Home /News /sports /

பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்: 130 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் அணி

பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்: 130 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் அணி

குஜராத் வீரர்கள்

குஜராத் வீரர்கள்

குஜராத் அணிக்கு 131 ரன்களை இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது.

    ஐ.பி.எல் 2022 தொடரின் இறுதிப் போட்டி பிரம்மாண்ட கொண்டாட்டங்களுடன் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் யாரும் எதிர்பாராத வகையில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதனையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்திலேயே ரன் எடுக்கத் தடுமாறினர்.

    16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெய்ஸ்வால் யாஷ் தயால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வழக்கமாக அதிரடியாக ஆடும் பட்லர் இந்தமுறை ரன்களைக் எடுக்கத் தடுமாறினார். ஜெய்ஸ்வாலைத் தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல்லும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜாஸ் பட்லரும் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். 12 ஓவரில் 79 ரன்களுக்கு ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    பிரம்மாண்ட கொண்டாட்டத்துடன் தொடங்கிய இறுதிப் போட்டி- டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான்

    அதனையடுத்து, ஆட்டம் மொத்தமாக குஜராத் அணியின் கட்டுக்குள் சென்றது. குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் 130 ரன்களை மட்டுமே எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Gujarat Titans, IPL 2022, Rajasthan Royals

    அடுத்த செய்தி