IPL 2022 RCB: தமிழில் பேச முடியவில்லையே - தினேஷ் கார்த்திக் ஆதங்கம்
IPL 2022 RCB: தமிழில் பேச முடியவில்லையே - தினேஷ் கார்த்திக் ஆதங்கம்
தினேஷ் கார்த்திக்
கொல்கத்தா அணியில் வருண் சக்ர்வர்த்தியிடம் தமிழில் பேசுவேன், அது போன்று ஆர்சிபியில் பேச ஆளில்லை, தமிழில் இவர்களிடம் பேச முடியவில்லை. ஹிந்தி, அங்கிலம்தான் பேசுகிறார்கள் என்கிறார் தினேஷ் கார்த்திக்.
கொல்கத்தா அணியில் வருண் சக்ர்வர்த்தியிடம் தமிழில் பேசுவேன், அது போன்று ஆர்சிபியில் பேச ஆளில்லை, தமிழில் இவர்களிடம் பேச முடியவில்லை. ஹிந்தி, அங்கிலம்தான் பேசுகிறார்கள் என்கிறார் தினேஷ் கார்த்திக்.
அன்று தனது முந்தைய அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக கடைசியில் தினேஷ் கார்த்திக் நெருக்கமான போட்டியில் வெற்றிகரமாக பினிஷ் செய்தார். முதல் போட்டியிலும் 14 பந்துகளில் 32 விளாசினார் தினேஷ் கார்த்திக்.
இந்நிலையில் ஆர்சிபிக்கும் கொல்கத்தாவுக்கும் இடையேயான வித்தியாசத்தை தன் அனுபவத்தின் வாயிலாக வெளிப்படுத்தினார் தினேஷ் கார்த்திக். அதாவது, “
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டீமில் இருந்து எந்த ஒன்றை நான் அதிகம் மிஸ் செய்கிறேன் என்றால் அது பவுலர்களுடன் தமிழில் பேசுவது தான். ஆர்சிபியில் என்னால் தமிழில் யாரிடமும் பேச முடியாது. அது தான் வருதமளிக்கிறது.
அதேபோல் தனது இதயத்திற்கு நெருக்கமான டீமை எதிர்த்து விளையாட சற்று நெருடலாக தான் இருக்கிறது. அதாவது நான் ஒரு ஸ்கூலை விட்டு மாறியுள்ளது போலும், எனது முந்தைய ஸ்கூலுக்கு எதிராக விளையாடுவது போலும் உணர்கிறேன்.
கொல்கத்தா டீமில் நான் 4 வருடங்கள் இருந்தேன். அந்த நாட்களில் நான் பல நல்ல நினைவுகளை சேர்த்தேன். நான் அந்த டீமில் நான் மகிழ்ச்சியுடன் ஆடினேன். நடந்த ஐபிஎல் 15ஆவது சீசனின் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அதில் ஆர்சிபி அணி போராடி வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 128 ரன்களை இலக்காக வைத்தது. பின்பு பேட்டிங்கிற்கு இறங்கிய ஆர்சிபி அணியில் டூ பிளஸி, கோலி போன்ற முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆட்ட இறுதியில் 12 பந்துகளில் 17 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் எவ்வித பதற்றத்தையும் காட்டாமல், கூலாக விளையாடி அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து இவரை கோலியை விடவும் கூலான பிளேயர் தினேஷ் கார்த்திக் என்று புகழ்ந்தார் ஆர்சிபி கேப்டன் டுபிளெசிஸ்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.