முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2022 CSK Playoff chances- சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு- எப்படி?

IPL 2022 CSK Playoff chances- சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு- எப்படி?

தோனி

தோனி

ஐபிஎல் 2022 லீகில் இன்னும் போட்டிகள் இருக்கும் நிலையில் தோனி மீண்டும் கேப்டனாகி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளதால், ரசிகர்கள் முன்னிலையில் இருக்கும் ஒரே கேள்வி என்னவெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுமா பெறாதா, அப்படி பெற வேண்டுமெனில் அடுத்து வரும் போட்டிகளில் எப்படி ஆடவேண்டும் என்பதே.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

ஐபிஎல் 2022 லீகில் இன்னும் போட்டிகள் இருக்கும் நிலையில் தோனி மீண்டும் கேப்டனாகி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளதால், ரசிகர்கள் முன்னிலையில் இருக்கும் ஒரே கேள்வி என்னவெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுமா பெறாதா, அப்படி பெற வேண்டுமெனில் அடுத்து வரும் போட்டிகளில் எப்படி ஆடவேண்டும் என்பதே.

சிஎஸ்கே தற்போது மைனஸ் ரன் ரேட்டில் 6 புள்ளிகளுடன் 9ம் இடத்தில் இருக்கிறது. இன்னும் 5 போட்டிகள் சிஎஸ்கேவுக்கு மீதமுள்ளாது. எனவே மீதமுள்ள 5 போட்டிகளில்ம் தோனி படை வெல்ல வேண்டும் அப்படி வென்றால் 16 புள்ளிகள் பெற்றிருக்கும். சாதாரணமாக 8 அணிகள் இருக்கும் போது குவாலிஃபை ஆவது எளிது, ஆனால் இந்த முறை 10 அணிகள் மோதுகின்றன. இதனால் சிஎஸ்கேவுக்கு சிக்கல்தான்.

குஜராத் டைட்டன்ஸ் 9 ஆட்டங்களில் 16 புள்ளிகளைப் பெற்றுள்ளனர், அவர்களுக்கும் 5 போட்டிகள் மீதமுள்ளன. லக்னோ அணி 14 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. இவர்களுக்கு இன்னும் 4 மேட்ச்கள் பாக்கி இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் 12 புள்ளிகளுடனும் சன் ரைசர்ஸ் 10 புள்ளிகளுடனும் 3 மற்றும் 4-ம் இடங்களில் உள்ளன. இந்த இரண்டு அணிகளின் மீதமுள்ள போட்டிகளில்தான் தோனி படை கவனம் செலுத்தும் ஏனெனில் குஜராத், லக்னோ ஏறக்குறைய பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்து விட்டனர் என்றே கூற வேண்டும்.

சிஎஸ்கே அணி தன் நெட் ரன் ரேட்டை -0.407 என்று வைத்துள்ளது. நேற்று நெட் ரன் விகிதத்தை உயர்த்தும் வாய்ப்பை தவற விட்டது, 13 ரன்களில்தான் வென்றது. அதுவும் 202 ரன்களை விளாசி விட்டு அந்த அணியை 189 ரன்கள் வரை வரவிட்டது சிஎஸ்கேவுக்குச் சிக்கல்தான்.

முதலில் மீதுமுள்ள 5 போட்டிகளிலும் வெல்வது என்பதே கூட சிரமம்தான், அதைக்கூட செய்து விட்டாலும் நெட் ரன் ரேட்டை உயர்த்துவது கடினம். நெட் ரன் ரேட் ஏன் முக்கியமெனில் சன் ரைசர்ஸும் ஆர்சிபி இரண்டுமே 10 புள்ளிகளில் உள்ளன. 4ம் இடத்துக்குத்தான் சிஎஸ்கே மோத முடியும் இதில் ஆர்சிபிக்கு 4 போட்டிகள் உள்ளன இதில் 2 இல் வென்றால் அந்த அணி 14இல் இருக்கும், சன் ரைசர்ஸுக்கு இன்னும் 5 போட்டிகள் உள்ளன இந்த அணி 3-ல் வென்று விட்டால் 16 புள்ளிகளில் இருக்கும்,

top videos

    இப்போது சிஎஸ்கே 5 போட்டிகளிலும் வென்று 16 புள்ளிகள் வருமென்றால், சன் ரைசர்ஸின் தற்போதைய நெட் ரன் ரேட்டான +0.471-ஐக் கடந்து வர வேண்டும். சன் ரைசர்ஸ் 3 போட்டிகளில் வென்று ஆர்சிபி மீதமுள்ள 4 போட்டிகளில் 3-ல் வென்றாலும் 16 புள்ளிகளில் வந்து நிற்கும், ஆகவே சிஎஸ்கேவுக்கு மிக மிக கடினமே. அந்த அணி முதலில் 5 போட்டிகளிலும் வென்று அடுத்த அணியின் தோல்விகளை எதிர்நோக்க வேண்டும். அடுத்த அணிகள் தோல்வியடைய அதிக போட்டிகள் இருப்பதால் வாய்ப்பு மிக மிக குறைவு.

    First published:

    Tags: Cricket, CSK, Dhoni, IPL 2022