ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IPL 2022- என் மகனை கிரிக்கெட் ஆடியதற்காக அன்று அடித்தேன்.. இன்று ...?- குல்தீப் சென் தந்தை பேட்டி

IPL 2022- என் மகனை கிரிக்கெட் ஆடியதற்காக அன்று அடித்தேன்.. இன்று ...?- குல்தீப் சென் தந்தை பேட்டி

ராஜஸ்தான் பவுலர் குல்தீப் சென்

ராஜஸ்தான் பவுலர் குல்தீப் சென்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடும் குல்தீப் சென் என்ற வேகப்பந்து வீச்சாளரின் தந்தை, தன் மகன் கிரிக்கெட் ஆடியதற்காக அன்று தன்னிடம் அடி வாங்கினான் என்றும் இன்று தனக்கு தன் மகனைப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது என்றும் நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடும் குல்தீப் சென் என்ற வேகப்பந்து வீச்சாளரின் தந்தை, தன் மகன் கிரிக்கெட் ஆடியதற்காக அன்று தன்னிடம் அடி வாங்கினான் என்றும் இன்று தனக்கு தன் மகனைப் பார்த்தால் பெருமையாக இருக்கிறது என்றும் நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

  நடப்பு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 4 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

  ராஜஸ்தான் அணி தங்கள் கடைசி போட்டியில் லக்னோ அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டி ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் குல்தீப் சென்னுக்கு அறிமுக போட்டியாகும்.

  இந்த போட்டியில் அவர் செட் பேட்ஸ்மேன் தீபக் ஹூடாவின் விக்கெட்டை கைப்பற்றினார். மேலும் இறுதி ஓவரில் அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார்.

  இந்த நிலையில் தற்போது குல்தீப் சென்னின் தந்தை ராம் பால் தனது மகன் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். குல்தீப் சென் குறித்து அவர் கூறுகையில், " பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட் விளையாடியதற்காக எனது மகனைத் திட்டியுள்ளேன். அது மட்டுமின்றி அவனை அடித்து கூட இருக்கிறேன். கிரிக்கெட் விளையாட்டில் அவனுக்கு இருந்த ஆர்வத்தை நான் ஒருபோதும் ஆதரித்தது இல்லை.

  இருப்பினும் அவன் தனது கனவுகளை ஒருபோதும் கைவிடவில்லை. இப்போது என் மகனை நினைத்தால் பெருமையாக உள்ளது" என அவர் தெரிவித்தார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: IPL 2022, Rajasthan Royals