ஐபிஎல் 2022 பிளே ஆஃப் போட்டிகள் நாளை 24ம் தேதி கொல்கத்தாவில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் நடக்கவிருக்கிறது, நாளை மறுநாள் கொல்கத்தாவிலேயே ஆர்சிபி அணி ராகுல் தலைமை லக்னோ அணியை எதிர்கொள்கிறது, இந்தப் போட்டிகள் குவாலிஃபயர் 2 மற்றும் பைனல் ஆகியவை
மழையால் பாதிக்கப்பட்டால் முழுதும் மழையால் பாதிக்கப்பட்டால் கூட ஒரே ஒரு ஓவர் சூப்பர் ஓவர் வைத்து வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள்.
ஏனெனில் கொல்கத்தாவில் மழை பெய்யலாம், அகமதாபாத்திலும் மழை பெய்யலாம் என்பதால் கூடுதலாக சில விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் மழையால் ஆட்டத்தில் இடையூறு ஏற்படும் பட்சத்தில் 200 நிமிட வழக்கமான நேர ஒதுக்குதலை விடவும் கூடுதலாக 2 மணி நேரம் சேர்க்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஆட்டம் தொடங்கவே தாமதமானால் கூட இரவு 9:40 மணி வரை கட் ஆஃப் டைம் உண்டு அதாவது முழு போட்டியையும் நடத்த.
அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டி கூட மழையால் இடையூறு ஆனால் தொடக்கம் தாமதமானால் இரவு 10:10 வரை பார்க்கப்படும். அதாவது 10:10க்குத் தொடங்கினால் கூட அணிக்கு 20 ஒவர்கள் என்பது குறைக்கப்பட மாட்டாது.ஆனால் இப்படி நடந்தாலும் கூட விளம்பரதாரர்கள் பாதிக்காவண்ணம் ஸ்ட்ரேடஜிக் டைம் அவுட் உண்டு. ஆனால் வீரர்களை பாதிக்குமாறு இரு இன்னிங்ஸ்களுக்குமான இடைவெளி குறைக்கப்படுகிறது.
போட்டி முழுதும் பாதிக்கப்படும் சூழ்நிலையிலும் இரு அணிகளும் குறைந்தது ஐந்தைந்து ஓவர்கள் ஆடுமாறு போட்டி வைக்கப்பட்டு முடிவு தீர்மானிக்கப்படும். இந்த 5 ஓவர் போட்டிக்கு கட் ஆஃப் டைம் இரவு மணி 11.56. 10 நிமிட இன்னிங்ஸ் பிரேக் உண்டு. இறுதிப் போட்டி மழை காரணமாக 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்படும் வேளையில் இரவு 12.26 வரைக்கும் மேட்ச் தொடங்க கால அவகாசம் உண்டு.
பைனலுக்கு ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது, மே 29 போட்டி முழுதும் நடைபெறவில்லை எனில் 30ம் தேதி நடத்தப்படும். அதே போல் பிளே ஆஃப் போட்டிகளில் எந்த ஒரு போட்டி நடத்தப்பட முடியாமல் போனாலும் அட்டவணையில் அணியின் நிலையைப் பொறுத்து வெற்றி அணி தீர்மானிக்கப்படும்.
பிளே ஆஃப் போட்டியை குறிப்பிட்ட அந்த நாளுக்குள் நடத்த முடியாமல் போகிறது, குறைந்தது 5 ஓவர் கூட விளையாட முடியாமல் போகும்போது, மைதான நிலைமைகள் சரி வந்தால் ஒரேயொரு சூப்பர் ஓவர் மட்டும் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள். சூப்பர் ஓவர்களுக்கும் கால வரம்பு என்னவெனில் நள்ளிரவு 12:50 தான் இறுதிக் கெடு.
சூப்பர் ஓவரும் நடத்த முடியவில்லை எனில் லீக் முடிந்த பிறகான அட்டவணையில் உள்ள வரிசையின் படி பிளே ஆஃப் போட்டியிலோ, பைனலிலோ வின்னர் யார் என்று தீர்மானிக்கப்படுவார்கள்.
ஐபிஎல் பைனல் இரவு 7:30 க்கு பதிலாக 8:00 மணிக்குத் தொடங்கும். அந்த நாளில் முடிக்க முடியவில்லை எனில் மே 30ம் தேதி ரிசர்வ் நாள் உள்ளது. பிளே ஆஃப் மேட்ச்களில் ஒரு இன்னிங்ஸ் முழுக்க முடிந்து இன்னொரு இன்னிங்ஸ் பாதியில் நின்று விட்டால் டக்வர்த் லூயிஸ் முறைப்படி வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்கள்.
உதாரணமாக பைனல் போட்டி ஒரு பந்து தான் போட முடிந்தது அதன் பிறகு ஆட்டம் நடைபெறவில்லை எனும் பட்சத்தில் ஆட்டம் எந்த இடத்தில் நின்றதோ அதிலிருந்து மறுநாள் தொடங்கும். அதாவது ஆட்டம் பாதியில் நின்றால் அதிலிருந்து தொடரும்.
பைனலில் டாஸ் போடப்பட்டு ஆட்டம் மழை காரணமாக அடுத்த நாளுக்குச் செல்கிறது என்றால் புதிதாக டாஸ் போட வேண்டும். மேட்ச் சாத்தியமாகாத போது, அதாவது 5 ஓவர் கூட ஆட முடியாத போது பொதுவாக மேட்ச் கைவிடப்பட்டதாகவே கருதப்படும், ஆனால் இதில்தான் புதியது புகுத்தப்பட்டுள்ளது, சூப்பர் ஓவர் வைத்து வெற்றி யாருக்கு என்பது தீர்மானிக்கப்படும், இது புதிது. பைனலைப் பொறுத்தவரை சூப்பர் ஓவர் கட் ஆஃப் டைம் இரவு மணி 1.20 ஆகும். ஆனால் இதுவும் மைதானம் அந்த ஒரு ஓவரையும் வீசுவதற்கு வசதியாக இருந்தால்தான்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.