கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆனாலும் சரி, பஞ்சாப் கிங்ஸ் ஆனாலும் சரி அதன் உத்வேகத்தில் பிரபலமாக இருப்பவர் பாலிவுட் நடிகையும் சக உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா. இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கூட அந்த அணிக்காக பங்கேற்கவில்லை. பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அவர், அண்மையில் தாய்மை அடைந்தார். அந்த நேரத்தில் இந்தியாவில் ஐபிஎல் ஏலம் நடைபெற்றதால், அவரால் பங்கேற்க முடியவில்லை.
பஞ்சாப் ஆட்டத்தில் மிஸ்ஸிங் பிரீத்தி ஜிந்தா என்று பஞ்சாப் ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில் சிஎஸ்கே போட்டிக்கு பிரீத்தீ ஜிந்தா வருகை அணியினரிடத்திலும் ரசிகர்களிடத்திலும் மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
சென்னைக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியை உற்சாகப்படுத்த அமெரிக்காவில் இருந்து பறந்து வந்துள்ளார். அவர் உற்சாகத்தின் அதிர்ஷ்டம் சிஎஸ்கேவை பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் 59 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். லிவிங்ஸ்டனை இறக்காமல் இறக்கப்பட்ட பனுகா ராஜபக்ச 42 ரன்கள் விளாசினார்.
IPL only for Preity Zinta@realpreityzinta Best always and forever pic.twitter.com/ZhhydX0P1w
— Nitin Godbole 🇮🇳 (@nitingodbole) April 25, 2022
பெரிய இலக்கை நோக்கி இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் பவர் ப்ளேயில் மந்தமாக இருந்தது, ருதுராஜ் அவுட் ஆகும் வரையில் கூட சிஎஸ்கே இலக்கை நோக்கி பிரயாணிக்கவில்லை, ராயுடுவினா நல்ல பந்துகளில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறினார், ஆனால் அவருக்கென்றே வந்தார் சந்தீப் சர்மா, ரவுண்ட் த விக்கெட்டில் வலது கை பேட்ஸ்மெனுக்கு அதுவும் டி20 யில் வீசலாமா, வெளுத்துக் கட்டினார் ஒரே ஓவரில் 23 ரன்கள் விளாசினார், ரிஷி தவான் என்ற பலவீனமான பௌலரும் சிக்கினார். கடைசியில் 39 பந்துகளில் 78 ரன்கள் விளாசிய ராயுடு ரபாடாவின் யார்க்கரில் பவுல்டு ஆகி வெளியேறினார்.
தோனி இறங்கி பந்து உடையுமாறு ஒரு பவுண்டரி விளாசினார், கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்து ரிஷி தவான் வீசியது உலக மோசமான பந்து, அதை யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சிக்ஸ் அடிக்கலாம், தோனி முறையாக ஸ்டாண்ட்சுக்கு அனுப்பினார், ஆனால் அடுத்த பந்து அதை விடவும் மட்டமான பந்து விட்டிருந்தால் வைடு 5 ரன்கள், ஆனால் தோனி அதை வாரிக்கொண்டு அடிக்க நினைத்து பேட்டின் நுனியில் பட்டு பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனது, சிஎஸ்கே 13 ரன்களில் தோல்வி அடைந்தது. கேப்டன் ஜடேஜா மெதுவாக ஆடினார், இதுவும் தோல்விக்குக் காரணமானது
வெற்றியை பிரீத்தி ஜிந்தா கொண்டாடியது வைரல் வீடியோவானது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CSK, IPL 2022, Punjab Kings