ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IPL 2022-மில்லரைக் கில்லராக்கிய ஷிவம் துபே ட்ராப் கேட்ச்- ஜடேஜா, பிராவோ ஆத்திரம்

IPL 2022-மில்லரைக் கில்லராக்கிய ஷிவம் துபே ட்ராப் கேட்ச்- ஜடேஜா, பிராவோ ஆத்திரம்

ஜடேஜா ரியாக்‌ஷன்

ஜடேஜா ரியாக்‌ஷன்

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கேப்டன் ரவீந்திர ஜடேஜா மற்றும் நட்சத்திர பந்து வீச்சாளர் டிவைன் பிராவோ ஆகியோர் இந்திய ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே டெத் ஓவரில் டேவிட் மில்லரை வெளியேற்றுவதற்கான கேட்ச் வாய்ப்பை கிஞ்சித்தும் முயற்சிக்காமல் விட்டதை அடுத்து, அவர் மீது கோபமடைந்தனர். ஐபிஎல் 2022-ன் போட்டி எண்.29ல் CSK மற்றும் ஹர்திக் பாண்டியா இல்லாத குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் துபேயின் இந்தச் செயலால் சிஎஸ்கே தோல்வி தழுவியது.

மேலும் படிக்கவும் ...
 • Cricketnext
 • 2 minute read
 • Last Updated :

  சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கேப்டன் ரவீந்திர ஜடேஜா மற்றும் நட்சத்திர பந்து வீச்சாளர் டிவைன் பிராவோ ஆகியோர் இந்திய ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே டெத் ஓவரில் டேவிட் மில்லரை வெளியேற்றுவதற்கான கேட்ச் வாய்ப்பை கிஞ்சித்தும் முயற்சிக்காமல் விட்டதை அடுத்து, அவர் மீது கோபமடைந்தனர். ஐபிஎல் 2022-ன் போட்டி எண்.29ல் CSK மற்றும் ஹர்திக் பாண்டியா இல்லாத குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் துபேயின் இந்தச் செயலால் சிஎஸ்கே தோல்வி தழுவியது.

  வாய்ப்பைப் பயன்படுத்திய டேவிட் மில்லர் 40 பந்துகளில் 94 ரன்கள் விளாசி குஜராத்தை வெற்றிக்கு இட்டுச் சென்றார், உண்மையில் சிஎஸ்கே தோற்றது இதனால் அல்ல, பேட்டிங்கில் கடைசியில் 6 ஓவர்களில் வெறும் 46 ரன்கள் எடுத்ததே.

  குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் முக்கியக் காரணமாக அமைந்தார். 51 பந்துகளில் 94 ரன்களுடன்(6 சிக்ஸர், 8பவுண்டரி) இறுதிவரை மில்லர் ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் பொறுப்பு ஏற்று செயல்பட்ட ரஷித் கான் 21பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

  இந்த ஆட்டத்தில் டேவிட் மில்லர், ரஷித்கான் கூட்டணியைப் பிரிக்க சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் தீவிரமாக முயன்றனர். மில்லர், ரஷித்கான் கூட்டணி 6-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தனர். இருவரையும் பிரிக்க பிராவோ, ஜடேஜா , தீக்சனா என மாறிமாறி பந்துவீசியும்முடியவில்லை.

  இதில் பிராவோ 17-வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தை மில்லர் சந்தித்தார். பிராவோ வீசிய பந்தை டீப்லெக்கில் மில்லர் தூக்கி அடிக்க அதை கேட்ச் பிடிக்க வேகமாகவந்த ஷிவம் துபே திடீரென நின்று அன்ன நடைபோட்டு நடக்கத் தொடங்கினார், கேட்சையும்பிடிக்கவி்ல்லை. இதைப் பார்த்த பிராவோவும், ஜடேஜாவும் கடுப்பாகி களத்தில் சத்தமிட்டனர். பிராவோ தலையில் கைவைத்துக்கொண்டே சென்றுவிட்டார்.

  இந்த கேட்சை துபே கோட்டைவிட்டது, ஆட்டத்தின் வெற்றியை கோட்டைவிட்டது போலாகிவிட்டது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கை பக்கம் சென்ற வெற்றியை தோல்வியாக மாற்றியது ஷிவம் துபேதான்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: CSK, Dwayne Bravo, IPL 2022, Ravindra jadeja