Home /News /sports /

லிவிங்ஸ்டன் அதிரடி- 180 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி

லிவிங்ஸ்டன் அதிரடி- 180 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி

சென்னை வீரர்கள்

சென்னை வீரர்கள்

சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் 180 ரன்கள் எடுத்துள்ளது.

    ஐ.பி.எல் 2022 தொடரின் 11-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், ஷிகர் தவன் களமிறங்கினர். கேப்டன் மயங்க் அகர்வால் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகேஷ் சௌத்ரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பானுகா ராஜபக்ச 9 ரன்களில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

    அதனையடுத்து, ஷிகர் தவன், லியம் லிவிங்ஸ்டன் இணை ஜோடி சேர்ந்தது. இந்த இணை அதிரடியாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டது. 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் தவித்த நிலையில் தவன், லிவிங்ஸ்டன் சிறப்பாக ஆடினர். தவன் 24 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த நிலையில் ப்ராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய லிவிங்ஸ்டன் 32 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவருடைய ஆட்டமிழப்புக்குப் பிறகு பஞ்சாப் அணியின் ரன் வேகம் குறைந்தது.

    தோனி கேப்டனாக இல்லாத சி.எஸ்.கே: கேப்டன்சியில் தடுமாறும் ஜடேஜா- ரசிகர்கள் எதிர்பார்ப்புகள் என்ன?

    10 ஓவருக்கு 115 ரன்களை பஞ்சாப் கடந்த நிலையில் ஸ்கோர் 200 ரன்களைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாம் பாதியில் களமிறங்கிய வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழக்க அணியின் ரன் வேகம் குறைந்தது. 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் 180 ரன்களைக் குவித்தது. சென்னை அணி சார்பில் ஜோர்டன், ட்வைன் ப்ரிட்டோரியஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: CSK, IPL 2022

    அடுத்த செய்தி