Home /News /sports /

IPL 2022 LSG vs RR-லக்னோவை வீழ்த்தி ராஜஸ்தான் 2ம் இடம்- சிக்கலில் சூப்பர் ஜெயண்ட்ஸ்

IPL 2022 LSG vs RR-லக்னோவை வீழ்த்தி ராஜஸ்தான் 2ம் இடம்- சிக்கலில் சூப்பர் ஜெயண்ட்ஸ்

ராஜஸ்தான் 2ம் இடம்

ராஜஸ்தான் 2ம் இடம்

ஐபிஎல் 2022 இல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டாவது முறையாக தோற்கடித்தது, இது பிளேஆஃப் சுற்றுக்குச் செல்வதற்கான அவர்களின் வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துள்ளது. மாறாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 16 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளது, இன்னும் ஒரு போட்டி உள்ளது அதில் வெற்றி பெற்றேயாக வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
    ஐபிஎல் 2022 இல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டாவது முறையாக தோற்கடித்தது, இது பிளேஆஃப் சுற்றுக்குச் செல்வதற்கான அவர்களின் வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துள்ளது. மாறாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 16 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளது, இன்னும் ஒரு போட்டி உள்ளது அதில் வெற்றி பெற்றேயாக வேண்டும்.

    நேற்று பிரபர்ன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2022-ன் 63வது போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 41 ரன்களை விளாச, பட்லர் 2 ரன்களில் ஏமாற்றம் அளிக்க, சஞ்சு சாம்சன்-32, தேவ்தத் படிக்கல்-39, ரியான் பராக் - 19, நீஷம்-18, போல்ட் 17, அஸ்வின் 10 என்று அனைவரும் பங்களிக்க 178/6 என்று முடிந்தது, தொடர்ந்து ஆடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் குவிண்டன் டி காக் 7 ரன்னில் போல்ட்டிடம் காலியாக, பிரசித் கிருஷ்ணாவின் அருமையான பந்துக்கு கே.எல்.ராகுல் 10 ரன்களில் வெளியேறினார். ஆயுஷ் பதோனி போல்ட்டிடம் எல்.பி.ஆகி டக் அவுட் ஆனார்.

    தீபக் ஹூடா (59), குருணால் (25), ஸ்டாய்னிஸ் (27) முயற்சி செய்தும் ஒன்றும் முடியவில்லை. கடைசியில் 154/8 என்று லக்னோ மடிந்தது. இது ராஜஸ்தானின் 8வது வெற்றி. 16 புள்ளிகள் உடன் லக்னோவுக்கு சமமாக இருந்தாலும் நெட் ரன் ரேட்டில் 2ம் இடம் சென்றது.

    ட்ரெண்ட் போல்ட் முதலில் அருமையாக வீசி டி காக், பதோனியைக் காலி செய்ய, பிரசித் கிருஷ்ணா ராகுலை கபளீகரம் செய்ய 29/3 என்று தடுமாறியது லக்னோ.

    அதன் பிறகு குருணால், தீபக் ஹூட இணைந்தனர். இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 65 ரன்களை சேர்த்தனர், ஆனால் ஜோஸ் பட்லர் மற்றும் ரியான் பராக் இருவரும் இணைந்து ஒரு சிறந்த முயற்சியில் கேட்ச் எடுக்க, க்ருனால் பாண்டியா 25 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு லக்னோ எழும்ப முடியவில்லை. ஹூடா 39 ரன்களில் 59 ரன்கள் எடுத்து போராடினாலும் எந்த நிலையிலும் வெற்றி பெறுவது போல் லக்னோ இல்லவே இல்லை.

    முன்னதாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார், தேவ்தத் படிக்கல் 18 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார், ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்த பிறகு 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.ரவி பிஷ்னோய் லக்னோவுக்காக மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளராக இருந்தார், நான்கு ஓவர்களில் 2/31 என்று சிக்கனம் காட்டினார்.

    முதல் ஓவரிலேயே மொஹ்சின் கான் பந்தில் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்த ஜெய்ஸ்வால் தன்னம்பிக்கையுடன் ராயல்ஸ் அணிக்கான நடவடிக்கைகளைத் தொடங்கினார். ஆனால் மூன்றாவது ஓவரின் தொடக்கத்தில் ஃபார்மில் இருந்த ஜோஸ் பட்லரின் (2) ஆஃப்-ஸ்டம்பை பெயர்த்தார்.

    சஞ்சு சாம்சன் இறங்கி ஆவேஷ் கானை மிட்விக்கெட் பவுண்டரிக்கு 4 ரன்களுக்கு விளாசினார். பின்னர் சாம்சன் மோசினுக்கு எதிராக ஒரு லேட் கட் ஆடினார், பந்து ஸ்லிப் கார்டனுக்கு மேல் பறந்து பவுண்டரிக்கு வந்தது. நான்கு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 25 ரன்களை எட்டியபோது ராஜஸ்தான் கேப்டனின்பேட்டில் இருந்து அழகான கவர் டிரைவ் வந்தது.

    ஜெய்ஸ்வால் துஷ்மந்த சமீராவை அடித்த 103 மீ சிக்ஸ் பெரிய வைரலாகியது. மோசின் கான் ஜெய்ஸ்வாலுக்கு கேட்சை விட்டதால் துஷ்மந்த சமீரா சரியாக வாங்கினார். சமீரா ஓவரில் 21 ரன்கள் விளாசினார் ஜெய்ஸ்வால். 3 பவுண்டரி ஒரு 103 மீ சிக்ஸ் என்று 21 ரன்களை விளாசினார் ஜெய்ஸ்வால். கீழ் வரிசை வீரர்களும் பங்களிக்க ராஜஸ்தான் அணி 178/6 என்று முடிந்தது, பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 154 ரன்களுக்கு மடிய அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் ட்ரெண்ட் போல்ட்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, Lucknow Super Giants, Rajasthan Royals

    அடுத்த செய்தி