ஐ.பி.எல் தொடரின் 23-வது போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக மயங்க அகர்வாலும், ஷிகர் தவனும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் 10 ஓவர் வரையில் விக்கெட் இழப்பின்றி அணியை அழைத்துச் சென்றனர். 32 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் ஷிகர் தவனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தார். தவனுடன் ஜானி பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். பேர்ஸ்டோ 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவன் 50 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஐந்தாவது வீரராக களமிறங்கிய ஜித்தேஷ் சர்மா 15 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அணியினை ஸ்கோர் உயர உதவினார். ஷாருக்கானும் 6 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 15 ரன்கள் அடித்தார். ஜித்தேஷ் சர்மா, ஷாருக்கான் இணை 16 பந்துகளில் 46 ரன்களைக் குவித்தது. மும்பை அணி இறுதி ஓவர்களில் பஞ்சாப் அணிக்கு ரன்களை வாரி வழங்கியது. அதன்காரணமாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களைக் குவித்தது. மும்பை அணியின் சார்பில் பசில் தம்பி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.