Home /News /sports /

IPL 2022 : இன்னும் 4 போட்டிகளே உள்ளன: பிளே ஆஃப் தகுதி பெறும் மற்ற 2 அணிகள் எவை?

IPL 2022 : இன்னும் 4 போட்டிகளே உள்ளன: பிளே ஆஃப் தகுதி பெறும் மற்ற 2 அணிகள் எவை?

ஐபிஎல் 2022 பிளே ஆஃப் வாய்ப்புகள் என்ன?

ஐபிஎல் 2022 பிளே ஆஃப் வாய்ப்புகள் என்ன?

ஐபிஎல் 2022 நீண்ட டி20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 2 அணிகள் மட்டும் தகுதி பெற இன்னும் 4 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் மற்ற 2 அணிகள் எவை என்ற கேள்வி எழுகிறது. 3வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முன்னேற வாய்ப்பு அதிகம்,

மேலும் படிக்கவும் ...
    ஐபிஎல் 2022 நீண்ட டி20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 2 அணிகள் மட்டும் தகுதி பெற இன்னும் 4 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் மற்ற 2 அணிகள் எவை என்ற கேள்வி எழுகிறது. 3வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முன்னேற வாய்ப்பு அதிகம், அதே நேரத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் இன்னும் போட்டியில் உள்ளன.

    3ம் இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டிகள் 8 வெற்றிகள் +0.304 என்ற பெரிய நெட் ரன் ரேட்டில் இன்னும் ஒரு போட்டியில் வென்றால் போதும் எளிதில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் 3வது அணியாகிவிடும். அதாவது 18 புள்ளிகளைப் பெற்று விடும், அப்போது இன்று மோதும் ஆர்சிபி குஜராத் போட்டியில் ஆர்சிபி வென்றால் அது 16 புள்ளிகளுடன் 4வது அணியாக தகுதி பெறும், அதே வேளையில் ஆர்சிபி தோற்று டெல்லி வென்று விட்டால் டெல்லி தகுதி பெறும்.

    ஆர்சிபியும் இன்று தோற்று டெல்லியும் தோற்று பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் அந்த அணி 14 புள்ளிகளுடன் ஆர்சிபி, டெல்லி, பஞ்சாப் அணிகள் என்று நெட் ரன் ரேட்டில் நன்றாக உள்ள அணி 4வதாக இடம் பெறும். இன்னொரு வாய்ப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ் தன் கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கேவை நாளை பிரபர்ன் ஸ்டேடியத்தில் இரவு 7:30 போட்டியில் எதிர்கொள்ளும் போது தோற்று விட்டால் 16 புள்ளிகளுடனேயே இருக்கும், அப்போது ஆர்சிபி, டெல்லி கேப்பிடல்சஸ் அணிகள் தங்கள் போட்டிகளில் வென்று விட்டால் இந்த அணிகளும் 16 புள்ளிகளுடன் போட்டியில் இருக்கும் போதும் நிகர ரன் விகிதமே தகுதி பெறும் 2 அணிகளை முடிவு செய்யும்.

    இப்போதைக்கு ஆர்சிபி ரன் ரேட் மைனஸில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் ரன்ரேட்டும் மைனஸில் உள்ளதால், போட்டி சுருக்கமாக ஆர்சிபி, டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே என்று கூறிவிடலாம், இதையெல்லாம் மீறி பஞ்சாப் கிங்ஸ் பெரிய அளவில் வெற்றி பெற்று ஆர்சிபி, டெல்லி தங்களது போட்டிகளில் தோல்வி கண்டால் 14 புள்ளிகளில் 3 அணிகளுக்கு இடையே நெட் ரன் விகிதமே பேசும். சன் ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் போட்டி இந்த முடிவுகளெல்லாம் தாறுமாறாக அமையும் போது முக்கியத்துவம் பெறும் இல்லையெனில் அது வெத்துப் போட்டியாகவே இருக்கும்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் எப்படி தகுதி பெறும்?

    கடைசி போட்டி சிஎஸ்கேவுடன், அது நிச்சயம் கடினமான போட்டியகவே இருக்கும் ஏனெனில் சிஎஸ்கேவுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. ராஜஸ்தான் ஆரோக்கியமான நிகர ரன் விகிதமான +0.304 உடன் 16 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. அவர்கள் இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கேயை வீழ்த்தினால், ராஜஸ்தான் எல்எஸ்ஜியை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்திற்கு முன்னேறி முதல் 2 இடங்களுக்குள் இடம்பிடிப்பது உறுதி.

