இந்திய அணியின் டெஸ்ட் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் பதவி உயர்வு பெற்றுள்ளார், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக அவர் உயர்வு பெற்றுள்ளார், இதனை பஞ்சாப் கிங்ஸ் அவருக்கான வாழ்த்துச் செய்தியுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கே.எல்.ராகுல் பெரிய தொகைக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டனாக செல்ல அவரது இடத்தை பஞ்சாப் கிங்ஸில் மயங்க் அகர்வல் தற்போது இட்டு நிரப்பியுள்ளார். கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் மயங்க் அகர்வால், இது அகர்வாலுக்கு தகுதியான ஒரு பதவி உயர்வுதான் என்று கிரிக்கெட் சகோதரத்துவம் அவரை வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த மயங்க் அகர்வால், “இந்த அருமையான அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பொறுப்பை நான் மிகுந்த நேர்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அதே நேரத்தில், இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருக்கும் திறமையால் எனது பணி எளிதாகிவிடும் என்று நம்புகிறேன்.
Also Read: வலிமையிலிருந்து வலிமைக்குச் செல்வோம் - ‘பெஞ்ச்’ வீரர்களுக்கு ரோஹித் சர்மா வாக்குறுதி
கடந்த ஆண்டு ராகுல் காயம் அடைந்தபோது அகர்வால் அணிக்கு கேப்டனாக சிறிது காலம் இருந்தார். அகர்வால் கடந்த இரண்டு சீசன்களில் 400 ரன்களுக்கு மேல் குவித்தார். 2011 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமான அவர், இதுவரை 100 போட்டிகளில் விளையாடியுள்ளார். 31 வயதான அவர் இந்தியாவுக்காக 19 டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். வலுவான அணியுடன், பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் வறட்சியை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தில் உள்ளது. அவர்களின் ஒரே இறுதிப் போட்டி 2014 இல் வந்தது. கடந்த மூன்று தொடர்களில் அவர்கள் எட்டு அணிகளில் ஆறாவது இடத்தைப் பிடித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.