Home /News /sports /

ஹெட்மயர் அதிரடி: 165 ரன்கள் குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

ஹெட்மயர் அதிரடி: 165 ரன்கள் குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

லக்னோ அணிக்கு எதிரானப் போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.

    ஐ.பி.எல் தொடரின் 20-வது போட்டியில் லக்னோ அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர், தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். பட்லர் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

    அதனையடுத்து, களமிறங்கிய சஞ்சு சாம்சன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நிதானமாக ஆடிய படிக்கல் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். துஷான் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணி 67 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    தடுமாறிய ராஜஸ்தான் அணியை சிறப்பான ஆட்டத்தின் மூலம் மீட்டார் ஹெட்மயர். அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 36 பந்துகளில் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 165 ரன்கள் எடுத்தது.
    Published by:Karthick S
    First published:

    Tags: IPL 2022

    அடுத்த செய்தி