Home /News /sports /

IPL 2022 -டாப் -4-ல் உம்ரன் மாலிக், டாப்-10-ல் திரிபாதி- 10-ம் இடத்தைத் தவிர்க்கும் மும்பை முயற்சிக்கு பேரடி!

IPL 2022 -டாப் -4-ல் உம்ரன் மாலிக், டாப்-10-ல் திரிபாதி- 10-ம் இடத்தைத் தவிர்க்கும் மும்பை முயற்சிக்கு பேரடி!

உம்ரன் மாலிக்

உம்ரன் மாலிக்

5 முறை ஐபிஎல் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் படு மோசத்திலும் மோசமாகப் போய் விடாமல், அதாவது 10-ம் இடத்தில் முடிந்து விடாமல் இருக்கவே வெற்றிக்காக ஆடி வருகிறது, ஆனால் அதற்கும் நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத், குறிப்பாக திரிபாதி, உம்ரன் மாலிக் ஆப்பு வைத்து விட்டனர்.

பிரியம் கார்க், ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரன் அதிரடியில் மும்பை 200 ரன்களுக்கும் மேல் சென்றிருக்க வேண்டும் ஆனால் கடைசி 4 ஓவர்களில் போனால் போகிறது என்று குறைத்து அடித்தது போல் தெரிந்தது. மும்பை இலக்கை விரட்டும்போது வெற்றி பெறும் நிலையில் இருந்தது, ஆனால் உம்ரன் மாலிக்கின் தீப்பறக்கும் பவுலிங்கிற்கு ஈடு கொடுக்க முடியாமல் 3 விக்கெட்டுகளை அவரிடம் இழந்தது, ஆனால் டிம் டேவிட் வெளுத்துக் கட்டி விட்டார், ஒரே ஓவரில் நடராஜனை 4 சிக்சர்களுடன் 26 ரன்கள் விளாசி 46 ரன்கள் எடுத்து சிங்கிள் எடுக்கப் போய் ரன் அவுட் ஆனார்.

புவனேஷ்வர் குமார் மிக முக்கியமாக 19வது ஓவரை விக்கெட் மெய்டனாக வீச மும்பைக்கு கடைசி ஓவர் 19 ரன்கள் தேவை என்று ஆனது, இதில் உம்ரனிடம் கொடுத்திருந்தால் குச்சியைப் பெயர்த்திருப்பார், ஆனால் அவரிடம் கொடுக்காததால் 15 ரன்களை ரமந்தீப் அடித்து தோல்வி 3 ரன்கள் இடைவெளியாகக் குறுக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 6 அணிகள் 12 புள்ளிகளில் உள்ளன, ஆர்சிபி, டெல்லி கேப்பிடல்ஸ் 14 புள்ளிகளில் உள்ளன இந்த இரு அணிகளின் தோல்வி தான் மற்ற அணிகளுக்கான வாய்ப்பாக அமையும். ஆனால் அது கடினம். ஆனால் அப்படி இருவரும் தோற்றாலும் சன் ரைசர்ஸ் தன் கடைசி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை பெரிய மார்ஜினில் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் 4ம் இடத்துக்கு முன்னேறும். ஆனால் அதற்கு ஆர்சிபி, டெல்லி இரண்டும் தோற்றாக வேண்டும் இது நிச்சயம் நடக்காது என்றே தெரிகிறது.

ஐபிஎல் புள்ளிகள் அட்டவணை:



ஐபிஎல் ஆரஞ்சு கேப் அட்டவணை:



ஐபிஎல் பர்ப்பிள் கேப் அட்டவணை:



ராகுல் திரிபாதியும் அபிஷேக் சர்மாவும் பேட்டிங் அட்டவணையில் டாப்-10-ற்குள் இடம்பெற்றிருக்கிறார்கள் ராகுல் திரிபாதி 13 போட்டிகளில் 393 ரன்கள் எடுத்திருக்கிறார். அபிஷேக் சர்மா 383 ரன்கள் எடுத்து 10ம் இடத்தில் உள்ளார். 11ம் இடத்தில் திலக் வர்மா இருக்கிறார்

பவுலிங்கில் செஹல் 24 விக்கெட்டுகளுடன் முதலிடம் வகிக்க, ஹசரங்கா 23 விக்கெட், ரபாடா 22 விக்கெட், உம்ரன் மாலி 21 விக்கெட் என்று முதல் 4 இடங்களில் உள்ளனர்.
Published by:Muthukumar
First published:

Tags: IPL 2022, Mumbai Indians, SRH

அடுத்த செய்தி