• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சஞ்சு சாம்சனை தக்கவைக்க இவ்வளவு கோடியா?- ராஜஸ்தான் ராயல்சின் முடிவு

சஞ்சு சாம்சனை தக்கவைக்க இவ்வளவு கோடியா?- ராஜஸ்தான் ராயல்சின் முடிவு

சஞ்சு சாம்சன்.

சஞ்சு சாம்சன்.

லியாம் லிவிங்ஸ்டன் பெயரும் விவாதிக்கப்பட்டு வருகிறது, காரணம் ஆர்ச்சர் காயத்திலிருந்து மீண்டு பழைய பவுலிங்குக்கு வந்தால்தான் சொல்ல முடியும் இல்லையெனில் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் ராஜஸ்தான் அணியில் இருப்பார் என்று நம்பலாம்.

  • Share this:
    2022 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் நடைபெறும் நிலையில் அணிகள் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 30க்குள் அளிக்க வேண்டும். இந்நிலையில் சஞ்சு சாம்சனை ரூ.14 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் தக்கவைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஜாஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், லியாம் லிவிங்ஸ்டன், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய பிற வீரர்களை தக்க வைப்பது பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது. நிதி நிலைமைகள் காரணமாக பென் ஸ்டோக்சை ராஜஸ்தான் அணி தக்க வைக்காது என்றே தெரிகிறது.

    ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தகவல்களின் படி ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் அணியில் தக்க வைக்கப்படுகிறார். டெக்னிக்கலாக சஞ்சு சாம்சன் ரூ.16 கோடிக்குத் தக்கவைக்கப்படுகிறார் என்றாலும் ரூ.14 கோடி என்பதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 வீரர்களை தக்கவைத்தாலும் மீதமிருக்கும் ரூ.48 கோடியே அந்த அணிக்கு பிற வீரர்களை ஏலம் எடுக்கப் போதுமானதாக தெரிகிறது.

    2018-ல் சஞ்சு சாம்சனை ராயல்ஸ் புக் செய்யும் போது ரூ.8 கோடிக்குத்தான் ஒப்பந்திக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உலக கிரிக்கெட்டில் ஆர்ச்சரை ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டாபோட்டி போடும் நிலையில் ராஜஸ்தான் அவரை தக்க வைக்குமா என்றுபார்க்க வேண்டும், ஆனால் பென் ஸ்டோக்ஸ் தக்கவைக்கப்படாதது ஆச்சரியமே. ஏனெனில் அவர் சமீபமாக கிரிக்கெட் பக்கமே தலை வைக்காமல் இருந்தார். ஆனால் ஆஷஸ் தொடருக்கே ஜோப்ரா ஆர்ச்சர் இல்லை, காரணம், காயம் மிகத் தீவிரமானது.

    இதனால் ஆர்ச்சர் நிலையும் சற்றே ஆட்டத்தில்தான் உள்ளது. ஜாஸ் பட்லர் சரியான பார்மில் இருப்பதால் சஞ்சு சாம்சனுக்குப் பிறகு 2வது வீரராக ஜாஸ் பட்லர் தேர்வு செய்யப்படுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்னும் இந்திய அணிக்கு ஆடாததால் அவரால் ஏற்படும் செலவு ரூ.4 கோடிதான்.

    லியாம் லிவிங்ஸ்டன் பெயரும் விவாதிக்கப்பட்டு வருகிறது, காரணம் ஆர்ச்சர் காயத்திலிருந்து மீண்டு பழைய பவுலிங்குக்கு வந்தால்தான் சொல்ல முடியும் இல்லையெனில் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் ராஜஸ்தான் அணியில் இருப்பார் என்று நம்பலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: