Home /News /sports /

IPL 2022 RR- கேப்டனாக தனக்கு எல்லாம் தெரியாது என்பதை ஒப்புக் கொள்கிறார்- சங்கக்காரா பாராட்டும் ஐபிஎல் கேப்டன்

IPL 2022 RR- கேப்டனாக தனக்கு எல்லாம் தெரியாது என்பதை ஒப்புக் கொள்கிறார்- சங்கக்காரா பாராட்டும் ஐபிஎல் கேப்டன்

சங்கக்காரா

சங்கக்காரா

ஒரு கேப்டனாக தனக்கு இன்னும் எல்லாம் தெரியாது என்று ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறார் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனைப் புகழ்ந்து கூறுகையில் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் இயக்குநர் முன்னாள் இலங்கை கேப்டன் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஒரு கேப்டனாக தனக்கு இன்னும் எல்லாம் தெரியாது என்று ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறார் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனைப் புகழ்ந்து கூறுகையில் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் இயக்குநர் முன்னாள் இலங்கை கேப்டன் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

    சஞ்சு சாம்சன் ஒரு கேப்டன்சி நபர் கிடையாது, இருப்பினும் அவரை நம்பி அவ்வளவு பெரிய பொறுப்பை ராஜஸ்தான் அணி ஒப்படைத்துள்ளது அதிசயமே.

    15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதனால் 10 அணிகள் விளையாடுகின்றன.

    கொரோனா காரணமாக லீக் போட்டிகள் அனைத்தும் மகராஷ்டிரா மாநிலத்தில் நடக்கிறது. மும்பையில் உள்ள வான்கடே, பிரபோர்ன், நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் மற்றும் புனே எம்.சி.ஏ. மைதானம் ஆகிய 4 ஸ்டேடியங்களில் போட்டி நடக்கிறது.

    இந்த நிலையில் 20 ஓவர் போட்டிகளில் சிறந்த வீரர்களில் சஞ்சு சாம்சனும் ஒருவர் என்று இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா தெரிவித்துள்ளார்.

    44 வயதான அவர் ஐ.பி. எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் இயக்குனராக உள்ளார்.

    அவர் தனது அணியின் கேப்டன் சாம்சனை பாராட்டிக் கூறும்போது, “சஞ்சு சாம்சன் சிறந்த டி-20 வீரர்களில் ஒருவர் ஆவார். அவர் கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் 20 ஓவர் போட்டிக்கு சிறந்த வீரர் ஆவார். கேப்டன்சியில் மேம்பட்டு வருகிறார், அவர் ஒரு மிகச்சிறந்த வீரர். நம்பகமான பேட்ஸ்மேன்.

    எதிர் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவர். மேட்ச் வின்னர் ஆவார். ஒரு சிறந்த அதிரடி பேட்ஸ்மேனுக்கு உரிய அனைத்து திறமைகளும் அவரிடம் இருக்கிறது. அவர் ஒரு கேப்டனாக தனக்கு இன்னும் எல்லாம் தெரியாது என்று ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறார்.

    இயற்கையாகவே சாம்சனுக்கு தலைமைக்கான குணங்கள் இருக்கின்றன. அவர் சிறந்த கேப்டனாக பிரகாசிப்பார்” என்று சஞ்சு சாம்சனைத் தூக்கிப் பிடித்துள்ளார் சங்கக்காரா. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வருகிற 29-ந் தேதி எதிர்கொள்கிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, Rajasthan Royals

    அடுத்த செய்தி