இறக்கி வைத்த பிறகே கோலி எப்படி விளையாடுகிறார் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

  அவர் இந்திய கேப்டனாக பெருமை வாய்ந்த சாதனை படைத்திருந்தாலும், RCB உடன் அதே வெற்றியைப் பிரதிபலிக்க முடியவில்லை. கோப்பையை இன்னும் வெல்லவில்லை. 2016 இல் சாதனைப் பருவத்தில் கூட, நட்சத்திர பேட்டிங் செய்தும் அந்த சீசன் அவருக்கு பதிலளிக்க முடியாத கேள்விகளைக் கேட்டது. வீரர்களின் மன உறுதியைக் காப்பாது, செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் அணித் தேர்வுகளை நிர்வகிப்பதற்கான அழுத்தம் இல்லாமல் விளையாடுவது கோலியை தனது சிறந்த நிலைக்குத் திரும்ப அனுமதிக்கும்.

   

  2. கிரிக்கெட்டிலிருந்து கொஞ்சம் விலகியிருந்து திரும்பியுள்ளார்:

  தோல்வியுற்ற டி 20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு கோலிடி 20 கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததில் இருந்து, டீம் இந்தியா முன்னாள் கேப்டனின் பணிச்சுமையை கவனமாக நிர்வகித்துள்ளது. நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் பெரும்பாலான உள்நாட்டுத் தொடர்களை கோலி தவறவிட்டது மட்டுமல்லாமல், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கைக்கு எதிரான உள்நாட்டில் நான்கு டி20 போட்டிகளுக்கு ஓய்வளிக்கப்பட்டார்.

  அவர் எங்கு விளையாடினாலும் முதல் பெயராக கோலியின் பெயர்தான் இருக்கும். 33 வயதான கோலி இன்னும் உடல் தகுதியின் உச்சத்தில் இருந்தாலும் அவரது பணிச்சுமையால் அவரது பேட்டிங் பின்னடைவு கண்டது. . RCB இன் முன்னாள் கேப்டன் கோலி தனது அணிக்குத் திரும்புவார் மற்றும் 2022 ஐபிஎல் தொடரில் நிச்சயம் விளாசல் உண்டு என்று தெரிகிறது.

  3. அனுபவமிக்க வெளிநாட்டு வீரர்கள் உடனிருக்கின்றனர்:

  கடந்த இரண்டு சீசன்களில், பேட்டிங் சரிவுகளுக்கு எதிராக அணிக்கு ஒருவித பாதுகாப்பை வழங்க கோலி ஒரு நங்கூரம் வகித்துள்ளார். இது 2019 சீசனுடன் ஒப்பிடுகையில் மேம்பட்ட அணி செயல்திறன்களை விளைவித்தாலும், முன்னாள் கேப்டனின் சொந்த ஸ்ட்ரைக் ரேட் மற்றும் மேட்ச்-வின்னிங் திறன் ஆகியவை இந்த அணுகுமுறையால் பாதிக்கப்பட்டன.

  சென்னை சூப்பர் கிங்ஸுடன் பரபரப்பான பட்டத்தை வென்ற சீசனுக்குப் பிறகு அணிக்குள் நுழையும் ஃபாஃப் டு பிளெசிஸின் இருப்பு மற்றும் பிற லீக்குகளில் அபாரமான ஆட்டங்கள், அவரது சொந்த தாக்குதல் ஆட்டத்தில் கோலியின் நம்பிக்கையை நிச்சயமாக அதிகரிக்கும். ஆரம்பத்தில் நிதானம் கடைப்பிடித்து கேப்களில் பந்தை ஆடி ரன்கள் குவிப்பதோடு டி20 போட்டியின் இறுதிக் கட்டத்தில் அவர் பவுண்டரி விளாசும் திறனும் இந்த முறை முன்னேற்றம் காணும். இதனடிப்படையில் அவர் இந்த ஐபிஎல் 2022 தொடரில் ஆரஞ்சு தொப்பிக்கு சொந்தக் காரராகத் திகழ்வார் என்று எதிர்பார்க்கலாம்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: IPL 2022, RCB, Virat Kohli

  அடுத்த செய்தி