ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IPL 2022 RR vs PBKS-பஞ்சாபை வீழ்த்தியது ராஜஸ்தான்- ஓரங்கட்டப்பட்ட ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன், ஹெட்மையர் பினிஷிங் டச்!

IPL 2022 RR vs PBKS-பஞ்சாபை வீழ்த்தியது ராஜஸ்தான்- ஓரங்கட்டப்பட்ட ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன், ஹெட்மையர் பினிஷிங் டச்!

ஆட்ட நாயகன் ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெய்ஸ்வால்

ஆட்ட நாயகன் ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெய்ஸ்வால்

இந்த சீசனின் முதல் சேசிங் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இன்று வான்கடேயில் நடந்த ஐபிஎல் 2022 தொடரின் 52வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 189/5 என்ற பெரிய இலக்கை நிர்ணயிக்க, இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் பிரமாதமாக விரட்டி 19.4 ஓவர்களில் 190/4 என்று வெற்றி பெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

இந்த சீசனின் முதல் சேசிங் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இன்று வான்கடேயில் நடந்த ஐபிஎல் 2022 தொடரின் 52வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 189/5 என்ற பெரிய இலக்கை நிர்ணயிக்க, இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் பிரமாதமாக விரட்டி 19.4 ஓவர்களில் 190/4 என்று வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிகள் அட்டவணையில் 3ம் இடத்தில் ஆரோக்கியமான நெட் ரன் ரேட்டான 0.326 என்று உள்ளது. தேவ்தத் படிக்கல்லுக்கு தேவையற்ற முக்கியத்துவத்தை வழங்கி பானிபூரி விற்று முன்னுக்கு வந்த, கிரிக்கெட்டிற்கு வந்து நிரூபித்த யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை காரணமின்றி ஒரங்கட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 68 ரன்கள் விளாசினார்.

ஜாஸ் பட்லர் இலக்கு 190 என்றவுடனேயே தன் வேலையைக் காட்டினார். சந்தீப் சர்மா முதல் ஓவரை வீச ஜெய்ஸ்வால் 3வது பந்தை பஞ்ச் செய்து பாயிண்ட் பவுண்டரிக்கு அனுப்பினார், அடுத்த பந்து சந்தீப் சர்மா பந்து சிக்சருக்குப் பறந்தது. பிறகு கடைசி பந்திலும் ஒருபவுண்டரி அடித்து ஜெய்ஸ்வால் 190 ரன் விரட்டலை 14 ரன்கள் மூலம் தொடங்கினார்.

அடுத்த ஓவரில் ரபாடா வீச பட்லர் 1 பவுண்டரி அடித்தார். சந்தீப் சர்மாவை அடுத்த ஓவரில் மிட் ஆஃபில் ஒரு பவுண்டரி அடித்தார் பட்லர். 4வது ஓவர்தான் பட்லர் தன் பார்முக்கு வந்தார், ரபாடா வீச ஸ்கொயர் லெக் மேல் மிகப்பெரிய சிக்ஸ். கவருக்கு மேல் ஒரு நான்கு, அடுத்து புல் ஷாட்டில் 4. அடுத்து யார்க்கர் லெந்த் பந்தை மிட் ஆஃபில் பவுண்டரி விளாசினார் பட்லர் 16 பந்தில் 5 பவுண்டரி 1 சிக்ஸ் என்று வெளுத்து வாங்கி அதே ஓவரில் ரபாடா பந்தை ஸ்கூப் செய்ய முயன்று ஆட்டமிழந்தார்,

ஜெய்ஸ்வால், பட்லர் சேர்ந்து முதல் விக்கெட்டுக்காக 4 ஓவர்களில் 46 ரன்கள் என்று பயங்கர தொடக்கம் கொடுத்தனர். சஞ்சு சாம்சன் இறங்கினார், அனைத்தும் டெஸ்ட் கிளாஸ் ஷாட்களாக 4 பவுண்டரிகளுடன் 12 பந்துகளில் 23 ரன்கள் விளாசி ரிஷி தவான் பந்தில் கொடியேற்றி கேட்ச் ஆகி வெளியேறினார். ஆனால் ஸ்கோர் 8.1 ஓவரில் 85 ரன்கள் வந்து விட்டது.