    ராஜஸ்தான் ராயல்ஸ்


    RR தோற்றாலும், RCB அல்லது DC 16 புள்ளிகளில் 3-வழி டையாக மாறினால், RCB அல்லது DC க்கு சிறந்த நிகர ரன் ரேட் இல்லை எனில், தகுதிபெற ராஜஸ்தானுகு நல்ல வாய்ப்பு உள்ளது. மோசமான NRR உடைய RCB, அட்டவணையில் RR ஐ விட முன்னேற, டேபிள் டாப்பர்களான குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும்.

    டெல்லி எப்படி தகுதி பெற முடியும்? கடைசி போட்டி மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக:

    சனிக்கிழமையன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தினால், DC பிளேஆஃப்களில் இடம்பிடிப்பது உறுதி. அவர்களின் நேர்மறை நிகர ஓட்ட விகிதமான +0.255 அவர்கள் இறுதி நான்கில் முடிக்கப் பார்க்கும்போது உதவும்.



    இன்று ஆர்சிபி குஜராத் டைட்டன்ஸை பெரிய மார்ஜினில் வென்று 16 புள்ளிகள் பெற்று விட்டால் டெல்லி கடைசி போட்டியில் மும்பையை வீழ்த்தினாலும் கடினம். ஆனால் ஆர்சிபி டைட்டன்ஸ் அணியை பெரிய மார்ஜினில் வீழ்த்துவது என்பது குஜராத் அணியில் எதுவும் பெரிய மாற்றம் செய்யப்படுகிறதா என்பதைப் பொறுத்தது.

    ஆர்சிபி இன்று தோற்று, டெல்லியும் தோற்று விட்டால் பஞ்சாப் கிங்ஸோ அல்லது சன் ரைசர்ஸ் அணியோ பெரிய நெட் ரன் ரேட் வராதவாறு இருந்தால் 14 புள்ளிகளில் 3 அணிகள் பிளே ஆஃப் வாய்ப்புக்காக போட்டி போடும்போது டெல்லிக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.

    ஆர்சிபி எப்படி தகுதி பெறும்: இன்று குஜராத்துடன் மோதல்:

    RCB 14 புள்ளிகளுடன் 5 வது இடத்தில் உள்ளது, மேலும் பிளேஆப் சுற்றுக்கு முன்னேற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஒரு பெரிய வெற்றி தேவை. ஆனால் அதே வேளையில் டெல்லி கேப்பிடல்ஸ் தன் கடைசி ஆட்டத்தில் தோற்றால் ஆர்சிபிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு. இன்று ஆர்சிபி தோற்று டெல்லி தன் கடைசி போட்டியில் வென்றால் ஆர்சிபி வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.

    ஆர்.சி.பி வீரர்கள்


    RCB தன் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து 14 புள்ளிகளுடன் 3-அணிகள் 14 புள்ளிகளில் முடிந்தால், DC 14 புள்ளிகளில் ஒரு சிறந்த நிகர ரன் விகிதத்தைக் கொண்டிருப்பதால் ஆர்சிபி தகுதி பெற வாய்ப்பில்லை.

    பஞ்சாப் வாய்ப்பு எப்படி?- ஞாயிறன்று சன் ரைசர்ஸுடன் மோதல்:

    பஞ்சாப் கிங்ஸ் 12 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது மற்றும் மைனச் நிகர ரன் விகிதம் -0.043. ப்ளேஆஃப் பந்தயத்தில் உயிருடன் இருக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றியைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை.

    பஞ்சாப் அணிக்கு RCB மற்றும் DC தங்கள் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைய வேண்டும் மற்றும் 14 புள்ளிகளில் 3-வழி டை ஆனால் டெல்லி இறுதி ஆட்டத்தில் பெரும் வித்தியாசத்தில் தோல்வியடைய வேண்டும், இதனால் பஞ்சாப் 4வது இடத்திற்கு முன்னேற முடியும்.

    சன் ரைசர்ஸ் தகுதி பெறுவதற்கும் பஞ்சாப் போலவே ஏகப்பட்ட நிபந்தனைகள் உள்ளன. முதலில் ஆர்சிபி, டெல்லி இரண்டும் தோற்க வேண்டும் இது நிச்சயம் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Delhi Capitals, Gujarat Titans, IPL 2022, Rajasthan Royals, RCB

    அடுத்த செய்தி