முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2022 Play-off RCB vs RR -உத்வேகம் ஆர்சிபி அணியிடம் இருப்பதால் - இறுதி வாய்ப்பு ஆர்சிபிக்கே- இன்று ராஜஸ்தானுடன் மோதல்

IPL 2022 Play-off RCB vs RR -உத்வேகம் ஆர்சிபி அணியிடம் இருப்பதால் - இறுதி வாய்ப்பு ஆர்சிபிக்கே- இன்று ராஜஸ்தானுடன் மோதல்

இறுதிக்குள் நுழையுமா ஆர்சிபி?

இறுதிக்குள் நுழையுமா ஆர்சிபி?

ஆர்சிபி வெற்றி பெற்று ஆடுவதால் உத்வேகம் அந்த அணியிடமே அதிகமிருக்கும், மாறாக ராஜஸ்தான் தோற்றபிறகு வருவதால் கொஞ்சம் தயங்கியபடிதான் ஆடும். இதனால் ஆர்சிபிக்கே இறுதி வாய்ப்பு அதிகம் உள்ளது என்கின்றனர் ஐபிஎல் சார்ந்த நிபுணர்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஐபிஎல் 2022 இறுதிப் போட்டிக்கு முந்தைய நாக்-அவுட் போட்டியில் இன்று அகமதாபாத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது, யார் குஜராத்தை எதிர்கொள்வது என்பதற்கான போட்டி இது. ஆர்சிபி வெற்றி பெற்று ஆடுவதால் உத்வேகம் அந்த அணியிடமே அதிகமிருக்கும், மாறாக ராஜஸ்தான் தோற்றபிறகு வருவதால் கொஞ்சம் தயங்கியபடிதான் ஆடும். இதனால் ஆர்சிபிக்கே இறுதி வாய்ப்பு அதிகம் உள்ளது என்கின்றனர் ஐபிஎல் சார்ந்த நிபுணர்கள்.

ஜாஸ் பட்லர் ஆர்சிபிக்கு பெரிய டேஞ்சர் மேன் என்றாலும் சஞ்சு சாம்சன் ஒரு அதிரடி வீரர் என்றாலும் அஸ்வின் திடீரென பேட்டிங்கில் அடித்தாலும் அடிப்பார் என்றாலும், தேவ்தத் படிக்கல், ஷிம்ரன் ஹெட்மையார் போன்றோர் இருந்தாலும் ராஜஸ்தான் அணியில் நாக் அவுட் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான ஏதோ ஒன்று இல்லை என்றே தோன்றுகிறது. செஹல், அஸ்வின், ட்ரெண்ட் போல்ட் அசத்தலாக வீசினாலும் பிரசித் கிருஷ்ணா அன்று கடைசி ஓவரில் முதல் 3 பந்தில் 3 சிக்சர்களை டேவிட் மில்லருக்கு கொடுத்து தோற்கச் செய்ததால் அவர் கொஞ்சம் பயந்தபடிதான் இந்தப் போட்டியில் வீசுவார்.

ஆபெட் மெக்காய் எப்போது வேண்டுமானாலும் அடி வாங்கலாம். ஆர்சிபி அணி புத்துணர்வு பெற்ற அணியாகத் திகழ்கிறது, விராட் கோலி எப்போது வேண்டுமானலும் வெடித்துக் கிளம்புவார் என்ற நிலையில்தான் ஆடி வருகிறார், டுபிளெசிஸ், புதிய ஹீரோ ரஜத் படிதார். எப்போதும் தினேஷ் கார்த்த்திக்கின் பினிஷிங், பவுலிங்கில் ஹர்ஷல் படேலின் மிடில் ஓவர்கள், ஜோஷ் ஹேசில்வுட்டின் இறுதி ஓவர்கள் மற்றும் சிராஜின் விக்கெட் எடுக்கும் திறன், வனிந்து ஹசர்ங்காவின் மிடில் ஓவர்கள் ஆகியவற்றினால் ஆர்சிபி அணி ஒரு நல்ல நிலையில் இருக்கிறது.

சஞ்சு சாம்சனுக்கு பெரிய அச்சுறுத்தல் வனிந்து ஹசரங்காதான், ஏனெனில் சஞ்சுவை ஹசரங்கா 6 டி20 இன்னிங்ஸ்களில் 5 முறை வீழ்த்தியுள்ளார். சிராஜும் இருமுறை சாம்சனை வீழ்த்தியுள்ளார்.

டி20-யில் செஹல் கார்த்திக்கை 3 முறை வீழ்த்தியுள்ளார், எனவே இன்று அவரிடம் கொடுத்துப்பார்க்கலாம் என்று நினைத்தால் அது நிச்சயம் பின்னடைவையே ஏற்படுத்தும், ஏனெனில் தினேஷ் கார்த்திக் இதையெல்லாம் ஒர்க் அவுட் செய்திருப்பார். இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ஸ்பின்னர்கள் 38 விக்கெட்டுகளை வீழ்த்த ஆர்சிபி ஸ்பின்னர்கள் 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர், எனவே இது ஸ்பின்னர்களுக்கான மேட்ச் ஆக இருக்கலாம்.

மொடீரா ஸ்டேடியத்தில் 2021 முதல் இரண்டாவது பேட் செய்பவர்கள் 11 முறை வென்றுள்ளனர். முதலில் பேட் செய்பவர்கள் 6 முறை வென்றுள்ளனர்.

ஆர்சிபி உத்தேச லெவன்: டுபிளெசிஸ், விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், ஷாபாஸ் அகமட், தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.

ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: பட்லர், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், படிக்கல், ஹெட்மையர், ரியான் பராக், ஆர்.அஸ்வின், ட்ரெண்ட் போல்ட், யஜுவேந்திர செஹல், ஆபெட் மெக்காய், பிரசித் கிருஷ்ணா.

First published:

Tags: IPL 2022, Rajasthan Royals, RCB