தேவ்தத் படிக்கல்லுக்கு என்ன ஆயிற்று என்றே புரியவில்லை. பந்துகளை சாப்பிட்டு வயிற்றை ரொப்புகிறார் போலும் ரன்கள் வரவில்லை,, பவுண்டரிகள் வரவில்லை, இவரும் இன்னொரு முனையில் ஜெய்ஸ்வால் இருந்ததால்தான் 6 ஓவர்களில் 57 ரன் பார்ட்னர்ஷிப் வந்து 14.2 ஓவர்களில் 141 ரன்கள் என்று மிகவும் சாதகமான நிலைக்கு வந்தது, ஆனால் அப்போது ஜெய்ஸ்வால் 68 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

படிக்கல் படுத்தி எடுத்தார். 32 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 31 ரன் என்றால் எதிர் முனையில் ஹெட்மையர் இல்லை எனில் ராஜஸ்தான் நெருங்கி தோல்வியையே சந்தித்திருக்கும். ஹெட்மையர் 16 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்கள் உடன் 31 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ படிக்கல் 31 ரன்களில் ஆட்டமிழந்தார், ஆனால் ஹெட்மையர் ராஜஸ்தானை பத்திரமாக இலக்கைக் கடக்க வைத்து வெற்றியை உறுதி செய்தார்.

முன்னதாக பேட்டிங் பிட்சில் அகர்வால் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது தவறாகிப் போனது, பட்லரை நினைத்து அவர் தானே பேட்டிங் செய்ய முடிவெடுத்திருக்கலாம்.

ஆனால் பேர்ஸ்டோ அட்டகாசமாக ஆடி 40 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 56 ரன்களை எடுக்க. ஷிகர் தவானை அஸ்வின் காலி செய்தார், ஆனால் பனுகா ராஜபக்ச இறங்கி வெளுத்துக் கட்டி விட்டார். குல்தீப் சென்னை அடித்த சிக்ஸ் பெரிய சிக்ஸ். அவர் 2 பவுண்டரி 2 சிக்ஸ் என்று 18 பந்தில் 27 என்று பின்னினார், ஆனால் செஹல் பந்தை இறங்கி வந்து அடிக்கும் முயற்சியில் லெக் ஸ்டம்பை இழந்தார். பேர்ஸ்டோ, பனுகா ராஜபக்சா, கேப்டன் மயங்க் அகர்வால் ஆகியோரை வீழ்த்திய செஹல் 4 ஓவரில் 28 ரன் 3 விக்கெட் என்று இன்றும் அசத்த்தி இந்த ஐபிஎல் தொடரில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 4 ஐபிஎல் தொடர்களில் 20 விக்கெட்டுகள் எடுத்த மலிங்காவின் சாதனையை சமன் செய்தார்.

அஸ்வின் முதல் 2 ஓவர்களில் 10 ரன்கள்தான் கொடுத்தார், கடைசி 2 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 32 ரன்களில் முடிந்தார். கடைசியில் ஜிதேஷ் சர்மா 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 18 பந்தில் 38 எடுக்க, லியாம் லிவிங்ஸ்டன் 14 பந்தில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 22 எடுக்க பஞ்சாப் 189/5 என்று முடிந்தது. செஹல், அஸ்வினின் முதல் 2 ஓவர்களில் முடக்கப்பட்டதால் பஞ்சாப் 200 ரன்களை எட்ட முடியவில்லை.

ஆனால் இலக்கை ராஜஸ்தான் டென்ஷன் இல்லாமல்தான் விரட்டி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்.

First published:

Tags: IPL 2022, Punjab Kings, Rajasthan Royals